Sunday, November 28, 2021

திருப்பூர் திருமுருகன் பூண்டி கோயில்.

 லஷ்மி தேசிகன்

#எனக்கு பிடித்த கோயில்.

கும்பகோண கோவில்கள், குருவாயூர், வடக்கனாதன் கோவில், கிருஷ்ணன் கோயில் , கர்நாடக, சாமுண்டி hills, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் எல்லாம் பார்த்தாயிற்று.

நினைத்தால் திருப்பதிக்கு  கிளம்பி விடுவேன் நான்.   2005 முதல் விடாமல் வருடம் இருமுறை அல்லது 3 முறை செல்வேன்.எப்பவுமே  பர்வீன் travels தான்.என்னோட choice. 

நான் திருப்பதிக்கு போக வேண்டும் என்றால், பழனிக்கு போனால் தான்  திருப்பதிக்கு போகும் பிரப்த்தம் கிடைக்கும்.

ஒவ்வொரு முறையும் பழனிக்கு , அடிவாரத்திலிருந்து , யானை தாளத்தில் நடந்தே தான் செல்வேன்.( Winch இல் போக பிடிக்காது.)

 எங்கிருந்து energy கிடைக்கும் என்றே தெரியாது. மலை ஏறி இறங்கிய களைபே இருக்காது

ஆனால் நான் இங்கு குறிப்பிட போகும் ஆலயம்

 திருப்பூர் திருமுருகன் பூண்டி கோயில். 

2000 வருஷம் பழமை வாய்ந்த கோயில். இந்த கோவிலை பற்றி  சுந்தரர் 10 தேவாரப் பதிகங்கள் பாடியுள்ளார்.

இது நேஷனல் monument இல் ஒன்று.

 வாங்க இந்த கோயிலின் சிறப்பை பற்றி பார்ப்போம்.

திருப்பூரில் 20 வருஷங்கள் வசித்து இருக்கிறேன்.

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களுள் இந்த கோவிலும் ஒன்று.

 வண்டியை பார்க் செய்துவிட்டு கோவிலுக்கு உள்ளே செல்லலாம் என்று திரும்பிய பொழுது ஒரே அலறல் சத்தம். 

திரும்பி பார்த்தால்  ரெண்டு மனநலம் பாதிக்க பட்டவர்களை இரும்பு சங்கிலியால் மண்டப தூணில் கட்டி இருந்தார்கள். பிறகு விசாரித்து தெரிந்து கொண்டதில், இந்த கோயில் தீர்த்தம் , மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஒரு நல்ல மருந்து என்பது தெரிய வந்தது.

இவர்களை தாண்டி சென்றால் கோவிலின் நுழைவு வாயிலின் முன்னே ஒரு அரசமரமடியில் ராஜா கணபதி இருப்பர்.

துவாஜகம்பத்தை வணங்கி உள்ளே சென்றால், மூலவர் முருகனது சுவாமி சந்நிதி.

இந்த கோவிலில் முருகனது சுவாமி , முயங்குபூண்முளை அம்மனும் மேற்கு பார்த்து இருப்பர்.

முருகா நாத சுவாமி சந்நிதிக்கு அருகே முருகன், சிவனை தொழுது தெற்கு பார்த்து இருப்பர்.

 முருகன்,  திருச்செந்தூரில்  வதம்  செய்து விட்டு நேர இங்கு  வந்ததாக இதீகம்.

இக்கோவிலில் மட்டும், முன்னால் தெரியும் வகையில் ஐந்து முகங்கள் அமைந்துள்ளன. ஆறாவது முகம், பின்னால் அமைந்துள்ளது. . இம்முகத்தை நேரடியாக பார்க்கக் கூடாது என்பதால், கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும் வகையில் அமைந்துள்ளது. 

வள்ளி, தெய்வானையுடன் ஒரே சன்னதியில் அமைந்துள்ளதும், முருகன் பிடித்த லிங்கமும் சுப்ரமணியர் கருவறையில் உள்ளது.

முருகனையும், முருகனாதஸ்வமியையும் தரிசித்துவிட்டு வலம் வந்தால், நவகிரகங்கள், அருகிலேயே தனியாக  , சிரித்த முகத்துடன் சனீஸ்வரர், பைரவர் சந்நிதி, வேடுபறி, பஞ்ச லிங்கம், தக்ஷிணாமூர்த்தி, பவானிஸ்வரர், மேற்கு பார்த்த சூரியன் சந்நிதி,  ஷண்முக தீர்த்தம், அருகில் ஆஞ்சநேயர், மியங்கு பூண்முலை அம்மன் சந்நிதி, நாயன்மார்கள்   தரிசித்து வழியே வந்தால், பிரம்ம தீர்த்தம், ஞான தீர்த்தம், பின் கேது கோயில் (  மாதவனேஸ்வரர் கோவில் . இந்த கோவில்  மேற்கூரையில் பெரிய நந்தி சிற்பம் உள்ளது. )

தீர்த்தம்

இந்த கோவிலின் தீர்த்தம் ஷண்முக தீர்த்தம்

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, தீர்த்தங்களில்  குளித்து,  முருகனை வழிபட்டால் மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை.

இப்படி வருபவர்களுக்கு, அமைதியான சூழலில் தனியாக தங்கும் விடுதி , அதை சுற்றி பூங்காவும் அமைத்து பராமரித்து வருகிறார்கள்.

வேடுபரி

தன் நண்பரான சேரமான்பெருமாள் தந்த பெருஞ்செல்வத்துடன் இவ்வழியே பயணித்துக் கொண்டிருந்தாராம் சுந்தரமூர்த்தி நாயனார். அவருடைய தெள்ளுதமிழ் பாடல்களைக் கேட்க விரும்பிய இறைவன், தமது திருவிளையாடலைத் துவக்கினார். வேடன் வடிவில் வந்து செல்வங்களை அபகரித்துச் சென்றார். இதனால் ஆத்திரமும் ஆதங்கமும் கொண்ட சுந்தரர், இந்தத் தலத்தின் கோயிலுக்கு வந்து பாடல்கள் பாடி இறைவனிடம் முறையிட, அவர் பறிகொடுத்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தன என்கிறது ஸ்தல புராணம்.

சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

இரவு பள்ளியறை நிகழ்ச்சி தினமும் நடைபெறும்.  கோவில்  கமிட்டியை சேர்ந்த 50 பேர்  தவறாமல்  வந்து தேவாரம் பாடி உற்சவரை பள்ளியறையில் எழ செய்து  , ஊஞ்சலில் உறங்க வைப்பது கண்கொள்ளா காட்சி.

No comments:

Post a Comment