Friday, November 26, 2021

சன்னா மசாலா

 சன்னா மசாலா       

 தேவையான பொருள்கள்         சன்னா - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2, தயிர் - கால் கப், மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, சீரகத்தூள் - அரை தேக்கரண்டி, மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி, கரம் மசாலா - கால் தேக்கரண்டி, தனியாதூள் - 2 தேக்கரண்டி, ஏலக்காய் - 2, கிராம்பு - 3, தனியாக அரைக்க:, வெங்காயம் - 2, தக்காளி - 3, இஞ்சி - 2 துண்டு, பூண்டு -

 1          செய்முறை            சன்னாவை 8 மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்பின்னர் அரைத்த விழுதினை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.அதில் அனைத்து தூள்களையும் உப்பும் சேர்த்து வாசனை போக வதக்கவும்.

பின்னர் அந்த கலவையில் தயிரை ஊற்றி கிளறவும்.அடுத்து உருளைக்கிழங்கு, மற்றும் சன்னாவை 5 நிமிட கால இடையெளியில் ஒவ்வொன்றாக சேர்த்து சிறுதீயில் மசாலா சேரும் வரை அடுப்பில் வைக்கவும்.சுவையான சன்னா மசாலா தயார்.



    🧜‍♀️சுபயாழ்னி🧜‍♀️

No comments:

Post a Comment