Thursday, September 17, 2020

நெல்லை சுற்றுலா 11

 நெல்லை சுற்றுலா 11

அருவியில் நீராடிய திருப்தியுடன் காலை அம்பா சமுத்திரத்தில் சாப்பிட்ட டிபனுக்கு பிறகு எதுவும் சாப்பிடவில்லை என வயிறு நினைவுபடுத்துகிறது.ஆனால் எங்கெங்கு நோக்கினும் அசைவ மீன் பதார்த்தங்கள் ..சைவ ஓட்டலை தேடி ஒரு சுமார் ஓட்டலில் எதோ கொறித்து  விடுதிக்கு வந்து ஓய்வெடுக்கிறோம்..மீண்டும் மாலையில் மற்ற அருவிகளின் பார்வைக்கு ஒரு ஆட்டோவில் பேரம் பேசி 300/- க்கு சுற்றிக்காட்ட அழைத்து போகிறார்..

 குற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன.

பேரருவி

 - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

சிற்றருவி- இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள்அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பதற்கு தடைக்காலம் அவ்வப்போது பிறப்பிக்கப்படும். தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க இரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்) - இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு. தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அருவி செல்லும் பகுதி தோட்டக்கலைத்துறையினரால் இயற்கைப் பூங்காவாக உருவாக்கப்பட்டு பொதுமக்கள் சிறுவர் பொழுது போக்கு இடமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு தோட்டக்கலைத் துறையினரால் பூஞ்செடிகளும், மரக் கன்றுகளும் விற்கப்படுகின்றன.

புலியருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. சிறுவர்கள் குளிக்க புலி அருவி மிகவும் பாதுகாப்பானது.

பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.

பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது. இது ஆற்றின் தொடக்கமே ஆனாலும் மக்களால் அருவி என்றே அழைக்கப்படுகிறது.தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

10. கண்ணுப்புளி மெட்டு - இது செங்கோட்டை தாலுகா அலுவலகத்திலிருந்து மேற்கு திசையில் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள குண்டாறு நீர் தேக்கத்தின் மேலமைந்துள்ளது.

ஆட்டோக்காரர் இதை எல்லாம் சொல்லிட்டு இத்தனையும் சுத்திபார்க்க 1000/- ஆகும்  நீங்க தர்ற 300/-க்கு ஐந்தருவி,புலி அருவி இரண்டிலும் குளிக்கவிட்டு அழைத்துவரவே 3 மணி நேரம் ஆகிடும்கிறார்..என்ன செய்யறது? ஏறிட்டமேன்னு முதலில் ஐந்தருவியில் நீராடிவிட்டு ஈர டிரஸ்ஸோட புலி அருவியிலயும் குளித்துவிட்டு மீண்டும் பேரருவி அருகில் இறங்கி....

ஆண்டில் சில மாதங்கள்தான் இந்த அருவியில் குளிக்க இயலும். மற்ற நேரங்களில் நீர்வரத்து இருக்காது, அல்லது, அதிவேகமாக இருக்கும், குளிக்க அனுமதி வழங்கப்படாது. ஆகவே, குற்றாலம் செல்கிறவர்கள் அங்குள்ள முக்கிய அருவிகளில் குளிக்க அனுமதி உண்டா என்று கேட்டுத் தெரிந்துகொண்டு சென்றால் ஏமாற்றத்தைக் குறைக்கலாம்.

பேரருவியின் எல்லையை நெருங்கும்போதே குளிர்ச்சியான நீர் நம்முடைய கால்களை வருடிக் குளியலுக்குத் தயார் செய்துவிடுகிறது. இன்னும் அருகில் செல்லச்செல்ல அங்கே குளித்துக்கொண்டிருந்தவர்கள்மீது பட்டுத் தெறிக்கும் நீர் நம்மை நனைத்து ஆவலைப் பெருக்குகிறது.

தயங்கித் தயங்கி அருவியை நெருங்குகிறோம், ஏதோ ஒரு கணத்தில் சடாரென்று தண்ணீர் நம் தலையில் விழ, கொண்டாட்டம் தொடங்குகிறது. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் முட்டி மோதி உள்ளே நுழைந்து முழுக்க நனைந்துவிடுகிறோம்.

தடதடவென்று நம்முடைய தலையிலும் முதுகிலும் அருவி நீர் தாளம் தட்டுகிறது. கண்கள் தெளிவற்று நீரை மட்டுமே காண்கின்றன, சுற்றியிருக்கிற யாரும் தெரிவதில்லை, நிமிர்ந்துபார்த்தால் தண்ணீர் எங்கிருந்து கொட்டுகிறது என்பதும் தெரிவதில்லை, காதுக்குள் பெரும் ஓசை ஆனந்தமாக இருக்கிறது, அங்குமிங்கும் திரும்பித் தண்ணீரைக் கையிலும் காலிலும் முதுகிலும் வாங்குகிறோம்; யாரோ படபடவென்று அடிப்பதுபோலவும், இதமாக முதுகுபிடித்துவிடுவதுபோலவும் கலவை உணர்ச்சிகள்.


குற்றால நீர் மூலிகைகள் நிறைந்தது என்பார்கள்; இங்கு குளித்தால் பல உடல், மன நோய்கள் குணமாகும் என்கிற நம்பிக்கைகூட உண்டு. ஆனால் இதையெல்லாம் அறியாமல் கொண்டாட்டத்துக்காகவே குளிக்கவருகிறவர்களும் மிகுதி.

ஆரம்பத்தில் அருவியில் குளிக்கும்போது மூச்சுத்திணறுகிறது; அடிபட்டுவிடுமோ, கழுத்து சுளுக்கிக்கொண்டுவிடுமோ என்றெல்லாம் ஐயம் வருகிறது; சட்டென்று இதிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்றுகூடத் தோன்றுகிறது; ஆனால் கொஞ்சம்கொஞ்சமாக அந்த இயற்கைச்சூழலுடன் ஒன்றிப்போகிறோம்; இன்னும் இன்னும் உள்ளே சென்று குளிக்க நினைக்கிறோம்; கூட்டம் அதிகரித்து யாராவது நம்மை வெளியே தள்ளினால்தான் உண்டு என்கிற அளவுக்கு ஆசை தீரக் குளிக்கிறோம்.

முன்பெல்லாம் குற்றாலத்தில் குளிக்கிறவர்கள் சோப்புப் போடுவது, ஷாம்பூ போடுவது, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்று நீரை மாசுபடுத்திக்கொண்டிருந்தார்கள். இப்போது அதையெல்லாம் பெருமளவு கட்டுப்படுத்திவிட்டார்கள்; ஆகவே இயற்கையான தண்ணீரில் நன்கு நெடுநேரம் குளிக்கமுடிகிறது.

ஆனால் ஒன்று, குளியலுக்கு ஏற்ற மாதங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றாலத்தில் ஏராளமான கூட்டமிருக்கும்; சுற்றியுள்ள எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் கூட்டமாக வந்து குவிந்திருப்பார்கள். ஆகவே பேரருவிபோன்ற முக்கிய அருவிகளில் குளிப்பதற்கு முட்டிமோதவேண்டியிருக்கலாம், அதைக் கவனத்தில் கொண்டு உங்களுடைய பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்

   மழை தூறலுக்கு இடையே ஒரே நாளில் பல முறை நீராடியும் ஜலதோஷ அறிகுறியே இல்லை என வியந்தபடி அருகில் உள்ள *குற்றாலநாதரை தரிசிக்க கோயிலினுள் நுழைகிறோம்..

படங்கள் 

அருவி காட்சிகள்...

    தொடரும்...







No comments:

Post a Comment