நெல்லை சுற்றுலா🙏🏻🙏🏻
காலையில் நெல்லையில் கிளம்பி இரவுக்குள் குற்றாலம் போக வேண்டுமென்பது இவர் திட்டம். எந்த முன்னேற்பாடும்இல்லாம புது ஊர்ல கெடச்ச ரூம்ல தங்கற வழக்கத்திற்கு மாறாக இந்த முறை குற்றாலத்தில் ரூம் புக் பண்ணியிருக்கார். ஆனா அதுக்குப்பின்னால மொத்தமா ஏமாந்த ஒரு கதை இருக்கு. ...
😁😁😁😁😁😁😁
2018 அக்டோபர் ...இவருக் கு ஒரு போன் வரது..பேசின பொண்ணு புக் எக்ஸிபிஷன்ல இவரோட கூப்பனுக்கு 25,000 மதிப்புள்ள கிஃப்ட் ப்ரைஸ் விழுந்திருக்கு. ஒய்ஃபோட வந்து ஒரு மீட்டிங்ல வாங கிக்க சொல்லி..இது நிச்சயம் எதோ MLM scheme வலை விரிப்பாங்க. ஏமாத்துதான் இருந்தாலும் பொழுது போக போய் அட்டன்ட் செய்யலாம் வா னு கூப்பிடறார். நான் ஆனமட்டும் மாட்டேன்னு சொன்னாலும் நம்பள மீறி ஏமாத்த முடியாதுன்னு கம்பல் பண்ணி வேளச்சேரி கூப்ட்டுண்டு போறார். அந்த பொண்ணு போன் பண்ணின்டே இருக்கு..ஒரு வழியா சாயந்தரம் 5.30 க்கு சொன்ன அட்ரஸுக்கு போறோம். ஒரு குறுகலான பில்டிங்ல மூணாவது மாடி. பிரஸ்டிஜ் வெகேஷன்னு போட்டிருக்கு. நிறைய சேர் டேபிள் போட்டு ஜோடியா உக்காந்து இருக்கா...
ஒரு 25 வயசு பையன் வந்து உட்கார்ந்து இவருக்கு பிடிச்ச டூர் பத்தி பேச ஆரம்பிக்கறான். சிம்லா ஊட்டின்னு சொல்லி அங்கல்லாம் போயிருக்கீங்களான்னு கேக்கறான்
இவர் ரொம்ப பெருமையா இந்தியா ஃபுல்லா சுத்தியிருக்கோம்கறார். அவன் பள பளான்னு ஒரு புக்க விரிச்சி நிறைய ஓட்டல் ஃபோட்ட்டோலாம் காட்டி இந்த மாதிரி ஓட்டல்ல தங்கி இருக்கீங்களாங்கறான். அந்த வருஷம்தான் கேதார்நாத் போய் இடம்கிடைக்காம அலஞ்சி திண்டாடி தெரு பொறுக்கினது இவர் நெனவுக்குவந்து நிமிர்ந்து உட்காறரார்.
அது என்ன ஸ்கீம்னு இவர் கேட்ட உடனே இவங்க சொல்வாங்கன்னு ஒரு பொண்ண (35வயசு)உட்கார வச்சிட்டு அவன் எழுந்துக்கறான் ..ரெண்டு பேருமே ஒரு பேப்பர்ல ஸ்கீம் பத்தி எதோ கிறுக்கிண்டே பிட் போடறாங்க. ஒரு குறிப்பிட்ட தொகை கட்டினா அந்த மாதிரி ஹை டெக் ஓட்டல்ல ஆயுள் பூறா வருஷத்துக்கு 14 நாள் தங்கலாம். கார்த்தால டிபன் ஃப்ரீங்கறான்.
ஏற்கனவே இது போல ஸ்கீம் கேள்விப்பட்டு இருந்தாலும் இவருக்கு லேசா நப்பாசை.
எவ்வளவுன்னு கேக்கறார். உடனே அந்த ஸ்கீம் இவங்க சொல்வாங்கன்னு மூனாவது ஒரு பொண்ண (25வயசு)உட்கார வச்சுட்டு அந்த பொண்ணு எழுந்து போறா...
அதுக்குள்ள கிளாஸ்ல டீ வரது. அத சாப்டுண்டே ஸ்கீம் பத்தியும் தங்கற ஓட்டல் பத்தியும் பில்டப் கொடுக்க ஆரம்பிக்கறது..
நீஙக சொன்ன 25000/-ஃப்ரீ கிப்ட் என்ன்ன்னு இவர் கேட்க அதுவும் கோவா பேக்கேஜ்.
எல்லா இடத்திலும் வாடகை ஃ்ப்ரீ. ஆனா 5000-6000/- ஸ்டார் ஓட்டல்ல மெயின்டன்ன்ஸ் 900-2000 தந்தா எங்க ஸ்கீம்காராளுக்கு நாங்களே ரூம் புக் பண்ணி தரோம் னு சொல்றது.
ரூபா பத்தி கேட்டதும் just 1,00,000/- ஆயுசு பூரா வருஷத்துக்கு 14 நாள் ஃபைவ் ஸ்டார் ஓட்டல்னு பிட்டு மேல பிட்டு போடறது
கொஞ்சம் கொஞ்சமா இவர் மனசு கரையறது ...என் மனசும்தான். இவரோட ஊர் ஊரா ரூம் தேடி அலஞ்சதுக்கும் மூட்டை பூச்சி ரூம்ல தங்கினதுக்கும் விடிவுகாலம்னு ..
----------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment