Saturday, September 26, 2020

நெல்லை சுற்றுலா 18

 நெல்லை சுற்றுலா18 

குற்றாலம் ,தென்காசி,செங்கோட்டை சுற்றிய திருப்தியுடன் நாளை லாட்ஜ் காலிசெய்து அடுத்து எங்கு செல்வது என யோஜனையில் ஆழ்கிறார். இரண்டு நாள் முன்பு இவர் வாட்சப் மாட்ரிமோனி குழு மூலம் அறிமுகமான கடலூர் கோயில் பட்டர் ஒருவர் தனக்கு கைங்கர்யம் செய்ய கோயில் பார்த்து தரச்சொல்ல இவர் அதற்கு ஒரு குழு ஆரம்பிக்க அவருக்கும் இவருக்கும் ஏராளமான கோயில்களிலிருந்து பட்டர் தேவை என போன் வர அவர் தொல்லை தாங்காமல்  போனை அனைத்து வைக்க இவர் எப்படி பெண் வரனே கிடைக்காமல் பையன்களை வைத்து மாட்ரிமோனி நடத்தற மாதிரி பட்டர் இல்லாமல் கோயிலுக்கு பட்டர் தேவைன்னு குழு நடத்தி கோயில் தர்ம கர்த்தாக்களுக்கு பதில் சொல்லிண்டு இருந்தார். 

அந்த வகையில் ஒரு போன்.

 மறுமுனையில் பேசியவர் சுந்தர பாண்டியபுரம் பெருமாள் கோயில் என அறிமுகம் செய்து கொள்ள இவர் தான் குற்றாலத்தில் இருப்பதாகவும் மறுநாள் சங்கரன் கோயில் செல்ல இருப்பதாகவும் சொல்ல அவர் தங்கள் ஊர் கோயிலில் எதோ ஆராதனம் நடப்பதாகவும் வந்து கோயிலைப்பார்த்து ததியாராதனை சாப்பிட அழைக்கிறார். . இவர் ரோஜா படத்தில் சின்னச்சின்ன ஆசை  படம் எடுத்த அதே ஊரா என கேட்க அவர் ஆமாம் என சொல்ல இவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..(ததியாராதனை,அழகான  ஊர் )எப்படி வர வேண்டும் என வழி கேட்டுக்கொள்கிறார். 

மறுநாள் ரூம் காலி செய்கிறோம்.

.(ப்ரஸ்டிஜ்காரன் சொன்ன தினம் சூடான இலவச ப்ரெக்பாஸ்ட் பற்றி கேட்தற்கு இரண்டு டோக்கன் தந்து ஓட்டல் வெளியே டீக்கடையில் வாங்கிக்கொள்ள சொல்ல அங்கே முட்டை தோசை பார்த்து டோக்கனை அவனிடமே திருப்பி தந்து விட்டோம்..மத்யானம் ததியாலாதனை சாப்பிட வயிற்றில் இடம் வைத்து காலை டிபன் லைட்டாக தென்காசியில் சாப்பிட்டு ஒரு ஆட்டோ 

ஏற்பாடு செய்து பத்து கிமீ அழகான ஏரி குளங்கள் வழியே சுந்தர பாண்டிய புரம் வருகிறோம். (மனதில் ரோஜா டைட்டில் கார்டில் காட்டப்படும் பசுமையான வயல்களை கற்பனை செய்க)..

கோயில் உள்ளே எல்லோரும் வேதம் படித்துக்கொண்டு இருக்க போன் செய்தவர் உருவத்தை கற்பனை செய்தபடி கோயில் வாசலில் லக்கேஜை வைத்து விட்டு அரவிந்தசாமியும்,மதுபாலாவும் நடந்த தெருவழியே நடக்கிறோம்.

இனி இவர் பேசுவார்..

விகடனில் படித்தது நினைவில் வருகிறது. 

சுந்தர பாண்டிய புரத்தை நெல்லை மாவட்டத்தில் `கோடம்பாக்கம்' என்றே அழைப்பர். இங்கு படப்பிடிப்பு நடக்காத நாள்களே இருக்காது.

சுந்தரபாண்டிய புரம். பெயருக்கேற்றார்போலவே அழகும் பசுமையும் நிறைந்த கிராமம். ஏ.ஆர்.ரஹ்மானை அகில உலகமும் அறியவைத்த சின்னச் சின்ன ஆசை...' பாடலுக்கு மதுபாலா ஆட்டம்போட்டது இங்குதான். சுந்தரபாண்டி புரத்தின் அத்தனை அழகையும் `ரோஜா' படத்தில் தெளிவாகப் பதித்திருப்பார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன். தென்காசியிலிருந்து 21 கி.மீ தொலைவில் இயற்கை அன்னையின் மடியில் தவழும் அழகிய கிராமம் இது. 

