Sunday, November 28, 2021

கனியுமோகாதல்_32

கனியுமோகாதல்_32

பிக்‌ஷேஸ்வரன் தேவகி ஹாஸ்பிடலிலிருந்து டிஸ்ச்சார்ஜ் ஆவது தள்ளிக் கொண்டே வந்த்து.  முதலில் இரண்டு மூன்று நாட்களில் டிஸ்ச்சார்ஜ் என்றார்கள்.  பிறகு ஒரு வாரம்.  இப்போது இன்னும் இரண்டு மூன்று தினங்களில் என்கிறார்கள்.

இதற்கிடையே க்ளையண்டுகளை ஒவ்வொரு நாளும் ஐந்தைந்து பேராக சந்திப்பது, அவர்களிடம் பிக்‌ஷேஸ்வரன் உடல்நிலை பற்றி பேசிவிட்டு அவர்களுக்கு அவர்கள் வழக்குகள் சம்பந்தமாக நம்பிக்கையை கொடுப்பது, அவர்கள் அதுவரை கொடுத்திருக்கும் ஃபீஸ் விவரங்களை பேச்சு வாக்கில் சாமர்த்தியமாக கேட்டறிவது என்று படு பிஸியாக மைதிலி அலுவலகத்தில் இருந்தாள்.

இதுவரை பிக்‌ஷேஸ்வரன் க்ளையண்டுகளிடம் பேசும் ஃபீஸ் சமாச்சாரங்களை ஜூனியர்ஸ் யாரிடமும் பகிர்ந்த்தில்லை.  எனவே, பிக்‌ஷேஸ்வரன் உடல்நிலையால் இவைகளையும் பேச வேண்டிய நிர்பந்தம்.

மைதிலியும் ஜெயஸ்ரீயும் ஆஃபீஸில் மற்றவர்கள் அவரவர்கள் தங்களுக்கான வேலைகளை முடித்து விட்டு கிளம்பிய பிறகு தனித்து இருக்கிறார்கள்.  அப்போது ஸ்ரீதரைப் பற்றி ஜெயஸ்ரீ ஆரம்பிக்கிறாள்.

'மைதிலி, இது வரைக்கும் மூணு நாலு தடவை ஸ்ரீதர் சார் ஃபோன்ல பேசினார்.  நீ ஃப்ரீயா ஃப்ரீயான்னு கேட்டார்.  இல்லை.  இருந்தாலும் உன்ன கேட்டு சொல்றேன்னு சொன்னா வேண்டாம் வேண்டாம்னு சொல்றார்.  பேசிடேன் ஒரு தடவை நீயே.'

'அவனோட பேசினா லெங்க்தியா போகும்.  இப்ப எங்க நேரம் எனக்கு இருக்கு நீயே சொல்லு.அடுத்த தடவ அவன் ட்ரை பண்ணினா நானே பேசறதா சொல்லு ஃப்ரீயா ஆனவுடனே.'

'ஸ்ரீதர் சார் பாவம் மைதிலி.  சீக்கிரம் பேசிடு.'

'அட, இத பார்றா ஜெயஸ்ரீ செல்லத்துக்கு கரிஸனத்த.'

சிரிக்கிறாள் ஜெயஸ்ரீ.

'அவருக்கு சரியா கேஸுகள் மாட்டல போல இருக்கு.  ரொம்ப அப்ஸட்.  அன்னிக்கு கோட்ட கொடுக்க போனபோது ஸ்ரீதர் சார் முகமே வாடிப் போயிருந்தது.'

'அவன் எப்போதுமே இப்படித்தான்.  அடிக்கடி சோர்ந்து போயிடுவான்.  நான் தார் குச்சி போட்டுண்டே இருப்பேன்.  சார் கொஞ்சம் குணமானோண்ண அவர் கிட்ட ஸ்ரீதரப் பத்தி பேசலாம்னு இருக்கேன்.'

'அந்த மாதிரி எதுவும் பண்ணாத மைதிலி.  நீ சார் கிட்ட ஓகே வாங்கிண்டு ஸ்ரீதர் சார் வேண்டாம்னுட்டார்னா அது சாருக்கு டெலிகேட்டா போயிடும்.  மொதல்ல ஸ்ரீதர் சாரோட பேசு.  அவர் என்ன நெனைக்கறார்னு தெரிஞ்சுண்டு நம்ம சார் கிட்ட பேசு.'

'அதெல்லாம் சரி.  நீ அவனோட சேர்ந்து ப்ராக்டீஸ் பண்ணப் போறதா...'

'எஸ்.  தேர் வாஸ் எ ப்ரொபோஸல்.  ஆனா இப்ப எனக்கு வேற நெனப்பு வந்துடுத்து ஸின்ஸ் ஐ அம் கம்ஃபர்டபிள் வித் யுவர் லீடர்ஷிப்.  எனக்கு நல்ல ஸ்கோப் நீ இங்க கொடுக்கற.  ஸ்ரீதர் சாருக்கும் என்னோட சேர்ந்து ப்ராக்டீஸ் பண்றதுல அவ்வளவு விருப்பமில்லைனு தோணறது.  நானும் டைரக்டாவே கேட்டுட்டேன்.  மழுப்பலாதான் பதில் சொன்னார்.'

