Sunday, November 28, 2021

கனியுமோகாதல்_35

கனியுமோகாதல்_35

காளிகாம்பாள் ஜூஸ் கடை.  ஃபரெஷ் ஜூஸ்கள் அங்கே நன்றாக இருக்கும் என்று ஸ்ரீதர் சொல்ல முரளியும் ஸ்ரீதரும் பேசிக் கொண்டே அந்த கடையை நோக்கி வருகிறார்கள்.

'ஸ்ரீதர் சார், நீங்க எந்த காலேஜுல படிச்சேள்?'

'க்ரிஸ்டியன் காலேஜ்ல டிகிரி.  அப்புறம் லா காலேஜ்.'

'ஓ.  நான் படிச்சது கொண்டது எல்லாம் லயோலா.  M.Com. வரைக்கும் அங்கதான்.  அதுக்கப்பறம் ஆடிட்டிங் அது இதுன்னு போயிடுத்து.'

'தனியா எப்ப ஆடிட்டிங் ஆரம்பிச்சீங்க?'

'சுப்ரமணியம் & Co. வில் இனிஷியல் ட்ரெயினிங் எடுத்துண்டேன்.  ரெண்டு வருஷமா தனியா பண்றேன்.'

'க்ளையண்டெல்லாம் உடனே கெடச்சாளா?'

'அம்பா அப்பா bபார்ண் ரிச்.  அந்த தைரியத்துல தான் இறங்கினேன்.  என்னவோ ஒரு அதிர்ஷ்டம்.  இன்கம்டேக்ஸ் ஃபைலிங்க்ல ஆரம்பிச்சேன்.  டேக்ஸேஷன் ஸ்பெஷலா படிச்சுட்டு சில கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு ஆடிட்டிங் ச்சான்ஸ் கெடச்சு நன்னா போயிண்டிருக்கு.  அதிர்ஷ்டமும் என் பங்குல இருந்ததுன்னு ஒத்துக்கத்தான் வேணும்.  ரெம்யூனரேஷன்னு பார்த்தா ஆவரேஜா அஞ்சாறு லக்ஷம் வர்ரது ஆண்டவன் புண்ணியத்துல.'

கடை வந்ததும், 'என்ன சாப்டுறீங்க?  ஆப்பிள் ஆர் ஆரஞ்ச்?'

'ஸ்ரீதர் சார்.  எனக்கு சப்போட்டா?  உங்களுக்கு?'

'எனக்கு மாதுளை போட சொல்லுங்க.'

இரண்டு பானங்களும் அவரவர் வயிற்றில் ஸ்ட்ராக்கள் மூலம் உள்ளே செல்கிறது.

'நீங்க ஐயங்காரா ஸ்ரீதர் சார்?'

'ஆமாம்.  ஏன் இந்த கேள்வி?'

'சும்மாத்தான் கேட்டேன்.  நெத்தியில திருமண் மார்க் இருந்தது.  ஜஸ்ட் ஐ விஷ்ட் டு க்ளாரிஃபை.'

'எஸ்.  ஐ ஆம்'.

'சார், உட்கார்ந்து பேசற மாதிரி 

இடம் இல்ல போல இருக்கே.  பேசாம நாம ஜூஸ் சாப்டுட்டு உங்க ஆஃபீஸுக்கே போயிடலாம்.'

'உங்க ப்ரொஃபஷன் எப்படி போய்கிட்டு இருக்கு?  நான் என்னப்பத்தியே பேசிண்டிருக்கேன் பாருங்க.'

'இட்ஸ் ஓகே.  உங்களுக்கு அதிர்ஷ்டம் கெடச்ச மாதிரி எனக்கும் கெடைக்கும்னு நம்பிண்டு ப்ராக்டீஸ் பண்ணிகிட்டு இருக்கேன்.'

திரும்பவும் ஸ்ரீதருடைய ஆஃபீஸுக்கு வந்து அமர்ந்தார்கள்.

'ஏதோ பேசணும்னு சொன்னீங்களே?'

'அது ஒண்ணுமில்ல.  உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன?  உங்களுக்கு தெரிஞ்ச மைதிலியோட ஜாதகம் எங்காத்துக்கு வந்தது.  அதைப் பத்தி பேசலாம்னுதான்...'

முரளி இழுக்கும் போதே ஸ்ரீதரின் புருவம் சற்று உயரந்தது.  கொஞ்சம் ஷாக் கூட.

'மைதிலீஸ்?'

முரளியே தொடர்ந்தான்.  மைதிலியின் படத்தைப் பார்த்தது அவளை பிக்‌ஷேஸ்வரன் ஆஃபீஸில் சந்தித்தது, பிறகு ஸ்ரீதரிடம் வந்தது எல்லாவற்றையும் ஒரு அட்வெஞ்சர் போல விவரிக்கிறான்.

'அவளை நான் காதலிக்கிறேன்' என்று வெளிப்படையாகவா சொல்ல முடியாமல் தயக்கம் ஸ்ரீதரிடம்.   மனதில் சற்று இறுக்கம்.  அடக்கிக் கொள்கிறான்.

'மிஸ்டர் முரளி.  நான் என்ன செய்யணும்?  இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?'

