கனியுமோகாதல்_33
சனிக்கிழமை மாலை. சுந்தரத்திற்கு அன்று ஸெகண்ட் ஸாடர்டே ஆனதால் ஆத்தில் இருந்தார். ஆத்து கணக்கு வழக்குகளில் மும்மரம்.
மைதிலி ஆஃபீஸுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறாள்.
'அம்மா, இன்னிக்கு நான் வரதுக்கு லேட் ஆகும்?'
'ஏண்டி இது தெரிஞ்சது தானே. ஏதோ டெய்லி் எட்டு மணிக்கே வந்துட மாதிரி. நல்ல ஆஃபீஸ். உன்ன சக்கையா பிழியறதுக்குன்னே அந்த துர்வாசர் வக்கீல் ஒடம்பா படுத்துண்டுட்டான். அவனுக்கு வேல ஆகணுங்கறதுக்காக உன்ன பாராட்டிண்டே வேலய வாங்கிக்கறான்.'
'அம்ம்மா... உன் பொண்ணு பெரிய வக்கீல்னு பேர் வாங்கினா ஒனக்கு பெருமை இல்லையா?'
'ஒரு பெருமையும் வேண்டாம். இப்படி ஓடா தேஞ்சிண்டு எம் பொண்ணு கஷ்டப்பட்டு அப்படி ஒரு பெருமை எதுவும் வேண்டாம். ஒரு வார்த்த உன்னோட எங்களால பேச முடியல. அப்புறம் பெருமை வந்தா என்ன வராட்டி என்ன?'
கோபத்தோடும் எரிச்சலோடும் சொன்ன கௌரியின் கன்னத்தை கிள்ளுகிறாள்.
'அசடே, வலிக்கறதுடி'
'அம்மா, இன்னிக்கு இத்தனை நேரம் சார் டிஸ்ச்சார்ஜ் ஆகி ஆத்துக்கு வந்துருப்பார். அவர் கையில திரும்பவும் ஆஃபீஸ கையில கொடுத்துட்டு என்னோட செல்ல அம்மா மடியில படுத்துண்டு எல்லா கதையும் கேட்டுண்டு ஜாலியா இருக்கேன். சரியா? கோச்சுக்காத கௌரி. சமத்துல்ல நீ.'
'இதுல ஒண்ணும் கொறச்சலில்ல. அப்பா ஒரு வரன் பார்த்து வெச்சிருக்கார். நல்ல எடம். நன்னா பையன் படிச்சிருக்கானாம். ஒனக்கேத்த அழகாம். கொஞ்சம் வசதியான எடமா தெரியறது. பேசணும் ஒன் கிட்ட நெறையா. சீக்கிரம் ஒன் ஆஃபீஸ் பீத்தலெல்லாம் உட்டுட்டு வந்து உக்காந்து பேசு.'
'அப்ப்பா, இங்க பாருப்பா அம்மாவ. கல்யாணம் கல்யாணம்.. இத தவிர ஒரு பேச்சு பேசமாட்டேங்கறா.'
'ஏன் செல்லம். நீ சரின்னு சொன்னதுக்கப்பறம் தான அப்பா வரன் பார்க்க ஆரம்பிச்சேன். இப்படி மாத்தி மாத்தி பேசினா அப்பாக்கு கெட்ட கோபம் வரும் பார்த்துக்கோ. இதுல நான் உங்க அம்மா கட்சிதான்.'
'ஜஸ்ட் ஒரு அஞ்சாறு மாசம்ப்பா. ப்ளீஸ்ப்பா.'
'நோ நோ... அம்மா சொன்ன வரன் நன்னா இருக்கு. அவா கிட்ட கேட்டுண்டு ஒரு ஸன்டேவா பொண் பார்க்க அவாள கூப்டப் போறேன். நீ ஃப்ரீ பண்ணிண்டுதான் ஆகணும். அவனுக்கு புடிச்சிருந்தா கல்யாணத்த வேணா ஆறு மாசம் தள்ளி வெச்சுக்கலாமான்னு கேட்கறேன்.'
