Friday, November 26, 2021

கனியுமோகாதல்_28

கனியுமோகாதல்_28

தேவகி ஹாஸ்பிடல் ரூம் நம்பர் நூற்று ஒன்பதுக்கு மைதிலி வரும்போது சந்தர் அங்கு இல்லை.

bபெட்டில் கொஞ்சம் ஸ்லான்டிங்காக சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தார் பிக்‌ஷேஸ்வரன். கண்களை மூடிக் கொண்டு.

'ரெண்டு நாளிலேயே இப்படி உடம்பு குறுகிப் போயிட்டாரே'

சட்டென்று மனதில் பட்டது அவளுக்கு எண்ணமாக வந்தது.

எப்பேர்ப்பட்ட ஒரு பர்ஸனாலிடி அவர்!  அவருடைய ராஜநடையோடு கூடிய கம்பீரம் கண்ணில் நிழலாடுகிறது அவளுக்கு.  கோர்ட் வராண்டாக்களில் அவருக்கு இணையாக நடப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான்.  அவர் நடைக்கு இணையாக ஓடிக்கொண்டே உத்தரவுகளைப் பெற வேண்டும்.

மைதிலி நுழைந்த உணர்வில் கண்களைத் திறக்கிறார் பிக்‌ஷேஸ்வரன்.  சைகையில் வா என்கிறார்.  ஸ்டூலின் பக்கம் கண்ணைத் திருப்புகிறார்.  அதில் மைதிலி உட்காரவேண்டுமாம்.  இப்படித்தான் அதை புரிந்து கொள்ள வேண்டும்.

மைதிலி உட்காரவில்லை.  ஏதோ ஜூனியர்ஸ் மீட்டிங்குகள் அல்லது நீண்டுகொண்டிருக்கும் டிஸ்கஷன்ஸ் நேரங்கள் தவிர அவர் முன் என்றுமே உட்கார்ந்ததில்லை மைதிலி.

'எப்படி இருக்கேள்?  டாக்டர் என்ன சொன்னார்?  சந்தர் இல்லையா?'

பதில்கள் அவர் மனதைத் தாண்டி வரவில்லை.  புரிந்து கொள்கிறாள்.

'சரியாயிடுவேள்'

சோர்வில் தெம்பற்றுக் கடந்த அவருடைய கையை பற்றி சொல்லிவிட்டு கையை எடுத்துக் கொள்கிறாள்.

'பார்க்கலாம்' என்று நம்பிக்கையில்லாமல் ஒரு ஸர்காஸ்டிக் சிரிப்பு சைகை.

'பக்கத்துல வா'.  க்ஷீணமான குரலில் அவளை அழைக்கிறார்.

அவள் தலையில் கையை வைத்து ஆசி.  முகத்தில் சிரிப்போடு.கோர்ட்டு சமாச்சாரங்கள் எல்லாம் நன்னா போயிண்டிருக்கா?'

கோர்ட்டுகளில் நான்கைந்து அடி தூரத்தில் தினமும் ஜட்ஜுகள் மெல்லிய குரலில் பேசுவதை புரிந்து கொள்ளும் அவளுக்கு அவருடைய க்ஷீணமான குரல் புரியாதா என்ன?

'எதுக்கு இப்ப அந்த கவலையெல்லாம்?  நான்தான் பார்த்துக்கறேனே.  நீங்க முதல்ல உங்க உடம்ப பார்த்துக்கோங்கோ.'

'விஏஓ கேஸ் என்ன ஆச்சு?'

அவர் இருக்கும் அந்த நிலையிலும் அந்த ஆதங்க கேள்வி அவளுக்கு வியப்பூட்டியது.

'இப்ப ஏன் அதெல்லாம்?  ஸ்டே வாங்கிட்டோம்.'

'ஸஸ்பென்ஷன் ஆர்டர ஸெட் அஸைட் பண்ண முடியலையா?'

'இதுவே ரொம்ப கஷ்டப்பட்டு GP ய தண்ட கட்டிண்டு பண்ண வேண்டியிருந்தது.  கவர்மெண்ட் ஸைடுல ஸ்டேவ ஒடச்சிட்டு மேற்கொண்டு வந்தா பார்த்துக்கறேன்.'

'ரொம்ப நல்லவன் அந்த விஏஓ.  காசு அவனா கொடுத்தா வாங்கிக்கோ.  தராட்டியும் பரவாயில்ல.  ஆனஸ்டா இருக்கறவாளுக்கு சோதனைனு வந்தா பணம் காசு பார்க்காம கேஸ்கள எடுத்து முடிச்சுக் கொடு.'