ஜெயஸ்ரீ அவளுடைய அப்பா ஸ்ரீதர் ஆத்திற்கு சென்று அவன் அப்பாவிடம் பேசியதையும் கூறுகிறாள்.

'ஓ.  இதைப்பத்திதான் அன்னிக்கு ஸ்ரீயோட அப்பா பேச வந்தாரா என் கிட்ட.'

மனதிலே அவளுக்கு இருந்த சந்தேகமும் விலகியது அப்போது.

'அவன் சரியான புத்து டி.  ஏடா கூடமா ஏதாவது பண்ணுவான்.  எனக்கு ஒரு நாள் டைம் கெடச்சா அவன பார்த்து பேசிட்டு வருவேன்.  அதுக்கு வழி இல்லாம இருக்கு.'

'ஒரு நாள் ஆஃபீஸுக்கு லீவ் உடேன்.  நாங்களும் சந்தோஷமா இருப்போமோன்னோ?  இல்லாட்டி நான் பார்த்துக்கறேன்.  நீ போய் பேசிட்டு வா அவனோட.'

'சரி.  இன்னொரு தடவை அவன் லைன்ல வந்தா என்ன கனெக்ட் பண்ணு.'

சொல்லி வாயை மூடவில்லை.  ஸ்ரீதரிடமிருந்து கால்.  ஜெயஸ்ரீ ரிஸீவரை எடுக்கிறாள்.

ஃபோனின் ஒரு பக்கத்தை மூடிக் கொண்டு, 'அவர் தான் அவர்தான்.'

சிரித்துக் கொண்டே ரிஸீவரை வாங்கிக் கொண்டு, 'ஹாய் ஸ்ரீ, எப்படிடா இருக்க?'

'எப்படி கண்டுபிடிச்ச நான் தான்னு?'

'ஹலோ, உன்னோட மூச்ச வெச்சே கண்டுபிடிச்சுடுவோம்.  தெரிஞ்சுக்க.'

'எப்படி மை இருக்கே?  நான் உன்ன அவசரமா பார்க்கணும்.'

'இன்னும் கொஞ்ச நாளைக்கு முடியாது போல இருக்கு ஸ்ரீ.  சார் இன்னும் டிஸ்ச்சார்ஜ் ஆகல.  வெரி வெரி டஃப் டைம் ஆஃபீஸ்ல.  அதெல்லாம் அப்ரப்ட்டா போட்டுட்டு வரமுடியாது.  கண்டிப்பா சீக்கிரம் மீட் பண்ணலாம்.  கொஞ்சம் பொறுத்துக்கோ.'

'என்ன விட உனக்கு எல்லாம் பெரிசாயிடுத்து.'

'இந்த மாதிரியெல்லாம் பேசின உன்ன வந்து அடிப்பேன் பார்த்துக்கோ.  உன்னோட பேசும்போது ரிலாக்ஸ்டா இருக்கணும் மைண்ட்.  கோர்ட் டென்ஷன் இல்லாம.'

'உனக்கென்னமா, ராஜா வீட்டு கன்னுகுட்டி.'

'உன்னோட காம்ப்ளெக்ஸ விடவே மாட்டியா.  நீ இப்படியெல்லாம் பேசறது எரிச்சல தான் தர்றது.  நான் ஃபோன் பண்றேன்.  நீ இப்ப கட் பண்ணு ஃபோன.'

ஃபோனை வைக்கும்போதே அவளிடமிருந்து வந்த கோபப் பார்வையை ஜெயஸ்ரீ கவனிக்க தவறவில்லை.

'என்ன மைதிலி, அதே இன்ஃபீரியாரிடி காம்ப்ளக்ஸ் ப்ளாக்கணமா?'

'ஆமாம் ஜெய்.  ஸச் எ வொண்டர்ஃபுல் பர்ஸன்.  ஆனா பாரு, இப்படி இருக்கான்.'

'இப்பெல்லாம் பொம்மனாட்டிகள் தான் போல்ட் அண்ட் ப்யூடிஃபுல்.'

'ஹா ஹா...  என்னத்தான நெனச்சிண்டு சொல்ற.  ஏன்னா நீ ப்யூடிஃபுல் இல்லையேம்மா?'

'ஏய்.  உன்ன கேஸ் கட்டாலேயே அடிக்கறேன் பாரு.  என் அழகுக்கு என்ன கொறச்சலாம். ஸ்ரீதருக்கே என் ப்யூட்டி மேல ஒரு கண்ணு. தெரிஞ்சிக்கோ.'