சிணுங்கிக் கொண்டே டூ வீலரை ஓங்கி ஒரு உதை. அதுவும் இக்னீஷியம் கீயை ஆன் பண்ணாமலேயே.
'பார்த்து டா செல்லம். இந்த உதை உதைச்சா அப்பா தாங்க மாட்டா. கீ போட்டுருக்கியான்னு பாரு.'
தலையில் லேசாக அடித்துக் கொண்டு கீயை போட்டு இப்போது ஒரு உதை. கிளம்பியாச்சு.
ஆஃபீஸ் வருகிறாள். வாசலில் சந்தர்.
'அப்பா டிஸ்ச்சார்ஜ் ஆகியாச்சா சந்தர்.'
'இப்பத்தான் அக்கா. அஞ்சு நிமிஷம் முன்னாடி ஆத்துக்கு வந்தார்.'
'எப்படி இருக்கார் இப்ப?'
'பெட்டர். ஆனா ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும்னு ஆயுரத்தெட்டு அட்வைஸ டாக்டர் கிட்டேந்து வாங்கிண்டிருக்கார். ப்ராமிஸ் வேற சிகரெட் பிடிக்க மாட்டேன்னு. பார்க்கலாம்.'
'அப்பா யார் சொல் பேச்சும் கேட்க மாட்டார்தான். ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு. ஹி வில் க்விட் ஸ்மோக்கிங் ஃப்ரம் நௌ.'
'உங்க குருநாதர விட்டு கொடுப்பீங்களா?'
சிரித்துக் கொண்டே, 'இப்ப அப்பாவ பார்க்கலாமா?'
'சித்த நாழியில அவரே மைதிலி மைதிலின்னு என்ன விட்டு உங்கள கூப்பிட சொல்லப் போறார்.'
'பார்க்கலாமே அதையும் தான்.'
சொல்லிக் கொண்டிருக்கும் போதே நடராஜ் ஆத்துக்கு உள்ளேயிருந்து வருகிறான்.
'மேடம் வந்துட்டீங்களா? நீங்க வந்தோண்ண ஐயா உங்கள உடனே வந்து பார்க்க சொன்னார்.'
'நான் சொல்லல அக்கா. ரெஸ்டா, அதுவும் அப்பாவா! எனக்கு நம்பிக்கை இல்ல.'
சிரித்துக் கொண்டே உள்ளே செல்கிறாள் மைதிலி. டீக் உட் கட்டிலின் விளிம்பில் தலையை குனிந்து கொண்டு பிக்ஷேஸ்வரன் அமர்ந்திருக்கிறார்.
'சார், எப்படி இருக்கேள்?'
அவர் குரலில் வலிமை இல்லை.
'நன்னாயிடுவேன். நம்பிக்கை வந்துடுத்து இப்போ'
'தட்ஸ் gகுட்'
'எல்லாத்தையும் பார்த்துண்டு வரயே. சிரமமா இல்லையே? வேணும்னா ஸீனியர் பசுபதி ஐயரை கூப்ட்டுக்கோ இம்பார்ட்டண்ட் கேஸ்களுக்கு.'
'தேவைப் பட்டா கூப்ட்டுக்கறேன் சார்.'
'ஆத்துல உனக்கு மாப்பிள்ள பார்த்துண்டுருக்காளா?'
சிறிய வெட்கம். உதடு மட்டும் அந்த வெட்கத்தை ஏற்று ஒரு சிரிப்பு.
'பார்த்துண்டிருக்கா சார்.'
'வக்கீலா பார்க்க சொல்லியிருக்கியா அப்பா கிட்ட. நானும் யோசிச்சு பார்க்கறேன் வக்கீல் வகையறாவில யாராவது கிடைக்கறாளான்னு.'
'இப்ப எதுக்கு அதப் பத்தியெல்லாம். நீங்க முன்னாடி உடம்ப பார்த்துக்கோங்கோ. வீணா எதுக்கு அடுத்தவா கவலையெல்லாம்?'
