திருநெல்வேலி டவுண்
(காட்சி மண்டபம்) கம்பாநதி காமாட்சி அம்பாள் உடனுறை மூல மகாலிங்க சுவாமி கோயில் பற்றிய பதிவு!
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுடன் இணைந்த நெல்லை டவுண் (காட்சி மண்டபம்) கம்பாநதி காமாட்சி அம்பாள் உடனுறை மூல மகாலிங்க சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது.
இக்கோயில் ரிஷிவனம், தேவதாருவனம், தபோவனம் என போற்றப்படுகிறது.
இங்கு உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவனை மணம் புரிய அம்பாள் தவமிருந்து 38 அறங்களை வளர்த்ததாக வரலாறு உள்ளது.
இங்கு சிவந்த நிறம் உடைய கம்பாநதி அந்தர் வாகினியாக (பாதாள நதியாக) ஓடுகிறது.
அகத்தியர் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான கம்பாநதி, விஸ்வேஸ்வர லிங்கம் கோயில் முன்பு தோன்றி திருமணக்காட்சியளித்து அருளியதாக ஐதீகம் உள்ளது.
இறைவனை மணம் செய்ய இங்கு அம்பாள் தவம் இருந்ததால் திருமணத்தடை நீங்க இங்கு சிறப்பு வழிபாடு நடத்தலாம் என ஆன்மீகப்பெரியவர்கள் கூறுகின்றனர்.
ஆலய முகவரி:
சேரன்மகாதேவி ரோடு காட்சி மண்டபம் திருநெல்வேலி டவுண், Tirunelveli, Tamil Nadu 627006
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி ஐப்பசி திருக்கல்யாண மூன்றாம் திருநாள் அன்று காந்திமதி அம்மை கம்பாநதிக்கு நீராட செல்லும் திருக்கோலத்தில் காட்சியளித்தாள்
நம் வீட்டில் பெண்கள் சாதாரணமாக என்ன செய்வார்களோ அந்த அலங்காரங்கள் எல்லாம் நெல்லை காந்திமதி அம்பாளுக்கும் உண்டு.
அதில் ஒன்று தான் காந்திமதி அம்மை கம்பை நதிக்கு நீராட செல்லும் திருக்கோலம்.
பெண்கள் குளிக்க செல்லும் போது மாற்று புடவையை ஒரு தோளில் இட்டு அப்புடவையைக் கையில் பற்றிக் கொண்டும், மற்றொரு கையில் குளிக்க உதவும் பாத்திரம் ஏந்தி செல்வது வழக்கம்.
அன்னை காந்திமதியும் ஐப்பசி திருக்கல்யாண மூன்றாம் திருநாள் அன்று காலை அதே போன்று, ஒரு கையில் தீர்த்த சொம்பு, ஏந்தியும் மற்றொரு கையில் மாற்றுப்புடவை பிடித்துக் கொண்டும் வருவாள்.....
இதை காணும் போது...அவள் ஜகன் மாதா என்பதை மறந்து...நம் வீட்டு பெண் என்ற நினைப்பும் அன்பும் பெருகும்...என்பது உண்மை தானே....
மேலும் ஐப்பசி திருக்கல்யாண மூன்றாம் திருநாள் அன்று காலை அம்பாள் இந்த அலங்காரத்தில் வரும் போது ....பக்தர்களுக்கு நீராட எண்ணெய் மற்றும் பால் தரும் பழக்கம் இன்றும் உள்ளது.
அம்பாள் இங்கு 32 அறங்கள் வளர்த்ததால் இந்த நடைமுறை.
பொதியக் கிரி பெற்றருள் நற் பொருநை ப் புதுநீர் ஆடுகவே"
என்று பிள்ளைத் தமிழ் பாடி காந்திமதிஅம்மையை நம் உள்ளம் எனும் பொய்கையில் நீராட செய்வோம்.....
காந்திமதி அம்மை கம்பை நதிக்கு நீராட செல்லும் திருக்கோல படம் 👆
No comments:
Post a Comment