Sunday, September 20, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 2

 🌺🌺 108 திவ்யதேசங்கள் - பதிவு 2 🌺🌺


🌺🌺 திருக்கோழி என்ற திருஉறையூர் :-

தாயார் பரமபதவாசல் சேவை தந்தருளும் ஒரே திவ்யதேசம் "திருக்கோழியூர் என்ற திருநரையூர்". 

மூலவர்: அழகிய மணவாளப் பெருமாள் 

தாயார்: கமலவல்லி, உரையூர் வல்லி, வாஸலக்ஷ்மி 

உற்சவர்: கமலவல்லி

கோலம்: நின்ற திருக்கோலம்

திசை: வடக்கு

தீர்த்தம்: கல்யாண தீர்த்தம், சூர்ய புஷ்கரணி

விமானம்: கல்யாண விமானம் 

ஸ்தலவிருக்ஷம்: புன்னை மரம் 

மங்களாசாசனம்: குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்

நாமாவளி : ஸ்ரீ வாஸலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீ அழகிய மணவாள ஸ்வாமிநே நம:

வழிக்காட்டி : திருச்சியிலிருந்து சுமார் 3 கீமீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்தில் மையன் கார்டு கேட் ஜங்ஷன் வழியாக சென்று இத்தலத்தை அடையலாம்.

🌺🌺 பாசுரம் :-


கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர், குன்றமன்ன*

பாழியந்தோளும் ஓர் நான்குடையர்பண்டு இவர்தம்மையும் கண்டறியோம்*

வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்மாகடல் போன்றுளர், கையில்வெய்ய*

ஆழியொன்றேந்தி ஒர் சங்கு பற்றி அச்சோ ஒரு வரழிகியவா


- திருமங்கையாழ்வார்


🌺🌺 தல வரலாறு :-

ரங்கநாதரின் பக்தனான நங்த சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி ரங்கநாதர் அனுப்பினார். 

ஒரு சமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, "கமலவல்லி' (கமலம்- தாமரை) என பெயரிட்டு வளர்த்தான். 

சோழ மன்னனின் மகளான கமலவல்லி, திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதார் சுவாமியை மணந்து கொள்ள வேண்டும் என வேண்டி கைவிடாமல் விரதம் மேற்கொண்டாள்.

பலபேர் கமலவல்லியை, விரதத்தைக் கைவிடுமாறு கூறினர். ஆனாலும், அவள் தன் விரதத்தைத் தொடர்ந்தாள்.

விரதம் எல்லை மீறிப் போக, கமலவல்லியை இனியும் சோதிக்கக் கூடாது என அரங்கநாதர் சுவாமி மனமிறங்கி அழகான திருக்கோலத்தில் உறையூர் வந்து கமலவல்லியை மணம் செய்து கொண்டதாக வரலாறு கூறுகிறது.

அருள்மிகு அழகிய மணவாளர் திருவடிகளே சரணம்.

அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.

மணவாளன் என்றால் "கணவன்" என்று பொருள். திருமணத்திற்காக அழகான கோலத்தில் காட்சி தந்து மணவாளன் ஆனதால், இத்தல இறைவன் அழகிய மணவாளப் பெருமாள் என்ற திருநாமம் பெற்றார்.

🌺🌺 தலச் சிறப்பு :-


திருவரங்கப் பெருமான் ஆண்டிற்கு ஒருமுறை எழுந்தருளி கல்யாண உற்சவம் கண்டு அருளும் தலம்.

அக்காலத்தில் "திருக்கோழியூர்" என்றும், பிற்காலத்தில் "திருஉறையூர்" என்றும் பெயர் பெற்று விளங்கும் திருத்தலம்.

திருமகள் தாயார் பரமபதவாசல் சேவை தந்தருளும் ஒரே திவ்யதேசம். மற்ற கோவில்களில் பெருமாள் தான் பரமபதவாசல் தந்தருள்வார்.

ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வார் இத்தலத்தில் தான் அவதரித்தார். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

நாயன்மார்களில் புகழ் சோழர், கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர்.

திருமங்கையாழ்வார் 1 பாசுரம், குலசேகர ஆழ்வார் 1 பாசுரம் என மொத்தம் 2 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம் இது.

🌺 நாளைய பதிவில் :-


நாளைய பதிவில் மூன்றாவது திவ்யதேசம் பற்றிப் பார்க்கலாம். 


"ஓம் நமோ நாராயணாய நமஹ".

No comments:

Post a Comment