இந்தக் கிராமத்து மக்களின் முக்கியத் தொழில், விவசாயம். தவிர, மீன்பிடித்தல், மண்பாண்டம் செய்வது, கூடை முனைதல், தயிர் கடைதல் போன்ற எளிய தொழில்களும் செய்கின்றனர். இயற்கை அழகைப் பாழாக்கும் எந்தத் தொழிலுக்கும் இந்த மண்ணில் இடமில்லை. சுந்தரபாண்டிய புரத்திலிருந்து கீழப்புலியூர் கிராமத்துக்குச் செல்லும் வழியில்தான் `அந்நியன்' படத்தில் இடம்பெற்ற `ரண்டக்க ரண்டக்க...' பாடல் படமாக்கப்பட்டது.

இங்கே உள்ள சிறிய குன்றில் தமிழக சூப்பர் ஸ்டார்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. `ரண்டக்க...' பாடல் இங்கே எடுக்கப்பட்ட பிறகு, இந்தக் குன்றுக்கு `அந்நியன் ராக்' என்ற செல்லப்பெயரும் வந்துவிட்டது. சுந்தரபாண்டிய புரத்துக்குச் செல்பவர்கள் இந்தக் குன்றில் புகைப்படம் எடுத்து மகிழ்வார்கள். இங்கு உள்ள சூரியகாந்தி தோட்டங்களும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. சுந்தரபாண்டிய புரத்தில் உள்ள அக்ரஹாரம் மிகவும் பிரபலம். `ரண்டக்க ரண்டக்க...' பாடல் இங்கேயும் எடுக்கப்பட்டது.

கலர் கலராக திரைப்படத்தில் பார்த்த வண்ணம் இல்லை எனினும் அமைதியான அக்ரஹாரமும் அதை ஒட்டிய ஏரி அளவிற்கு மிகப்பெரிய  குளமும்(கீழே வீடியோ காண்க)...கொள்ளை அழகு..

ஆனாலும் கொளுத்தும் வெயிலில் அங்கும் இங்கும் நடந்து போன் செய்தவரை விஜாரிக்கிறோம்..அவர் பாராயணத்தில் இருப்பது அறிந்து அங்குள்ள ஆசார சூழ்நிலையை கருத்தில் கொண்டு என் பேண்ட் ஷர்ட் உறுத்தலாக இருக்கும் என பஞ்ச கச்ச வேஷ்டிக்கு மாறி திருமண் ஶ்ரீசூர்ணம் தரித்து பக்தி பனுவலாக ஒரு ஓரத்தில் அமர்கிறேன். பாராயணம் தொடர்ந்து நீண்டதால் மீண்டும் வெளியே வந்து அடுத்த ரவுண்ட்  ஊரின் மூன்று தெருக்களையும் வலம் வருகிறோம். ஒரு வழியாக அக்ரஹாரத்து மாமி விஜாரித்து அவரிடம் கொண்டு சென்று அவருக்கு அடையாளம் தெரிந்து ராஐ கோபால ஸ்வாமி தரிசனம் செய்து வைக்கிறார்.. ஒரு தொன்னையில் சூடாக சிறிது பொங்கல் ஒரு வாழைப்பழம்...

பக்கத்தில் ததியாராதனை நடக்கும் இடத்திற்கும் அழைக்கிறார்.அந்த ஊர் மடத்து குருஜி ஆராதனை என தெரிகிறது...அக்ரஹாரத்து மனுஷ்யர்கள் அனைவரும் அங்கு ஆஜர். யாரையும் தெரியாத நிலையில் பொழுது போக ஊர் பற்றி விஜாரித்து கொள்கிறேன். முதலில் இரண்டு பிராமணர்களை (மட்டும்) உட்காரவைத்து இலை போட்டு உபசார மந்திரங்கள் சொல்லி அவர்கள் சாப்பிட்டு ஃபார்மாலிட்டிகள் முடிந்து மற்றவர்களுக்கு இலை போட 3.00 மணிக்கு சாப்பிட்டு விடை பெறுகிறோம்😜..

           தொடர்வது சங்கரன் கோயில்..



No comments:

Post a Comment