Friday, November 26, 2021

வெங்காயத்தாள்

வெங்காயத்தாள் கூட்டு 

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
வெங்காயத்தாள் 1 கட்டு (நறுக்கியது)
பாசிப்பருப்பு 50 கிராம்
துவரம்பருப்பு 100 கிராம்
சாம்பார் பொடி அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள்பொடி அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் 3
வெங்காயம் கால் கப் உப்பு தேவைக்கேற்ப
பால் அரை கப்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை :

  துவரம்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் மஞ்சள்பொடி சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

  கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

  பின் அதில் வேகவைத்த பருப்பை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். 

  அதில் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கொதிக்கவிடவும். வெங்காயத்தாள் வெந்தவுடன் பால் சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். இப்போது சூடான வெங்காயத்தாள் கூட்டு ரெடி.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து கூட்டுடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.


வெங்காயத்தாள் பொரியல் 

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
வெங்காயத்தாள் 1 கட்டு
தக்காளி 1
பெரிய வெங்காயம் 1
மிளகாய் தூள் கால் டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
கடுகு கால் டீஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

  வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  வெட்டிய வெங்காயத்தாள், நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

  நன்றாக வதங்கிய பின், தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். 

  வதங்கியதும் கால் கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றி வெங்காயத்தாள் வெந்ததும் இறக்கவும். சுவையான வெங்காயத்தாள் பொரியல் ரெடி.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : ரச சாதத்துடன் சேர்த்து இந்த பொரியல் சாப்பிட நன்றாக இருக்கும்.

வெங்காயத்தாள் குழம்பு 

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
வெங்காயத்தாள் 1 கட்டு (நறுக்கயைது)
பூண்டு பல் 10
தக்காளி 1
வெங்காயம் 10
கடுகு கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
வெந்தயம் அரை டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கறிவேப்பிலை ஒரு கொத்து
நல்லெண்ணெய் தேவைக்கேற்ப
அரைக்க
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் துருவல் - கால் கப்
சீரகம் - கால் டீஸ்பூன்

செய்முறை :

  அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  பின் பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

  பின்பு தேங்காய் துருவல், சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும், பின் நன்றாக கொதித்த பின் இறக்கவும். சுவையான வெங்காயத்தாள் குழம்பு தயார். 

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்



No comments:

Post a Comment