Tuesday, September 29, 2020

சைதாப்பேட்டை திருக்காரணீசுவரர் திருக்கோயில்

🛕 நம்ம ஊரு சிவாலயம் அறிவோம்

🛕 வரலாற்று சிறப்புமிக்க சிவாலயங்கள் இன்று

👇👇👇

🛕 சென்னை, சைதாப்பேட்டையில் அமைந்துள்ள திருக்காரணீசுவரர் திருக்கோயில் 🛕

🛕புராண பெயர்(கள்):

திருக்காரணீசுவரம்

🛕அமைவிடம்:-

சைதாப்பேட்டை சென்னை

🛕 படம்(மூலவர்):

அருள்நிறை காரணீசுவரர் உடனமர் சொர்ணாம்பிகை

🛕தீர்த்தம்:

கோபதிசரஸ் திருக்குளம்


🛕 தல வரலாறு:-

தமிழகத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்றாகவும், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமாக விளங்குவது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் ஆகும். 

🛕மகிமை பல புரியும் காரணீஸ்வரர் இங்கு எழுந்தருளியிருப்பதற்கு காரணம் உண்டு.

🛕வசிஷ்டமுனி வேண்டுகோளுக்கிணங்க இந்திரன் தேவலோகத்திலிருந்து காமதேனு பசுவை பூலோகத்திற்கு அனுப்பி வைத்தான்.

 காமதேனு பசு நீண்ட நாளாக திரும்பி வராததைக் கண்டு அச்சமுற்றான் இந்திரன். பூஜையின்போது இடையூறு செய்தது என்பதால் காமதேனு பசுவை காட்டுப்பசுவாக வசிஷ்டமுனி மாற்றிவிட்டார் என்று அறிகிறான்.

🛕 திருமயிலைக்கும், திருவான்மியூருக்கும் இடையே தென்மேற்கு திசையில் சோலை ஒன்றை உருவாக்கி சிவபெருமானை பூஜித்து வந்தால் காமதேனுவை மீண்டும் அடையலாம் என முனிகணங்களிலொருவர் மூலம் தெரியவர தனது வாகனமான "கார் மேகங்களை" அனுப்பி அப்பகுதியை மழையால் குளிர்வித்தான். அந்த பிரதேசமே சோலைவனமாக காடசியளித்தது. தானும் அங்குச் சென்று தடாகம் ஒன்றை உருவாக்கி அச்சோலைக்குள் லிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான் இந்திரன்.

 🛕இந்திரனின் பூஜையால் மனமிரங்கிய பரமேஸ்வரன், காமதேனுவை மீட்டுக் கொடுத்ததுடன் கார் மேகங்களை அனுப்பி இப்பகுதியை குளிர்வித்தபடியால் இத்தலம் ‘காரணி’ என அழைக்கப்படும் என்றும், இந்திரன் இங்கு கோபதியானதால் அவன் உண்டாக்கிய தடாகம் ‘கோபதி சரஸ்’ என வழங்கப்படும் என்று அருளி மறைந்தார்.

🛕இத்திருகாரணீஸ்வரர் ஆலயத்தின் மேற்கில் உள்ள கோபதி சரஸில் ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் குளித்து திருக்காரணீஸ்வரரை வேண்டிவந்தால் தோஷங்கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

🛕அதுமட்டுமல்ல, ஸ்ரீதேவிக்கும், சரஸ்வதிக்கும் ‘யார் பெரியவர்’ என்கிற மோதல் ஒருமுறை ஏற்பட்டது. அங்கு வந்த பிரம்மனோ ‘ஸ்ரீதேவிதான் உயர்ந்தவர்’ என்று சொல்லிவிட, கோபமான சரஸ்வதி, பிரம்மனின் கை சிருஷ்டிதண்டத்தை பறித்துக்கொண்டு போய்விட்டார். பின்னர் பிரம்மா, சிவபெருமானை பூஜித்து தனது சிருஷ்டி தண்டத்தை மீட்டெடுத்த இடம் இந்த திருக்காரணீச்சரம் தான்.

 🛕இவ்வாலயத்திற்கு பழம் பெருமை உண்டென்றாலும் சென்ற நூற்றாண்டில்தான் இராஜகோபுரமும், உள் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

🛕 இறைவன் திருக்காரணீஸ்வரர் கிழக்குத்திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். இறைவி சொர்ணாம்பிகை தெற்கு திசை நோக்கி நின்று அருள் புரிகிறார். 

🛕சொர்ணாம்பிகை சமேத திருக்காரணீஸ்வரரோடு வேதகிரீஸ்வரரும், திரிபுரசுந்தரியும் கோயிலுள் குடியிருக்கிறார்கள்.

🛕இங்கு இந்திரன், திருமால், பிரமன், சிவசைதனிய முனிவரும், ஆதொண்ட சக்கரவர்த்தியும், குருலிங்க சுவாமி ஆகியோர் வழிபட்டு முக்தி பெற்றுள்ளனர் என்பது வரலாறு.






No comments:

Post a Comment