'மைதிலி, எப்ப பார்த்தாலும் எல்லாரையும் சத்தம் போட்டுண்டே இருப்பேன். நாம தான் இந்த ப்ரொஃபஷன்லயே க்ரேட்டுனு எல்லாரும் நெனைக்கணும்ங்கறதுக்காக எப்படியெல்லாம் பந்தா காமிச்சிருக்கேன். இப்ப எல்லாம் அடங்கி போச்சு.'
'சார், எங்களுக்கு நீங்க சிங்கம் எப்போதும். நீங்க இப்படி சோர்ந்து கிடக்கறத என்னால பார்க்க முடியல. முதல்ல உடம்ப நன்னா பார்த்துண்டு அதே கம்பீர குரல்ல சத்தம் போடணும், நாங்க நடுங்கணும். சில பேர்கள அப்படியே பார்த்தாதான் நன்னா இருக்கும்.'
'உன் கிட்ட ரொம்ப பிடிச்சதே மத்தவாளுக்கு நீ கொடுக்கற ஊக்கம்தான். பகவான் உனக்கு நல்ல ஆத்துக்காரர கொடுக்கணும்.'
'சரி சார். மத்த ஜூனியர்ஸெல்லாம் வந்துடுவா. முடிஞ்சா வேலையெல்லாம் முடிச்சுட்டு வரேன். இப்பத்தான் டிஸ்ச்சார்ஜ் ஆகி வந்திருக்கேள். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கோ.'
'மைதிலி, என்ன வந்து ஸ்ரீதர் ஏன் பார்க்க வரல? என் மேல அவனுக்கு கோபமா?'
'அவனுக்கு விஷயம் தெரிஞ்சிருக்காது. தெரிஞ்சிருந்தா வந்து பார்த்திருப்பானே.'
அவன் மீது அவர் வைத்துள்ள கரிசனத்தை கெடுக்க விரும்பாமலேயே அப்படி மாற்றி சொன்னாள்.
'ஜெயஸ்ரீ ஸ்ரீ கிட்ட சாருக்கு உடம்பு சரியில்லைனு சொன்னதாக தான சொன்னா? ஏன் வந்து பார்க்கல அவன்? நல்லவேளை சார் கேட்டதுக்கு எப்படியோ சொல்லி சமாளிச்சுட்டேன்.'
பிக்ஷேஸ்வரனிடம் பேசிவிட்டு வெளியே வரும்போது சந்தர் எதிரே வருகிறான்.
'அக்கா, இப்பத்தான் யோசிச்சேன். அப்பா இங்க இருந்தா கோர்ட் டென்ஷன் அது இதுன்னு கவலப் பட்டுண்டே இருப்பா. அதனால எங்க அத்தையாத்துல அவர அழச்சிண்டு போகலாமான்னு ஒரு த்தாட். ஒரு மாசம் அங்க போய் ரெஸ்ட் எடுத்தா என்ன? ஜஸ்ட் எ த்தாட் தான்.'
'நல்ல ஐடியாதான். அம்மாகிட்ட பேசிட்டு முடிவு பண்ணு. அப்பா ஒத்துக்கலைனா சொல்லு. நானும் சொல்லிப் பார்க்கிறேன்.'
'உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?'
'அதெல்லாம் ஒண்ணுமில்ல. அப்பா உடம்புக்குத்தான் ஃபர்ஸ்ட் ப்ரையாரிட்டி. நான் அவருக்கு ஒரு கவலையும் கொடுக்க மாட்டேன். நீ கவலப்படாதே.'
'ச்சே ச்சே. நான் அப்படி மீன் பண்ணல.'
'நானும் சாதாரணமாத்தான் சொன்னேன். தேவைப்படாது, ஒருவேளை தேவைப்பட்டா, நான் உங்க அத்தையாத்துக்கு வந்து அவர் கிட்ட இன்ஸ்ட்ரக்ஷன் வாங்கிப்பேன்.'
'யூ ஆர் க்ரேட் அக்கா.'
தொடரும்....
No comments:
Post a Comment