Sunday, November 28, 2021

கார்த்திகை தீபங்கள்

 கார்த்திகை தீபங்கள்!

கும்பகோணம் அருகில் அமைந்திருக்கும் அழகான, அமைதியான, வயல்கள் சூழ்ந்த, 14 தெருக்களில் அனைத்து சமூகத்தினரும் சுமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கோனேரரஜபுரம் கிராமம். தற்சமயம் உத்யோக ஓய்வுக்குப்பின் புகைப்படத்துறையில் தீவிர ஈடுபாடு கொண்டு, நமது நாட்டின் இயற்கை சூழ்நிலை, வனத்துறை, கிராம மக்கள், கோயில் கட்டிடக்கலைத்திறைகளின் சிறப்பு அம்சங்களை எனது புகைப்படங்கள் மூலம் வெளிக்காட்டிக்கொண்டிருக்கறேன். 

கிராமங்களில் ஒன்றும் இல்லை என்று நினைத்து வெளி நகரங்களுக்கு படைஎடுக்கும் தற்கால இளைஞர்களுக்கு எனது புகைப்படங்கள், கிராமங்களை திரும்பிப்பார்க்க வைக்கும் உணர்வை கொடுக்கும் என நம்புகிறேன். நமது நாட்டுக்கலாசார பண்டிகைகள் தற்காலத்திலும் சிறிதளவும் குறைவில்லாமல் நமது கிராமங்களில் கொண்டாடப்படுவதைக் கண்டு நான் வியந்ததுண்டு. சமீபத்தில் நடந்து முடிந்த கார்த்திகை தீபத்திருவிழாவை எனது புகைப்படங்கள் மூலம் பதிவு செய்ய எண்ணி, கடந்த இரண்டு வருடங்களாக செய்ய முடியமல் போய், இந்த வருடம் சென்ற வாரத்தில் செய்து முடிந்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். 

எங்கள் கிராமத்தில் எடுப்பது என தீர்மானித்தபின், எனது நண்பியும், கிராமப்பள்ளில் என்னுடன் ஒன்றாகப்படித்தவருமான Smt லக்ஷ்மியை தோடர்பு கொண்டபோது, அவர்கள் ஓரே வார்தையில், “நான் பார்த்துக்கொள்கிறேன், வா!” என்று சொன்னது எனக்கு மிகுந்த ஊக்கத்தையும், தைரியத்தையும் கொடுத்தது. 

இப்போது புகைப்படம் எடுப்பதை பற்றி வருவோம். இதற்கு மிக முக்கிய கட்டம் எப்படி எடுக்கப்போகிறோம் என்பதை முன்கூட்டியே தீர்மானிப்பது, Conceptualisation. பிறகு என்னென்ன subjects/visual elements எங்கெங்கு, எப்பொழுது, எப்படி இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய கட்டம். அந்திமயங்கும் நேரத்தில் போதிய இயற்கை வெளிச்சம் கிடைக்காத போது, அகல் விளக்கு தரும் வெளிச்சம்தான் நமக்கு பிரதான ஒளி. அந்த வெளிச்ச ஒளியின் தன்மையை (Characteristics of Light) சரியாக தீர்மானிக்க வேண்டும். விளக்குகள் சற்று நேரம் நிதானமாக எரிய காற்று, மழை இல்லாமல் இருக்க வேண்டும். Camera Technology யை விட, புகைப்பட கலைஞரின் திறமை மேலோங்கி இருக்க வேண்டும். Cameraவையே நம்பிக்கொண்டு இருக்கக்கூடாது. எந்த விலை உயர்ந்த High-tech Cameraவும் நம்மை ஏமாற்றி விடும். Low light, very slow shutter speed and high ISO இவை மூன்றும் ஒன்றுக்கு ஒன்று புறம்பானது. 

குறைவான அந்தி நேர வெளிச்சத்தில், மிகக்குறைவான camera shutter speed ல், அதிகமான ISO settings வைத்து, சிறுமியர்களை புகைப்படம் எடுப்பது ஒரு அசாதாரணமான முயற்சி! இவைகள் ஒவ்வொன்றயும் மிக நேர்த்தியாக கையாண்டால்தான், சரியான Composition, Exposure, colour, clarity and sharpness கிடைக்கும். இங்கு நமது முக்கிய subject, சிறுமியர்கள். அவர்கள் எவ்வாறு ஒத்துழைப்பார்களோ? மேலும், இந்த நெருடலான சூழ்நிலையை Camera Technology எவ்வாறு எதிர் கொள்ளும்?அதன் ஒத்துழைப்புக்கு மேல் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு கிடைக்கப்போகிற நேரம் மிகவும் குறைவு. இச்சமயத்தில் நமக்கு இரண்டு மட்டும் மிகத்தெளிவாகத்தெரிந்து விடும். ஒன்று, “Importance of Photographer over  Camera”!  இரண்டு, “நமது Technique is the key; equipment used is immaterial”. இந்த பரீட்ஷைகளிலெல்லாம் நல்லமுறையில் தேற்சி பெற்று, படங்களை எடுத்து விட்டால் கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. அவ்வாரு நான் எடுத்த சில படங்களை இங்கு பதிவு செய்கிறேன். 

இச்சமயத்தில் எனக்கு பேருதவி அளித்த கோனேரிராஜபுரம் Smt லக்ஷமி, அவர்களது மாணவ சிறுமியர்கள் இவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் இருந்து, எனக்கு மிகவும் உதவிய நண்பர் ஆனந்து அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment