டைவர்ஸ்
சிறுகதை
மிஸ்டர் சீனு இந்தா இதுல ஒரு கையெழுத்துப் போடு
என்று ஒரு டைப் பண்ணப்பட்ட பேப்பரை தன் கணவன் முன்னால் வைத்தாள் அபர்ணா அவன் முகத்தில் வழக்கமான அதே அமைதியான முறுவல் கையெழுத்துப் போட்டு அவள் முன்னால் நீட்டினான்
என்ன ஒண்ணுமே பேச மாட்டேங்குற?
அதற்கும் அமைதி காத்தான்
இது என்ன தெரியுமா?
தெரியும்
விவாகரத்துக்கு மியூச்சுவல் கன்சண்ட்
தெரியும்
உனக்கு சம்மதமா?
ம்
நேற்றுதான் வக்கீல பார்த்தேன் இந்த டாக்குமெண்ட் கொடுத்தா ஒரு வருஷத்துல விவாகரத்து ஆயிடுமாம்
சரி
நேற்று அவள் அந்த விவாகரத்து ஸ்பெஷலிஸ்ட் வக்கீல் மாருதியை பார்த்தபோது அவர் இவளை கூர்மையாக தனது கண்ணாடியின் மேல் பக்கம் இருந்து பார்த்தார் கண்ணாடி மூக்கு வரை இறங்கி இருந்தது
நிச்சயமாக விவாகரத்துன்னு முடிவு பண்ணிட்டீங்களா?
ஆமாம் சார்
கேக்கறேன்னு தப்பா நினைச்சுகாதீங்க அவரு குடிப்பாரா?
இல்ல சார் நிச்சயமா வீட்ல இல்ல
வேற சகவாசங்கள்?
எனக்கு தெரிஞ்சு இல்லை
உங்களை எப்பவாது சண்டை போட்டு அடித்து இருக்கிறாரா?
இல்லை மாறாக நான் தான் அவரை….
வேணாம் வேணாம் அது இப்ப வேண்டாம் அவர் தேவைப்பட்ட போது அதை பயன்படுத்திக்குவாரு
உங்களுக்கு குழந்தைகள்?
இல்ல
எப்ப கல்யாணம் ஆச்சு?
அஞ்சு வருஷம் ஆகுது
கல்யாணமாகி அஞ்சு வருஷம் ஆச்சு ஏன் குழந்தை இல்லைன்னு கேட்டார் அந்த லாயர் அவருக்கு அந்த சந்தேகம் அதை வச்சு நோட்டீஸ் அனுப்பலாமான்னு கேட்டார் நான் வேணாம்னு சொல்லிட்டேன்
அதற்கும் ஒரு அர்த்தமுள்ள புன்முறுவல் தான்
சரி வேற எந்த காரணமும் இல்லாமலே மியூச்சுவல் கன்ஸன்ட் அப்ளை பண்ணலாம்னு சொன்னாரா?
என்று கொஞ்சம் வருத்தத்துடன் கேட்டான் சீனு
ஆமாம் எனக்கும் வேற வழி தெரியல
அவன் கொடுத்த கையெழுத்திட்ட பேப்பரை மடித்து பையில் வைத்துக் கொண்டு மறுபடியும் வக்கீல் மாருதியை பார்க்க புறப்பட்டாள் மாருதி பேப்பரை வாங்கி வைத்துக்கொண்டு
சரிம்மா நான் file பண்ணிடறேன் கோர்ட்டுக்கு ரெண்டு பேரும் வரணும் அப்புறமா JUDGE முடிவு முடிவு எடுப்பாரோ அட்வைஸ் பண்ணுவாரோ உங்கள் அதிர்ஷ்டம்
விடை பெற்றுக்கொண்டு தன் உயிர் தோழி சரண்யாவை பார்க்க போனாள் அவள் வீட்டிற்குள் நுழையும் போதே
உன்ன போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே என் தலையெழுத்து
என்று கோபமாக சொல்லிவிட்டு சாப்பாட்டுத் தட்டை விசிறி அடித்துவிட்டு வேகமாகப் புறப்பட்டு வெளியே வந்தான் அவளுடைய கணவன் சாப்பாட்டு கையை உதறிக் கொண்டு வெளியே வந்தான்
அவன் எதிரில் அபர்ணா
சரண்யா இருக்காளா?
மடத்தனமான கேள்வி
உள்ளே இருக்கு போங்க....மூதேவி!