'ஸ்ரீதர் சார், மூணு மாசத்திற்கு முன்னாடி பிக்‌ஷேஸ்வரன் ஆஃபீஸ்ல வந்த போது அந்த மைதிலி லேடிய பார்த்தேன்.  அப்போ பேசாட்டியும் கூட, ஆனஸ்ட்லி ஸ்பீக்கிங், சட்டுனு என்னவோ அவங்களோட முகம் பிடிச்சிருந்தது.  அப்ப அதை நான் ஸீரியஸா எடுத்துக்கல.  ஆனா தி ஸேம் மைதிலி ஜாதகம் எங்காத்த தேடி வந்தோண்ண ஒரு ஸென்டிமென்டல் ஃபீல்.  அதுல எக்ஸைட் ஆகித்தான் அவங்கள கிட்டக்க பார்க்கணும், ரெண்டு வார்த்தை அவங்களுக்கு தெரியாமையே பேசிட்டு வரணும்னு அங்க போனேன்.  ஏதோ பேச்சு உங்க பக்கம் திரும்பிச்சு.  சரி, நாமதான் ஏற்கனவே உங்க கிட்ட பேசியிருக்கோமே, உங்க கிட்டேயே மைதிலிய பத்தி தெரிஞ்சுக்கலாமேன்னு வந்தேன் இன் ஃபேக்ட் ஒரத்தநாடு ஸிமெண்ட்ஸ் ஜஸ்ட் அ டூல்.'

சொல்லிவிட்டு முரளி சிரிக்கிறான்.  பேருக்கு ஸ்ரீதரிடமிருந்தும் ஒரு நாடக சிரிப்பு.

'நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லலையே மிஸ்டர் முரளி?'

'ஏதோ ஒரு தைரியத்துல மைதிலிகிட்ட உண்மைய சொல்லாம அசடு வழிஞ்சிட்டு வந்துட்டேன்.  இப்ப நெனச்சா கில்ட்டியா இருக்கு.  அவள பொண் பார்க்க பேரண்ட்ஸோட அவாத்துக்கு போகணும்.  பயமா இருக்கு இப்ப?'

மீண்டும் சிரிப்பு முரளியிடமிருந்து.

'ஸ்டில் யூ ஹாவ் நாட் கம் டு தி பாயிண்ட்.  இந்த விஷயத்துல நான் என்ன பண்ணனும்னு எதிர் பார்க்கறீங்க?'

'பார்த்தீங்களா பார்த்தீங்களா.  கோர்ட்டுல க்ராஸ் எக்ஸாமினேஷன் மாதிரி கேட்கறீங்களே.  உங்களுக்கு தான் மைதிலிய நன்னா தெரியுமே.  எங்கேயாவது ப்ரொபோஸல் ஸ்ட்ரக் ஆனா நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்.'

வந்த கோபத்திலும் சிரிப்பு ஸ்ரீதரிடமிருந்து.  'என் கிட்டேயே வந்து உதவி..'

'உங்களுக்கு மைதிலிய பிடிச்சிருக்கா?'

'கிண்டல்தான சார் வேண்டாங்கறது.  பிடிக்காட்டி உங்களோட இவ்வளவு விலாவாரியா பேசிண்டிருப்பேனா.'

'லுக் மிஸ்டர் முரளி.  எனக்கு மைதிலியோட குணம் தெரியும்.  அவ மனசுல ஒண்ணு விழுந்துடுத்துண்ணா யார் பேச்சையும் கேட்க மாட்டா.  வெரி ஸ்ட்ராங் லேடி இந்த விஷயத்துல.  அவளுக்கும் உங்கள பிடிச்சிருந்தா தட் இஸ் எ டிஃபெரெண்ட் மேட்டர் ஆல்டுகெதர்.'

'அப்ப உங்க உதவி ப்ரயோஜனப் படாதா?  சார், என் கிட்டேயே மைதிலி கேள்வி கேட்டா தைரியமா பேசி தீர்த்துடுவேன்.  ஆனா, காரணமே சொல்லாம வேண்டாம்னு சொல்லிட்டா எனக்கும் என் அப்பா அம்மாக்கும் டெலிகேட்டா போகுமேன்னு பார்க்கறேன்.  ஐ லைக் ஹர்ங்கற நிலையிலேந்து, ஐ டோண்ட் வாண்டு மிஸ் ஹர்ங்கற நிலையில நான் இருக்கேன்.  இஃப் பாஸிபிள் அண்ட் இஃப் நீடெட், ப்ளீஸ் உங்க ஃபரெண்டு கிட்ட எடுத்து சொல்லலாமேன்னு தான் கேட்கறேன்.'

அதற்கு மேலும் ஸ்ரீதர் இது குறித்து முரளியுடன் பேச விருப்பப் படவில்லை.

'ஓகே.  அந்த சமயத்தில சொல்லுங்க.  பார்க்கலாம்.'

'த்தேங்க்ஸ் சார்.  இந்த ஒரத்தநாடு ஸிமெண்ட்ஸ் கேஸ நீங்கதான் எடுத்துக்கணும்.  நாம தான் அடிக்கடி கேஸ் விஷயமா பார்ப்போமே.'

கைகுலுக்கி விட்டு முரளி கிளம்பிய போது ஏதோ பித்து பிடிச்ச உணர்வு ஸ்ரீதரிடம்.

தொடரும்..

No comments:

Post a Comment