'சரி சார்'

'அப்பறம் ஒண்ணு.  ஒருவேள எனக்கு ஒண்ணுன்னா சந்தர மாத்திரம் எப்படியாவது பார்த்துக்கோ.  என்னமோ கிரிக்கெட்டுல மாத்திரம்தான் அவனுக்கு அலாதி இஷ்டம்.  இந்தியாக்கு ஒண்ணு ரெண்டு டெஸ்டாவது ஆடணுங்கற ஆசை.  அதனால அவன் வேற விஷயங்கள்ல கவனம் செலுத்த மாட்டேங்கறான்.  எவ்வளவு சொன்னாலும் புரிய மாட்டேங்கறது அவனுக்கு.  நீயும் சொல்லு.'

'உங்களுக்கு ஒண்ணும் ஆகாது சார்.  எங்க கிட்ட அடிக்கடி சொல்வேளே 'bபீ பாஸிடிவ்னு'.  அதையே தான் உங்களுக்கு நான் சொல்ல முடியும்.  தைரியமா இருங்கோ சார்.'

'உனக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் புது கேஸ்கள் எதையும் எடுத்துக்காதே.  பொண் கொழந்த நீ.  இந்த ப்ரொஃபஷன் ஒரு போதை மாதிரி தான்.  புகழ் கெடைக்க ஆரம்பிச்சுதுன்னா போயிண்டே இருக்க தோணிடும்.  விட மனசு வராது.  ஓரளவு வருமானம்ங்கற அளவுக்கு வெச்சிக்கோ.  ப்ராக்டீஸ மாத்திரம் விட்டுடாத.'

'ஐ டேக் யுவர் அட்வைஸ் ஸார்'.

'உன் கிட்ட ஒரே ஒரு வீக்னஸ் தான்.  யாராவது அழுதா நீயும் கரஞ்சுடற.  அது மாதிரி இருக்க கூடாது, என்ன?'

'சமீபமா இந்த ப்ரொஃபஷன்ல பொய்கள்தான் பிரதானமா இருக்கு.  க்ளையண்டுகள் நம்ம கிட்டயே பொய் சொன்னாலும் அத எல்லாத்தையும் உண்மைனு அடிச்சு சொல்றோம்.  சட்டங்கள அதுலு இருக்கற லூப்ஹோல்ஸ தான் தேடறோம்.  ஆனா உண்மையா நாம சட்டங்கள் மேல உள்ள பார்வைகளத்தான் விசாலமாக்கணும்.  இன்டர்ப்ரெடேஷன்ஸ்  ஆர் டிஃபரெண்ட் ஃப்ரம் லூப்ஹோல்ஸ்.  புரியறதா நான் சொல்றது.'

'புரியறது சார்.  நான் உங்க சிஷ்யைனு கண்டிப்பா ப்ரூஃப் பண்ணுவேன்.  உங்க ஆசீர்வாதங்கள் இருக்கும்போது என்ன கவலை எனக்கு.'

'இந்த வக்கீல் தொழிலையும் டாக்டர் தொழிலையும் மட்டும் தான் ப்ராக்டீஸ்னு சொல்றோம்.  ஏன் தெரியுமா.  எப்போதும் டச்சிலேயே இருக்கணும்.  gகேப் விட்டு போச்சுன்னா திரும்பவும் ஒண்ணாங் க்ளாஸ் தான்.'

'உன் ஃப்ரெண்டு ஸ்ரீதர் என்ன பண்றான்?'

'அவன பார்த்தே மாசங்கள் ஆறது சார்.'

'அவனும் நல்ல இன்டெலிஜெண்ட் தான்.  இன் ஃபேக்ட் ஆனஸ்ட்லி ஹீ இஸ் மோர் க்ளெவர் தேன் யூ. அவனை நன்னா கொண்டு வரணும்னு நெனச்சேன்.  ஆனா தனியா போய் சாதிக்கணும்னு அவனுக்கு மனசுல தோணிண்டிருந்த புரிஞ்சிண்டேன்.  நாம எதுக்கு அதுக்கு குறுக்க நிக்கணும்னு தான் அவன ஹாஃப் ஹார்ரட்டடா அனுப்பிச்சேன்.'

'அவனும் உங்க ப்ராடக்ட் தான.  நன்னா வருவான்.  கவலப் படாதீங்கோ.'

'எனக்கு ஒரே ஒரு ஆசைதான் மைதிலி.  கோர்டுல வாதாடிண்டு இருக்கும்போது சாஞ்சு விழணும் அப்பவே உசுரு போகணும்.  இத பகவான் அனுக்ரஹிச்சா போதும்.'

ப்ரொஃபஷன் மேல என்ன ஒரு pபேஷன்?  அவரோடு பல சந்தர்பங்கள் உரையாடியிருக்கிறாள்.  இன்று அவர் சற்று மன தைரியம் இல்லாத பேச்சுகள் அவள் மனதை பிழிந்து கொண்டிருந்தன.  கண்களில் கண்ணீர் முட்டுகிறது.  ஆனாலும் அடக்கிக் கொள்கிறாள்.

இப்போது அவர் முன் நாம் கலங்க கூடாது.  அவர் அவநம்பிக்கைகளை போக்கும் விதத்திலேயே தன் உடல் மொழிகள் இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.

'யார் நீங்க?  அவர கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க.  ஏதோ விஸிடிங் அவர்ல வந்தா பேசிகிட்ட இருக்கணும்னு நெனைக்காதீங்க.  பேஷண்ட் நேத்திக்கு இருந்த நிலைக்கு பேசவே கூடாது.  அவருக்கு ஸ்ட்ரெயின் கொடுக்காம எடத்த காலி பண்ணுங்க.  அவர் டிஸ்ச்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தோண்ண மணிக் கணக்குல பேசுங்க, யார் வேணாங்கறது?'

சரியான டோஸ் மைதிலிக்கு ஸ்டாஃப் நர்ஸிடமிருந்து.

'சரிப்பா, நான் வரேன்.  கவலப் படாம இருங்கோ.'

'அப்பாஆஆஆஆஆ!'. அந்த அழைப்பில் ஒரு ஆனந்தம் அவருக்கு.

செல்லமாக ஒரு குட்டு மைதிலியின் தலையில்.  அந்த குட்டு அவளுக்கும் ஒரு சிரிப்பை கொடுத்தது.

ரிஸப்ஷனுக்கு வருகிறாள்.  தேக்கி வைத்த கண்ணீர் பீரிட்டு அவள் கைக்குட்டையில் தஞ்சம் அடைகிறது.

'சாரி அக்கா?  எப்ப வந்தேள்?  டாக்டர் ஒரு இஞ்சக்‌ஷன் வாங்கிண்டு வர சொன்னார்.  ஆர்ஆர் ஃபார்மஸி வரைக்கும் போகும்படியா போச்சு.'

'பார்த்தேன் சந்தர் அப்பாவ.  சிரமத்தோட தான் பேசினார்.  ஐ பெட், ஹீ வில் பீ ஆல்ரைட்.  இன்னிக்கு என்னவோ நான் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணியிருக்கேன் சந்தர்.  ஐ ரிஸீவ்ட் அபண்டண்ட் ப்ளஸ்ஸிங்க்ஸ் ஃப்ரம் ஹிம்.'

சொல்லி விட்டு குனிந்து கொள்கிறாள்.  அன் கன்ட்ரோலபள் டியர்ஸ்.  இந்த முறை அவள் புடவைத் தலைப்பு வழிந்த கண்ணீரை ப்ளாட்டிங் பேப்பரைப் போல ஏற்றுக் கொள்கிறது.

'அக்கா, கூல்.  நீங்க எனக்கு தைரியம் கொடுக்கணும்.  நீங்களே இப்படி...'

'சாரி, கொஞ்சம் எமோஷனலா ஆயிட்டேன்.  சாரி, இப்போ நார்மலாயிட்டேன்.  கவலப் படாத.'

'நீங்க ஆஃபீஸ் போறேளா?  எனக்கு ஒரு உதவி.  போய் நடராஜ அனுப்பறேளா?'

'ஓ.  ஷ்யூர்.'

'அப்பறம் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.  க்ளையண்டுகளோ அப்பாவோட மத்த ஜூனியர்ஸ்களோ இங்க வர வேண்டாம்னு ஸ்ட்ரிக்டா சொல்லிடுங்கோ.  அவாளெல்லாம் பார்த்தா அப்பா எமோஷனலாகி விடுவா.'

'சரி சந்தர்.  சொல்லிடறேன்.'

'அம்மா கிட்ட அப்பா நன்னாயிண்டு வரார்னு சொல்லிடுங்கோ.'

'கண்டிப்பா'

 TVS 50 இப்போது தேசிகாச்சாரி ரோட்டை நோக்கி.

தொடரும்....

No comments:

Post a Comment