விளையாட்டாகத்தான் சொன்னாள்.  நொடிப் பொழுதில் மைதிலியின் முகத்தில் தெரிந்த மாற்றம் மின்னலாய் விடைபெற்றது.

'ஸ்ரீதர பத்தி எனக்கு உன்ன விட நன்னா தெரியும்.  நீ இழுக்கற இழுப்புக்கெல்லாம் அவன் வர மாட்டான்.  தெரிஞ்சுக்கோ.'

'ஐயோ போதுமே உங்க ஃப்ரெண்ட்ஷிப்.  ரொம்ப அலட்டிக்காத.'

'சரி சரி.  அந்த டைவர்ஸ் கேஸுக்கு ரிஜாய்ண்டர ரெடி பண்ணிட்டியா.  பண்ணிட்டா அத டிஸ்கஸ் பண்ணிட்டு கெளம்பலாம்.  ஐ ஆம் டயர்ரட்.'

'ஏய் மைதிலி, நான் கொஞ்ச நாள் பார்த்துண்டு வரேன் உன்ன.  யூ ஆர் நாட் லுக்கிங் ஆஸ் ப்ரைட் ஆஸ் யூ வேர்.  மொதல்ல டாக்டர் கிட்ட போ.'

'எனக்கும் புரியறது.  பார்க்கறேன்.  ரொம்ப த்தேங்க்ஸ் உன்னோட அக்கறைக்கு.'

'பார்த்தியா பார்த்தியா.  த்தேங்க்ஸெல்லாம் சொல்லி என்ன கேவலப் படுத்தற பாத்தியா.  நீ நன்னா வரணும்.  இன்னும் சொல்லப் போனா சார விட பெரிய ஆளா, அதுக்கும் மேல ஜட்ஜா...'

'போதும் போதும்.  கற்பனையின்  சிகரமே!'

சிரித்துக் கொண்டே பிக்‌ஷேஸ்வரன் அறைக்கு செல்கிறாள்.  கொஞ்சம் ரிலாக்ஸ்டாக கால்களை சற்றே நீட்டிக் கொண்டு.

'இப்படி ஒரு மனுஷன் இருப்பானோ?  தன்னம்பிக்கையே இல்லாம.'

கண் ஓரத்தில் ஒரு துளி கண்ணீர்.  ஸ்ரீதரை நினைத்து.

'அடடா, அன்னிக்கு வந்தாரே முரளி.  அவரைப் பத்தி கேட்கணும்னு தோணலையே எனக்கு.  அதுவும் ஒரு விதத்துல நல்லதுதான்.  அப்புறம் ஜெயஸ்ரீக்கு எப்ஸ்ப்ளெயின் பண்ணிண்டிருக்கணும் தேவையில்லாம.  சாருக்கு வந்த கேஸை ஸ்ரீக்கு திருப்பி விட்டதா அவ நெனச்சாலும் நெனச்சிருப்பா சொல்லியிருந்தா.'

'நிறைய பேசணும் ஸ்ரீயோட.  முதல்ல அவனோட காம்ப்ளெக்ஸ போக்கணும்.  நல்ல இன்டெலிஜெண்டா இருக்கறவா கூட தன்னம்பிக்கை இல்லாம வீணா போறா.  இப்படி ஒரு காம்ப்ளெக்ஸ் இருக்கறவன் தனியா ப்ராக்ட்டீஸை ஆரம்பிச்சுருக்கவே கூடாது.  ஐ ஷுட் டூ ஸம்திங் ஆன் திஸ்.  சார் டிஸ்ச்சார்ஜ் ஆகி வரட்டும்.  ஒரு முடிவு பண்ணுவோம்.'

அவனைப் பற்றிய எண்ணங்கள் மீண்டும் மீண்டும்.  அவனுடைய கோட் வாசமும் அவள் எண்ணத்தில் சேர்ந்து கொண்டு இதழோடு ஒரு சிரிப்பை உதிர்க்காமல் இல்லை.

'ரிஜாய்ண்டர் ரெடி பண்ணிட்டேன் மைதிலி.  நீ ஓகே பண்ணிட்டா கிளம்பிடலாம்.'

முழுவதையும் படிக்கிறாள் மைதிலி.

'எனக்கு உன் கிட்ட ரொம்ப பிடிச்சதே உன் லேங்க்வேஜ் தான்.  க்ளாஸிக் ப்ரிபரேஷன்.  கொஞ்சம் மைனர் கரெக்‌ஷ்ன்ஸ் தேவையாயிருக்கும்னு நெனைக்கிறேன்.  ஆத்துக்கு எடுத்துண்டு போய் பண்றேன்.  நெக்ஸ்ட் மன்டே தான வர்ரது.  அதுக்குள்ள நன்னா ஷேப் பண்ணிடலாம்.  நீயும் யோசி ஃபர்தரா ஏதாவது ஆdட் பண்ணலாமான்னு.  லெட் அஸ் நௌ மூவ்.'

தொடரும்....

No comments:

Post a Comment