Sunday, November 28, 2021

அமுல்

 அது ஒரு நடுத்தரக் குடும்பம், வட நாடு.... முன் இரவு.. பட, பட என கதவு தட்டல்.. திறத்தால் "போலீஸ்" .. தட, தட என உள்ளே வந்தவர்கள்.. நேராக சமையல் அறை போய்.. .... பத்திரங்களை திறந்து மூடினர்...

. பிறகு.. இன்ஸ்பெக்டர் குடும்ப தலைவரிடம்..."பதுக்கல்..you are under arrest" என்றார்..

 அப்படி அவர்கள் என்ன தான் பதுக்கி வைத்திருந்தனர், "கஞ்சாவா? தங்க வைரமா," இல்லை.. இல்லை "அது பால்,"எருமைப் பால்..

இது பல பால் சார்ந்த  இனிப்பு செய்யும் கடைகளிலும் நடந்தது... அந்தக் காலக்கட்டத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பால் வைத்திருத்தல்.. சில வட மானிலங்களில் சட்டப் படி  குற்றம்

நம் தாய் திரு  நாட்டில்  19 44 - 46  வாக்கில்  "பால் பஞ்சம்," 

வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் பாலை பொழிந்து தந்து கொண்டு தான் இருந்தன ஆனாலும் இப்படி ஒரு நிலை

விவசாயிகளுக்கும் "நீங்காத  செல்வம் நிறைந்த." .. பாடில்லை ..... 

குறிப்பாக பம்பாய் போன்ற  பெரு நகரங்களில்    கொடிய  பால் பஞ்சம்...

.தலைவிரித்து ஆடியது. 

இதை சமாளிக்க குஜராத் மாநிலம் "கைரா" முதலிய இடங்களில் இருந்து பால் தருவிக்கப்பட்டது. ...ஒரு தனியார் நிறுவனம்   மூலம்..... . 

பால் கொள்முதல் செய்த  "அது வோ" விவசாயிகளுக்கு உகந்த.. விலை கொடுக்காமல் அவர்கள் வயிற்றில் அடித்தது... ... அவர்களை சுறண்டியது.. 

விவசாயிகள் தங்கள் தலைவர்  "சர்தார் வல்லபாய் படேல்" அவர்களை சந்தித்தனர்  தங்கள் மன உளைச்சலை கொட்டினர்,

அவருடைய "ரேசர் ஷார்ப்" மூளையில் உதித்தது தான் "கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள்." 

அவர் தன் "சிஷ்யர் "திரு. திருபுவன் தாஸ்   படேலிடம்" சங்கங்களை உருவாக்கும், திட்டத்தை யும்.... பெரும்... பொறுப்பை யும் ஒப்படைத்தார். 

.. தலைவர்... கட்டளையை சிரமேற் கொண்ட திருபுவன் தாஸ்  அவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று,... கணக்கற்ற   விவசாயிகளை சந்தித்து  அருப்பாடு பட்டு....

முதல் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தை  1946  வாக்கில்.... 924  உறுப்பினர்களுடன், உருவாக்கினார்.

அதன்  முதல் பால் கொள்முதல் 230 லிட்டர்.... 

 பிறகு கூட்டுறவு சங்கங்கள் அவர் உழைப்பால் ஆயிரக்கணக்கில் வளர்ந்தன. 

அவை அமுல் என்ற பிராண்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. ("அமூல்யா* என்றால் சமஸ்கிருத்தில் விலைமதிப்பற்ற என்று பொருள் அதில் இருந்து" அமுல்")

இப்போது" அமுலுக்கு"இரண்டாவது பிரச்சனை, இந்த பெருங் கூட்டமான கூட்டுறவு சங்கங்களின் நிற்வாகம்..

பாலுக்கு  சந்தை, பதப்படுத்தி பாலை  பாதுகாக்கும் தொழில் நுட்பம்  முதலியன.

இந்த நிலையில் திருபுவன் தாஸை சந்தித்தார்  ஒரு இளைஞர், கேரளாவை சேர்ந்தவர், சென்னையில் BE, மிச்சிகன் பல்கலை கழகத்தில் MS  படித்தவர்.. கைரா மாவட்டத்திலேயே  ஆனந்த் என்னும் ஊரில்  உள்ள அரசு பால்  பண்ணையில் இஞ்சினியர் ஆக பணியாற்ற வந்துள்ளார். 

வேலை பிடிக்க வில்லை, No Challenges, பெயர் "வர்கீஸ் குரியன்," 

திருபுவன் தாஸ் அவர்களுக்கு " வர்கீஸ் குரியனை" பிடித்து விட்டது.. அவரை பொது நிற்வாகியாக  "அமுலில்" இணைத்துக் கொள்கிறார்.. 

அவருடைய திறமையான நிற்வாகத்தில் அமுலின் தொழில் நுட்ப, சந்தை, நிற்வாக  பிரச்சனை கள் மாயமாக மறைகின்றன.. 

இப்போது   பிரச்சனை PROBLEM OF PLENTY.... கூட்டுறவு சங்கங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு... பால் கொள் முதலும்... அவை எல்லா வற்றையும் வாங்க ஆள் இல்லை.... குளிர் பதன வசதி இல்லை.. கொட்டவா முடியும்..??

மேல் நாடுகளில் என்ன செய்கிறார்கள்.? .. பாலை பவுடராக மாற்றுகிறார்கள்.... இங்கும் செய்வது தானே, ஆனால் அது முடியாதே..

 பிரச்சனை என்னவென்றால் அமுலின் பாலை பவுடர் ஆக்க வே  முடியாது.... ஏன் என்றால் அது "எருமைப் பால்". கொழுப்பு  அதிகமாம்.. 

. வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு  பால் தொழில்  நுட்ப நிபுணர்களும்  கூட கை விரித்து விட்டனர். முடியாது என்று அடித்துச் சொன்னனர்...... DEAD END. 

அப்போது  குரியனுக்கு அவருடைய மெச்சிகன் பல்கலை கழகத்தில் உடன் படித்த நண்பர் "ஹரிசந் மேகா தலாயா" அவர்களும்.... அவருடைய புத்திசாலித்தனமும் நினைவிற்க்கு வருகிறது

. அவரை தன்னுடன் அமுலில் இணைந்து கொள்ளும் படி அழைக்கிறார் பிரச்சனையை விவரிக்கிறார் ,

H. M. தலாயா கராச்சியைச் சேர்ந்தவர், அறிவாளி, பிரிவினையின் போது.... தங்கள் 500 ஏக்கர் நிலங்கள், பண்ணைகள்..... இழந்தவர், 

.H. . M. . தலாயா அவர்கள்  இந்தியா வர விரும்பவில்லை. தயங்கினார்.. 

தயங்கினாலும், குரியனுக்கும்...... விவசாயிகளுக்கும் , அமுலுக்கும்  இது ஒரு வாழ்வா, சாவா என்ற பிரச்சனை என்பதனால் வர... பணியாற்ற ஒப்புக்கொள்கிறார்

கூடிய சீக்கிரமே  அவருடைய தீவிர ஆராய்ச்சி வெற்றி.. உலகின் முதல் "ஸ்ப்ரே டிரைய்யர்... பால் பவுடர்.. "... எருமை பாலில்.... இருந்து.. கண்டு பிடித்தார்...உலகம் வியந்தது..

. ,.... இது இந்திய, உலக பால் பண்ணை அமைப்புகளை... தொழிலை... புரட்டி போடும் கண்டு.    பிடிப்பு ..... அல்லவா.. . 

அன்றில் இருந்து   அமுலுக்கு  திரும்பி பார்த்தலே  இல்லை. 

அமுலின் வெற்றிக்கு  இவர் ஒரு முக்கிய காரணம்.

பன்னாட்டு நிறுவனங்களின் ஏக போக உரிமையாக இருந்த குழந்தைகள் உணவு சந்தையை 1960 களிலேயே கைப் பற்றியது. "அமுல்".. 

திரிபுவன் தாஸ், வர்கீஸ் குரியன், " H. M. தலாயா "மூவரும்  அமுலின் "திரிமூரத்திகள். " என்று அழைக்கப் பட்டார்கள்.... 

திருபுவன் தாஸ்  அவர்களை " தந்தை" என்றும்,   வர்கீஸ் குரியன் அவர்களை  "மகன் " என்றும் H. M. தலாயா அவர்களை இவர்களை பின்நின்று இயக்கும் " HOLY GHOST" என்றும்...

." 1964 இல் ஆனந் வந்த பிரதமர் "லால் பகதூர் சாஸ்திரி" ஆனந் , அமுலின், கூட்டுறவு  இயக்க வளர்ச்சி கண்டு பிரமித்தார், 

அது போன்ற  வளர்ச்சியை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என அவர் இந்த மூவர் அணியிடம்  கேட்டுக்  கொள்ளவே., 

இந்த மூவர் அணி  களத்தில் இறங்கியது. அவர்கள் உருவாக்கியது தான்......

தழிழ் நாட்டில்-ஆவின்,
கர்நாடகாவில்-நந்தினி
மகாராஷ்டிராவில்  - ஆரே,
ராஜஸ்தானில் - சரஸ்,
பீகாரில் -சுதா,.
கேரளாவில்-மில்மா........

மேலும் பல.... . 

1970   இல்  வெண்மை புரட்சிக்கும் வித்திட்டு,...

உலகிலேயே மிக அதிகமாக பால், உற்பத்தி செய்யும் நாடுகளில் முதன்மையானதாக  நம் தாய் திரு  நாடு   உருவானது..... 

இன்று "அமுல்" குஜராத்தில் 15000/- கிராமங்களில் பரந்து விரிந்து,  ,   3. 6 லட்சம் விவசாயிகளுக்கு சொந்தமான.. ,230 லிட்டர் முதல் பால் கொள் முதலுடன் ஆரம்பிக்கப்பட்ட. "அமுல்" ... இன்று... 50 லட்சம் லிட்டர், பால், பால் பெருட்கள் விற்பனை, பல கோடி ரூபாய் வரவு செலவு களுடன்...

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்....

 26. நவம்பர் 1921...திரு.வர்கீஸ் குரியன் அவர்களின்...... பிறந்த நாள்

அவர் தன்னை "வெண்மை புரட்சியின் தந்தை*... என அழைத்துக் கொள்வதை விட *இந்தியாவின் பால்காரன் "... என அழைக்கப் படுவதையே விரும்பினார்

அவருடன்.... கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்   சங்கங்களுக்கு.... வித்திட்ட.

திரு. சர்தார் வல்லபாய் படேல்,
திரு. திருபுவனம் தாஸ் படேல்
தொழில் நுட்ப மேதை..
திரு. ஹரிசந் மேகா தலாயா...

 குறிப்பாக... நம் வெண்மை புரட்சிக்கு  அடிக்கோலிய "அமுலை" யும், அதன் வெற்றிக்கு உழைத்த "திரிமூர்த்திகளையும்" நாம் நினைவு  கூர்வது   பொருத்தம் தானே???

வாழ்க அவர்கள் புகழ்... ஜெய் ஹிந்த்

No comments:

Post a Comment