நெல்லை சுற்றுலா 15
தென்காசி
கோபுரத்தில் நுழைகையில்
இங்கு வீசும் காற்று.
கோவிலுக்குள் நுழையும் போது, நுழைவாயிலின் முதல் பாதியில் நம் முகத்திற்கு நேராகக் காற்று வீசும்; இரண்டான் பாதியில் நம் முதுகில் காற்று வீசும். அதாவது, ஒரே வாயிலில் இரு திசைகளிலும் காற்று வீசும். இது எங்கும் காண முடியாத சிறப்பு. மேலும், ஊரிலேயே காற்று இல்லையென்றாலும், கோவில் வாசலில் காற்று இல்லாமல் இருக்காது. கொதிக்கின்ற வெயிலிலும், காற்று வீசிக் கொண்டே இருக்கும். அதுமட்டுமின்றி, கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகக் காற்று வீசும். இக்கோவில் கட்டமைப்பு அப்படிப்பட்டது. இக்கோவிலின் ராஜகோபுரத்தைப் பல கிலோமீட்டர்களுக்கு முன்பே பார்த்து விடலாம். அவ்வளவு உயரமானது. மேலும், இங்குள்ள துர்க்கை சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டது!
கோவில் வாசலில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் காண முடியும். அங்கு வீசும் அற்புதமான காற்றிற்காக அங்கு கூட்டம் குவியும்.
இப்படி ஒரு அதிசயம் ஊரில் இருக்கிறது என்றே பலருக்கும் தெரிவதில்லை. இந்த கோவிலைக் காண, பக்தர்களைத் தாண்டி இயற்கையை ரசிக்க வேண்டும் எனும் ஆர்வம் உள்ள யார் வேண்டுமானாலும் நிச்சயம் வர வேண்டும்.
குற்றாலத்திற்கு அருகில் இருப்பதால், மழைக்காலத்தில் மேகம் சூழ்ந்த கோபுரத்தைக் காணவே கோடி கண்கள் தேவைப்படும்!
அதுமட்டுமில்லை, இங்கு வீசும் காற்று உங்களைத் தழுவிக்கொண்டுச் செல்கையில், மனதில் எவ்வளவு பாரம் இருந்தாலும் அப்படியே கரைந்து போகும். வாழ்க்கையில் நிச்சயமாகப் பார்த்து, ரசித்து, லயித்து இருக்க வேண்டிய இடங்களில் தென்காசி கோவிலும் ஒன்று…
கோயிலும் மிகப்பெரிது. சுவாமி அம்மன் இடையில் முருகனுக்கு என பிரமாண்ட வடிவில். அழகான சிற்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது
ரதிதேவி, மன்மதன், தமிழணங்கு சிலைகள் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டுள்ளன
கிபி. 1445-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, கி.பி. 1446-ல் சுவாமி மற்றும் அம்மன் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டன.
நீளம்: கிழக்கு-மேற்கு -554 அடிஅகலம்: தெற்கு-வடக்கு-318 அடி
கோபுர உயரம்: 180 அடி
கோயிலிலிருந்து வெளியே வந்தவுடன் நண்பர் ஐயப்பன் தோசைக்கடைக்கு அழைத்துச் சென்று ரவாதோசை வாங்கித் தருகிறார்(திருநெல்வேலி உபசாரம்?)
கீழே மயிலாடுதுறை ரவாதோசை பற்றி...😁😁
படங்கள்..
கோபுரம் பிளவுண்ட முந்தைய கோபுரம்,இன்றைய கோபுரம்,வான் வழிக்காட்சி,மூலவர்,சிற்பங்கள்
No comments:
Post a Comment