உங்களை இல்லிங்க
பரவாயில்லை என சிரித்தாள்
அவன் போக
சரண்யா ஒரு மூலையில் கோபமும் ஆத்திரமும் கொந்தளிக்க பெருமூச்சு வாங்கிகொண்டு இருந்தாள்
வா அபர்ணா
ஐயம் சாரி
இது தினசரி வாடிக்கை அஞ்சு நிமிடத்தில் தெரு முக்கிலே ஒரு தம்மடிச்சிட்டு வந்துடும்
ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு உங்க தாம்பத்தியம்
காபி சாப்பிடுறியா?
கொடேன்
காபி போட உள்ளே போக அபர்ணாவும் பின்தொடர்ந்தாள்
டிகாக்ஷன் எறங்கட்டும் என்ன விஷயம் இந்த நேரத்துல
எனக்கு….
என தயக்கத்துடன் ஆரம்பித்த அபர்ணா
உங்க மாடி போர்ஷன் காலியா இருக்குன்னு ஒரு தடவை சொன்னியே?
ஆமாம் இப்பவும் இருக்கு
அது எனக்கு வேணும் of course வாடகை கொடுத்துடறேன்
என்ன ஆச்சு?
நான் தனியா வரப் போறேன்
அப்படின்னா ?
டைவர்ஸ்
ஏய் என்ன சொல்ற? நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா தானே இருக்கீங்க?
அவர் இருக்கார் நான் இல்ல!
வாட் டூ யூ மீன்?
ரெண்டு பேரும் Mutual கன்சண்ட்டிலே பிரியப் போறோம்
என்னடி ப்ராப்ளம்? இவ்வளவு ப்ராப்ளம்லே சண்டை போட்டுக்கிட்டு நாங்களே ஒண்ணா இருக்கிறோம்!
அதான் பிரச்சனையே இந்த ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?
மூக்கை உரிஞ்சினாள்
ஒரு ARGUMENT உண்டா சண்டை உண்டா?
இது ஒரு பிரச்சனையா?
இல்லையா பின்னே? எது கேட்டாலும் ஓகேதான்! எந்த சண்டை போட வந்தாலும் ஒரு அமைதி புன்முறுவல் தான் சரியான அசமஞ்சம்
கைக்குட்டையை எடுத்து சிந்திக் கொண்டாள்
நான் அழுதாலும் கமல் மாதிரி புன்னகை அவ்வளவுதான் செவுத்துகிட்டமோதினா கூட நம்ம மண்டையில ரத்தமா வது வரும் இது ரப்பர் முட்டினா மோதினா நமக்கு ஏதாவது வலிச்சாதானே
ஏய் ஏய் ஸ்டாப்பிட் இந்த மாதிரி ஒரு கணவன் கிடைக்க யூ ஆர் ரியல் லக்கி
என்ன அதிர்ஷ்டம்! ஒரு FACTORY எடுத்துக்க யூனியன் எதைக் கேட்டாலும் கேக்குறதுக்கு முன்னாடியே வாங்கிக் கொடுக்கிற மேனேஜ்மென்ட் இருந்தா யூனியன் ஆட்களுக்கு என்ன வேலை? போராடணும் ஸ்ட்ரைக் பண்ணும் நாலு சோடாபாட்டில் உடையணும் அப்புறம் கேட்கிற போனஸ் கிடைச்சா தான் சுவாரஸ்யமே
ஐ மிஸ் ஆல் திஸ் திரில்ஸ்
அதனால எனக்கு நானே சமயத்தில் பேசிக்குவேன் அவன் முன்னால இருக்கிறதா கற்பனை பண்ணி
உன் கூட இன்னிக்கு நான் சண்டை போட போறேன் நீ என்ன திட்டினா அடிச்சா சும்மா இருப்பேன்னு நினைக்காதே!
திருப்பி அடிப்பேன்! நீ எனக்கு நெக்லஸ் வாங்கித் தரலைன்னா ரெண்டு நாள் சாப்பிட மாட்டேன்!
தற்கொலை பண்ணிப்பேன்!! இப்படியெல்லாம் மோனோ ஆக்டிங் பண்ணி பண்ணி அலுத்துப் போச்சு! நான் முடிவு பண்ணிட்டேன் ஒரேடியா முறிச்சிக்கிடறதுன்னு அது எனக்கு பாதி சொத்து தரலைன்னா கேஸ் போடப் போறேன்னு சொல்ல ஆசைப்பட்டேன் அதுக்கும் அது சான்ஸ் தரலை HE IS AN INCORGIBLE தத்தி
சரண்யாவிற்கு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை
சரண் சரண் டிபன் ரெடியா டியர்?
எனக் கேட்டுக் கொண்டே அவள் கணவன் அசடு வழிய வந்தான்
சுவற்று கீரையை வழித்து போட தயாரானாள் சரண்யா
பொறாமையுடன் விடைபெற்றாள் அபர்ணா!
No comments:
Post a Comment