Friday, November 26, 2021

கனியுமோகாதல்_31

கனியுமோகாதல்_31

முரளியிடம் ஒரு விதமான மாற்றத்தை கண்டுபிடித்து விட்டார் சீதாராமன்.

'டேய், அந்த பொண்ண பார்த்துட்டு வந்திருக்கேன்னு தெரியறது.  ஆம் ஐ ரைட் முரளி.'

'எஸ் பா.  நேத்திக்கு சாயந்திரம் பிக்‌ஷேஸ்வரன் ஆஃபீஸ்ல.'

'மஸ்ட் பி இன்ட்ரெஸ்டிங் தென்'

'ஆமாம்ப்பா.  கொஞ்சம் த்ரில்லிங்காகவும் இருந்தது.  அவளுக்கு நான் யாருன்னு தெரியாம அவ கேஷுவலா ஒரு க்ளையண்ட டீல் பண்ற மாதிரி பேசினத நெனச்சு நெனச்சு சிரிச்சிண்டே இருக்கேன் இன்னும்.'

'ஸோ, அப்ப அந்த பொண்ணையே முடிச்சுடலாமா உனக்கு?'

'ஐ திங்க்... எஸ்.  ஆனா இன்னும் ரெண்டு மூணு நாள் கழிச்சு சொல்றேனே.'

'ஏண்டா, இன்னும் அவளப் பத்தி தெரிஞ்சுக்கப் போறியா?'

'அப்படித்தான் வெச்சுக்கோங்களேன்.'

'எனக்கென்னவோ நீ பண்றது சரியா படல.  நீ செய்யறது அந்த பொண்ண நோட்டம் பார்க்கறது.  அது மாதிரி பண்றத எந்த பொண்ணும் லைக் பண்ணமாட்டா.  கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சா அவ மனசு ரொம்ப கஷ்டப்படும்.'

'ஏம்ப்பா, ப்பேரண்ட்ஸ் வரன்கள பார்க்கும்போது நாலு எடத்துல அவா குடும்பத்த பத்தி  விஜாரிக்கறது இல்லையா?  அது மாதிரிதான இதுவும்.  இதுல என்ன தப்பு இருக்கு.'

'பையன பெத்தவா விசாரிக்கறதுக்கும் நீயே விசாரிக்கறதுக்கும் வித்யாசம் இருக்கு.  பொண்ணு அழகா இருக்கா இன்ட்டெலிஜெண்டா இருக்கா.  அதோட நிறுத்திக்கணும்.  உனக்கு ஏதாவது டவுட்ஸ் இருந்தா எங்க கிட்ட சொல்லு.   தேவையில்லாம துருவித் துருவி நீயே விசாரிக்கப் போய் நல்ல வரன கெடுத்துக்காத.  அப்புறம் க்யூரியாஸிடி கில்ஸ் தி cகேட் மாதிரி ஆயிடும்.  இதுக்கே நாங்க அனுமதிச்சது தப்போன்னு தோணறது.'

'நான் பார்த்துக்கறேம்பா.  ஹேவ் ட்ரஸ்ட் இன் மீ.  ஜஸ்ட் டூ dடேஸ்.  சொல்லிடறேன்.'

'எனிவே, சொல்லறத சொல்லிட்டேன்.'

அதற்கு மேலும் முரளியோடு பேச சீதாராமனுக்கு விருப்பமில்லை.  நகர்ந்து கொள்கிறார்.

'ஸ்ரீதருக்கும்  மைதிலிக்கும் ஏதோ ஒரு ஈகோ க்ளேஷ் இருந்திருக்கணும்.  ஸ்ரீதர் தனியா போனதுக்கு எனக்கென்னவோ மைதிலி காரணமா இருப்பாளோன்னு ஒரு டவுட்.'

'ஸ்ரீதரை பத்தி பேசும்போது முதல்ல அவன்னு தான் ஆரம்பிச்சா.  அப்புறம் அவர்னு கரெக்ட் பண்ணி பேசினா.  ஸம்திங் இஸ் ராங் ஸம்வேர்.'

'போன தடவ போனபோது பிக்‌ஷேஸ்வரன் எல்லாத்துக்கும் ஸ்ரீதரத் தான் கூப்ட்டார்.  அப்படி இருந்தவன் ஏன் தனியா போகணும்.'

'எனக்கென்னவோ ஸ்ரீதரைப் பார்த்து டிஸ்க்ரீட்டா மைதிலியப் பத்தி தெரிஞ்சுக்கறது பெட்டர்னு தோணறது.'

'ப்ரொஃபஷன்ல க்ளேஷ் சகஜம்தான்.  பர்ஸனல் லைஃப்புக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைனாலும் தெரிஞ்சுக்கறதுல தப்பு ஒண்ணும் இல்லையே.'

மனம் ஒன்றை தீர்மானித்து விட்டால் எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்தாலும் தீர்மானத்தை ஒட்டியே ஜஸ்டிஃபிகேஷன்கள் இருக்கும்.

'ஆஃபீஸ் போனோண்ண லெட் மீ ஃபிக்ஸ் அப் அபாய்ண்ட்மெண்ட் வித் ஹிம்.'

திட்டமிட்டபடி நான்கரை மணிக்கு ஸ்ரீதர் ஆஃபீஸுக்கு வருகிறான்.

'வாங்க மிஸ்டர் முரளி.  வெரி ஷார்ப் யூ ஆர்.'

'மூணு மாசம் முன்னாடி பார்த்தது.  அதே இஷ்யூக்காக தான் வந்திருக்கேன்.  ஸேம் ஒரத்தநாடு சிமெண்ட்ஸோட எக்ஸைஸ் ப்ராப்ளம் தான்.'

