வெங்காயத்தாள் பொரியல்
தேவையான பொருட்கள் :
வெங்காயத்தாள் 1 கட்டு
தக்காளி 1
பெரிய வெங்காயம் 1
மிளகாய் தூள் கால் டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
கடுகு கால் டீஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
வெட்டிய வெங்காயத்தாள், நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
நன்றாக வதங்கிய பின், தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கால் கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றி வெங்காயத்தாள் வெந்ததும் இறக்கவும். சுவையான வெங்காயத்தாள் பொரியல் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : ரச சாதத்துடன் சேர்த்து இந்த பொரியல் சாப்பிட நன்றாக இருக்கும்.
வெங்காயத்தாள் பருப்பு பொரியல்
தேவையான பொருட்கள் :
வெங்காயத்தாள் ஒரு கட்டு
பாசிபருப்பு கால் கப்
பச்சை மிளகாய் 2
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
வெங்காயம் 13
தாளிக்க
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பாசிபருப்பை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு தாளித்து வெங்காயத்தாள் சேர்த்து உப்பு போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.
அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். பின், ஒன்றோடொன்று கலந்ததும் இறக்கவும். இப்போது சுவையான வெங்காயத்தாள் பருப்பு பொரியல் தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : ரச சாதத்துடன் சேர்த்து இந்த பொரியல் சாப்பிட நன்றாக இருக்கும்.
வெங்காயத்தாள் சாதம்
தேவையான பொருட்கள் :
வெங்காயத்தாள் 1 கட்டு
உதிராக வடித்த சாதம் 2 கப்
வெண்ணெய் 1 டீஸ்பூன்
வேக வைத்த பட்டாணி அரை கப்
வெங்காயம் 12 (பொடியாக நறுக்கியது)
சோயா சாஸ் அரை டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
அரைக்க
பூண்டு பல் - 3
செய்முறை :
முதலில் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து அரைத்த விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் வெங்காயம், பட்டாணி மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் வடித்த சாதத்தை போட்டு கிளறி சோயா சாஸ், உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறிவிடவும். இப்போது சுவையான வெங்காயத்தாள் சாதம் தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : அனைத்து வகையான சட்னிகளையும் இதனுடன் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment