Sunday, September 27, 2020

முக்தி நாத் பகுதி 2

 முக்தி நாத் ஓர் முரட்டுப்பயணம் பகுதி 2

அன்று இரவே ஷட்டகரிடம் பேசுகிறேன்..அவர்களும் முக்திநாத் செல்ல விரும்பியதால் அவர்களும் வருவதாய் இருந்தால் இன்னும் பணத்தை குறைக்கலாமென்று. முதலில் திட்டவட்டமாக மறுத்தவர்கள் மனம் மாறி சம்மதிக்கின்றனர். ..இதற்கிடையில் அக்கா ஏற்கனவே போயிருந்தாலும் திரும்பவும் தாங்களும் வருவதாக வும் தாங்கள் ஏமாந்த 44000/-ம் போக மீதி பணத்திற்கு அவர் அழைத்துப்போவதாக ஒத்துக்கொண்டதால் எங்களை மொத்தபணம் குறித்து பேசுமாறும்  ஆறு பேருக்கு டிக்கட் ஏற்பாடு செய்யுமாறும் சொல்கிறாள்..அவரை மறுநாள் வரச்சொல்லி 35000/-வீதம் ஆறு பேருக்கு 2,10,000/- போகும்போது ஃபர்ஸ்ட் க்ளாஸ் என்று கன்டிஷனுக்கெல்லாம் பாவம் (?) தலையாட்டி மறுபடியும் மறுநாள் டிக்கட்டுடன் வருவதாக சொல்லிபெயர் எழுதி வாங்கிக்கொண்டு செல்கிறார்..

மறுநாள் ஆறு பேர் சென்னை முதல் கோரக்பூர் 29 செல்ல  செல்ல ஃப்ரஸ்ட் க்ளாஸ் டிக்கட் தந்து 28,000/-(மொத்தம் 45,000) வாங்கி செல்கிறார்..

மறுநாள் அக்கா திடீரென தான் வருவது சந்தேகம்,வருகிறேன் என மாறி மாறி சொல்லி இறுதியாக வரவில்லை எனவும் தங்கள் டிக்கட்டை கான்சல் செய்யவும் சொல்கிறாள்..நான் தயங்கியபடி இதை அவரிடம் சொல்ல அதற்கென்ன கான்சல் செய்து விடலாம் என்கிறார்..நான் டிக்கட்டை எடுத்துக்கொண்டு க்ரோம்பேட் பஸ்ஸடாண்டில் சந்தித்து நாலு பேருக்கு 36000 வீதம் 144000/- என பேசி டிக்கட்டை தருகிறேன். 

அன்றுமாலையே டிக்கட் கான்சல் செய்து புது டிக்கட்  போட்டோவை வாட்சப்பில் அனுப்பிவிட்டு மறுநாள் டிக்கட்டை தந்து விட்டு நேபாள் வேன் ஏற்பாடு செய்ய கூடுதல் 40, 000வேண்டுமென வாங்கிச் செல்கிறார்…

அக்டோபர் 26

மறுநாள் அவரிடமிருந்து கீழ்க்கண்ட மெசேஜ் வருகிறது.,.

Dear Madhavan Sir,

Kindly note, due to bad weather condition flight for Jomsom sector will not operate in the 1st and 2nd week of November. Hence, it is operating on 3rd week of November and seats are available on 25 Nov for PKR / JOM and on 26 Nov for JOM / PKR. 

Kindly advise if we hold the seats on said dates.

Regards,

Anju 

SMS பார்த்து ஷாக் ஆகி அவரை தொடர்பு கொண்டதில் போன் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. 

இதற்கிடையில் ஷட்டகர் 28 ந்தேதி திருச்சியிலிருந்து சென்னை வர டிக்கட் ஏற்பாடு செய்துவிட்டதாக மெசேஜ் வர ,யார் இந்த அஞ்சு,இதை ஏன் எனக்கு அனுப்பினார்? ஃப்ளைட் இல்லாமல் எப்படி அழைத்து செல்வார்? மைத்துனி,ஷட்டகருக்கு என்ன பதில் சொல்வது ? டிலே ஆனால் நவம்பரில் இன்னும் குளிர் வந்து மோசமாக ஆகுமே? அப்ப மட்டும் ஃப்ளைட் போகுமா என பல்வேறு கவலைகள் சூழ..கூகுளில் இது குறித்து தேடுவதும் அவருக்கு போன் போடுவதுமாக என் நேரம் கழிகிறது….

        திகில் தொடரும்

No comments:

Post a Comment