'இன்னுமா நோடீஸ் அனுப்பல.'

'அமிக்கப்ளா போகலாம்னு பார்த்தாங்க.  கவர்ன்மெண்ட பகச்சுக்க வேண்டாமேன்னு பார்த்தாங்க.  ஆனா சரிப்பட்டு வரல போல இருக்கு.'

'அப்ப லீகலா ப்ரொஸீட் பண்ணிடலாமா?  சொன்னீங்கன்னா நாளைக்கே நோடீஸ் தயார் பண்ணிடறேன்.'

'ம்ம்ம்...'

'அது இருக்கட்டும், நான் இங்கே இருக்கேங்கறது எப்படி உங்களுக்கு தெரியும்.'

'பிக்‌ஷேஸ்வரன் ஆஃபீஸுக்கு போனேன்.  அந்த லேடி, பேர் மைதிலி, அவங்கதான் உங்க அட்ரெஸ கொடுத்தாங்க.  நீங்க இல்லையான்னு கேட்டேன்.  அவங்க உங்க கிட்டயே போக சொல்லி அட்ரஸ கொடுத்துட்டாங்க.  ரொம்ப ராங்கி பிடிச்சவங்களா இருப்பாங்களோ?'

வேண்டுமென்றேதான் இப்படி ஆரம்பித்தான் முரளி.  பதில் எப்படி வருகிறது என்ற ஆவல் அவன் மனதில்.

'மை அப்படி சொல்லியிருக்க மட்டாளே?  நான் நம்ப தயாரா இல்ல.'

'அது என்ன சார் மை?'

முரளி இப்படி கேட்டவுடன் மூன்றாவது மனிதரிடம் அப்படி மைதிலி பெயரை சுருக்கி சொல்லியிருக்க கூடாது என்பதை புரிந்து கொண்டான் ஸ்ரீதர்.  எப்படியோ சொல்லியாச்சு.  தற்போது அவன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்?

'அதுவா?  நானும் மைதிலியும் டிகிரி படிப்பிலேந்தே ஒண்ணா படிச்சவங்க.  ஏழெட்டு வருஷ பழக்கம்.  சட்டுன்னு எப்போதும் கூப்டறது போல ....'

'நீங்க ரொம்ப ஸாஃப்ட்.  ஆனா அவங்கள பார்த்தா அப்படி தெரியலையே?'

'நோ நோ.  யூ ஆர் ராங்.  அவள மாதிரி ஒரு கைண்ட் ஹார்ட்டட் பர்ஸன பார்க்கறது அபூர்வம்.  அவ ஒரு பெஸ்ட் மோட்டிவேட்டர் ஆல்ஸோ.  அவளோட ஒரு நிமிஷம் பேசினாலே உங்களோட வருத்தங்கள் எல்லாம் போயிடும்.'

'நீங்க தனியா வந்து எத்தனை நாள் ஆகறது.'

'மூணு மாசம் கிட்டத்தட்ட.'

'உங்களுக்கு ஆட்சேபணை இல்லைனா ஒண்ணு கேட்பேன். ஏன் தனியா வந்தீங்க?'

'சார், ப்ரொஃபஷன்ல தனியா நின்னு சாதிக்கணும்னு தான் வந்தேன்.  மத்தபடி ஒண்ணும் இல்ல.'

'சார், உங்களுக்கு கல்யாணம் ஆச்சா?'

'இல்ல.  இன்னும் ஆகல. ப்ரொஃபஷன்ல கொஞ்சம் கால ஊணினதற்கு அப்புறம் தான் அதப் பத்தி யோசிக்கணும்.'

'ஸேம் ப்ரொஃபஷன்ல உள்ள கேர்ளா இருந்தா பெட்டர் இல்லையா?'

'நானும் அப்படித்தான் யோசிச்சிண்டிருக்கேன்.'

'உங்கள சந்திச்சதுல்ல ரொம்ப சந்தோஷம் எனக்கு.  இந்தாங்க அந்த ஒரத்தநாடு சிமெண்ட்ஸ் ஃபைல்.  கேஸோட விவரம் உங்களுக்கு தெரிஞ்சது தானே.  மேற்கொண்டு பேச தேவையில்லைன்னு நெனைக்கிறேன்.   நாளைக்கு சாயந்திரம் நாலு நாலறைக்கு வரேன்.  ட்ராஃப்ட் நோடீஸை வாங்கிண்டு போக.  அவங்க மேனேஜ்மெண்டுலேயும் ஒரு அப்ரூவல் வாங்கணும் இல்லையா?'

'ஓகே.  ரெடி பண்றேன் நீங்க வரதுக்குள்ள.'

'ஏதாவது ப்பே பண்ணனுமா?'

'நோடீஸ் எக்ஸைஸுக்கு அனுப்பும்போது வாங்கிக்கறேன்.  நீங்க என்ன ஓடியா போகப் போறீங்க?'

இருவரும் சிரித்து விட்டு கைக்குலுக்கலோடு விடை பெறுகிறார்கள்.

வெளியே வந்த முரளி சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.

'ஒண்ணா படிச்சிருக்கா அவா ரெண்டு பேரும்.  நல்ல நட்போட பழகியிருக்கான்னு தெரியறது.  ஸ்ரீதர் சொல்றத பார்த்தா வெரி குட் கேளாத்தான் தோணறது.  ஐ திங்க் ஐ வில் பி லக்கி டு மேர்ரி ஹர்.'

'அப்பா அம்மா கிட்ட சொல்லிடுவோம்.  ஐயோ, இப்பவே பயம் வர்ரதே.  பொண் பார்க்க போகறச்சே என்ன ரௌண்டு கட்டி அடிப்பாளே அவ.'

தொடரும்....

No comments:

Post a Comment