ஏன்?எதற்கு? எப்படி? 25
வெங்கடேசன் வரதராஜன் - நன்றி இணையம்
பறவைகள் எப்படி தங்கள் உடல் எடையோடு வயிற்றில் உள்ள முட்டைகளையும் சுமந்து கொண்டு பறக்கின்றன?
பதில்: பறவைகளின் வயிற்றில் முட்டை உருவானவுடன், அதன் வழக்கமான எடையை விட சற்றே கூடுதலாகத்தான் இருக்கும். ஆனாலும் இந்த எடை அவ்வளவு அதிகமாக இருக்காது.
அநேகப் பறவைகளின் பேறுகாலம் 5 நிமிடங்களுக்குள்தான் இருக்கும். இதில் வான்கோழிக்கு மட்டுமே அதிகபட்சமாக இரண்டு மணி நேரம் பேறுகாலம் இருக்கும். அதாவது முட்டை உருவாகி, எல்லாப் பறவைகளின் வயிற்றிலும் அதிகபட்சமாக 24 மணி நேரத்துக்குத்தான் வயிற்றுக்குள் இருக்கும். இதனால் இந்த எடையைத் தூக்கிக் கொண்டு அவை பறப்பதற்கு அவசியமே இருக்காது.
இதனால் இந்த எடை அவற்றை மிகவும் பாதிப்பதில்லை. முட்டையை ஏதாவது கூட்டில் இட்டவுடன் பறவையின் வயிறு காலியாகி மீண்டும் அது பழைய எடைக்குத் திரும்பி விடும்.
இதனால் 90 சதவீதப் பறவைகள் வயிற்றில் முட்டையுடன் பறப்பதில்லை என்பதுதான் உண்மை
ஏமாறும் காக்கைகள் ஏமாற்றும் குயில்கள்!
இந்த புவியில் வாழும் அனைத்துப் பறவைகளுமே தம் காதல் மற்றும் காம சங்கதி களை முடித்துக் கொண்ட பின்பு தம் வாரிசுகள் உருவாவதைக் காண ஆர்வத்துடன் இருக்கும். சில பறவை இனங்களில் ஆண் பறவைகள் ஜோலி முடிந்ததும் ஜகா வாங்கி விடுவதுண்டு. இன்னும் சில பறவையினங்களில் ஆண் பறவை கூடவே இருந் தாலும் கூட, வாரிசுக்கான சேவையை விரும்புவதில்லை. சொற்ப இனங்களில் மட்டுமே அடைகாத்தலிலும், பிறக்கும் குஞ்சுகளின் பராமரிப்பிலும் ஆண் பறவைகள் பங்கேற் கின்றன. ஆனால், எந்தவொரு இனத்திலும் பெண் பறவை தன் தாய்மைக் கடமையை உதாசீனப்படுத்துவ தில்லை. இதில் குயில்கள் மட்டுமே விதிவிலக்கு!
பொதுவாக குயில் களுக்குப் பாடுவதில் உள்ள ஆர்வம், வாரிசு பராமரிப்பதில் இல்லை. எனவேதான் குயில்கள் எதுவும் கூடு கட்டுவதில்லை. தாம் வாழ்வதற்கு மட்டுமல்ல, சுயம்வரம் முடித்த சோம்பேறிக் குயில்கள், தாம் முட்டை இடுவதற்கும் கூட எந்தவொரு கூட்டையும் நிர்மாணிப்பதில்லை. இரவல் கூடுகளையும், இரவல் பெற்றோர்களையும் யாருக்கும் தெரியாமல் நியமித்துவிட்டு, எளிதில் கடமையிலிருந்து எஸ்கேப்.
இனச்சேர்க்கை புரிந்த பெண் குயில்கள் சில நாட்களில், முட்டையிடத் தொடங்கும். இவை சீசனுக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் மட்டுமே இடும். வேறு பறவையின் கூட்டில் தான் இந்த முட்டைகளை குயில்கள் இடுகின்றன. எந்தப் பறவையின் கூட்டில் குயில்கள் முட்டையிடுகின்றன என்பது நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. நம்ம ஊரில் காக்கைகளின் கூட்டில்தான் குயில்கள் முட்டையிடுகின்றன. ஆனால், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் மைனாவின் கூட்டில் முட்டையிடுகின்றன. நம் நாட்டிலேயே கூட வனக் குயில்கள் அண்டங் காக்கைகளின் கூடுகளில் முட்டையிடுகின்றன. இதேபோல் நம் நாட்டில் மானிட அருகாமையில் வாழும் குயில்கள் கூட ஆந்திராவில் ஒரு பறவையின் கூட்டையும், தமிழ்நாட்டில் வேறு ஒரு பறவையின் கூட்டையும் தேர்வுசெய்து முட்டையிடுகின்றன.
