108 திவ்யதேசங்கள் - பதிவு 7
அருள்மிகு அரசாப விமோசன பெருமாள் திருக்கோவில் :- திருக்கண்டியூர்
மூலவர்: அரசாபவிமோசன பெருமாள்
தாயார்: கமலவல்லி நாச்சியார்
உற்சவர்: கமலநாதன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: கமலாக்ருதி விமானம்
தீர்த்தம்: கபால மோட்ச புஷ்கரணி
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ அரன்சாபந்தீர்த்த ஸ்வாமிநே நமஹ.
இருப்பிடம்: திருக்கண்டியூர், தமிழ்நாடு
🌺🌺 தல வரலாறு:-
பரந்தாமனான திருமாலை தனது காலால் எட்டி உதைத்த பிருங்கி முனிவர் தனது தவற்றுக்கு மனமிறங்கி விமோசனம் பெற பல தலங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.
அப்போது இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த அசிதர் என்ற முனிவர், பிரம்மாவின் தலையை கிள்ளி எடுத்த போது பிரம்மஹத்தி தோஷம் பிடித்த சிவபெருமானின் சாபத்தை நீக்க வழி செய்த பெருமாளை நோக்கி தவமியற்றினால் சாபவிமோசனம் பெறலாம் என்று கூறினார்.
அதன் பொருட்டு பிருங்கி முனிவர் இத்தலத்திலேயே பல காலம் தங்கி தவமியற்றினார். அதற்கு மனமிறங்கிய இறைவன் முனிவருக்கு காட்சி தந்து அருளினார்.
"சிவபிரானை" வட மொழியில் "அரண்" என்று கூறுவதுண்டு. அரணுக்கு சாபவிமோசனம் அளித்த பெருமாள் என்பதால் இத்தல இறைவனுக்கு "அரசாப சாபவிமோசன பெருமாள்" என்பது திருநாமம்.
🌺🌺 சிறப்புகள் :-
அரணான சிவபெருமானுக்கு சாபம் தீர்த்த பெருமாள் குடிகொண்டுள்ள திவ்யதேசம்.
திருமகள் தாயார் கமலவல்லி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.
பிரம்மாண்ட புராணத்தில் இத்திருக்கோவில் பற்றி கூறப்பட்டுள்ள திவ்யதேசம்.
திருமங்கையாழ்வார் 1 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.
🌺🌺 பாசுரம் :-
பிண்டியார்மண்டையேந்திப் பிறர்மனைதிரிதந்துண்ணும்
கண்டியூர்அரங்கம்மெய்யம் கச்சிபேர்மலையென்று
மண்டினார்*உய்யலல்லால் மற்றையார்க்குஉய்யலாமே?
- திருமங்கையாழ்வார்
🌺 🌺வழித்தடம் :-
தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் சுமார் 10 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அரசாப விமோசன பெருமாள் திருவடிகளே சரணம். அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருக்கோவிலை நாளைய பதிவில் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:".
No comments:
Post a Comment