குயில்கள் தாம் வாழும் பிரதேசங்களில் முட்டை யிடுவதற் கான வாடகைப் பெற்றோர் கூட்டினை அவ்வளவு எளிதாகத் தேர்வு செய்து விடுவதில்லை. ஆதிகாலத்தில் குயில்கள் இடும் முட்டைகளின் பருமனைப் பார்த்த உடனேயே வாடகைப் பெற்றோரால் நிராகரித்து ஒதுக்கப்பட்டன. அப்புறம் சம பருமனில் முட்டையிடும் பறவைக் கூடுகளைத் தேர்வு செய்தன. இங்கும் ஒத்த பருமன் இருந்து, வடிவமைப்பில் வேறு பரிமாணத்தை முட்டை கொண்டிருந்தால், அங்கும் அதே கதிதான். நிராகரிப்புதான்! அப்புறம் முட்டையின் நிறம் மற்றும் அதிலுள்ள வண்ணத் தீற்றல்களுக்காகவும் உதாசீனப்படுத்தப்பட்டன. இந்நிலையில்தான் முட்டையின் பருமன், வடிவமைப்பு, நிறம், அதிலுள்ள வண்ணத் தீற்றல்களை ஒத்த முட்டையிடும் ஏமாளிப் பறவையின் கூட்டைக் கண்டு பிடிப்பது கஷ்டம் என்பதை குயில்கள் உணர்ந்து கொண்டன. தேடல் தோல்வி!
எனவேதான் இவற்றின் முட்டையின் கூறு வாழும் சூழலுக்கேற்ப மாறத் தொடங்கின. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட தலைமுறைகளில் குயில் முட்டைகளின் பல்வேறு குணாதிசயங்கள் தலைமுறை தலைமுறையாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு இன்றைய சாதகமான சூழலை எட்டியிருக்கிறது. இது நம் இந்தியக் குயில்களுக்கு மட்டுமில்லை, உலகம் முழுவதும் வாழும் எல்லா குயில்களுக்கும் இதே கதிதான். இப்படி வம்சாவளியாகத் தீர்மானிக்கப்பட்ட ‘ஃபோஸ்டர்’ பெற்றோர் கூட்டில்தான் குயில்கள் அனைத்தும் சாதுர்யமாக முட்டையிட்டு மகிழ்கின்றன.
தமிழ்நாட்டுக் குயில்களைப் பொறுத்தவரையில் காக்கைகளின் கூடுகளின்தான் சீசன் தோறும் முட்டையிடுகின்றன. குயில் மற்றும் காக்கைகளின் இனப்பெருக்க காலம் ஒன்றாகவே இருக்கிறது. இத்தருணத்தில் காக்கைகள் தம் வாரிசுகளுக்காக ஒரு முரட்டுக் கூட்டை கட்டிக் காத்திருக்கும். ஒற்றை முட்டை இட்டவுடன் தாயும் தந்தையும் கூட்டையும் முட்டையையும் காவல் காப்பது இயல்பு. எனவே காவல் பறவையை ஏமாற்றித்தான் குயில் அதன் கூட்டில் முட்டை இட முடியும். எனவே, ஆண்குயில் காக்கையின் கூட்டிற்கு அருகில் சென்று பல்வேறு போக்குக் காட்டும். இதனால் கோபமுறும் காவல் காக்கை அக்குயிலைத் துரத்தத் தொடங்கும். இத்தருணத்தில் பெண்குயில் காக்கையின் கூட்டில் முட்டையை இட்டுவிட்டுப் பறந்துவிடும்.
புதிதாகக் கட்டிய கூட்டில் காக்கை முதல் முட்டையை இட்டவுடன், இரண்டு நாட்கள் கழித்துத்தான் குயில்கள் முட்டையிடுகின்றன. சமயத்தில் காக்கை முட்டைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந் தால், அவற்றுள் ஒன்றை அலகால் உந்திக் கீழே தள்ளிவிட்டு தம் முட்டையை இட்டு வைக்கும். காக்கைக் குஞ்சுகளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே பிரசவிக்கும் குயில் குஞ்சுகள், தம் வாழ்வியல் பாதுகாப்பு நிமித்தம் காக்கைக் குஞ்சுகள் போலவே கரடுமுரடாய் ஆரம்பத்தில் கத்துகின்றன. வாழ்வியல் சாதுர்யம்!
குயில் பாட்டு முடிந்தது.
No comments:
Post a Comment