ராமானுஜருக்கு திருப்பாவை ஜீயர் என்ற திரு நாமம் ஏன்?
ராமானுஜர், அவருடைய அத்தியந்த சீடரான கிடாம்பி அச்சன், திரு மடைப் பள்ளியில் (சமையலறை) , வந்து அமர்ந்துத் தளிகைச் சேவைகள் தொடங்கும் முன்னர்,
சில சிரேஷ்ட இல்லங்களில் சென்று, சமையலுக்குத் தேவைப்படும் பொருட்களை, மாதுகரம் (பிக்ஷை), பெறுவதற்கென்று, ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையை, சிறிய குரலில் பாடிக்கொண்டே செல்வது வழக்கம்.
இப்படி பிக்ஷை வேண்டி ஒரு நாள் வைணவப் பெரியவரான பெரிய நம்பிகள் இல்லத்திற்கு, ராமானுஜர் திருப்பாவை அனுசந்தானத்தோடு (பாடிக் கொண்டே),
எதேச்சையாக திருப்பாவை 18 ம் பாசுரமான, 'உந்து மத களிற்றன் .......செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய்' என்ற வரிகளைப் பாடிய வண்ணம், சென்ற போது, பெரிய நம்பிகளின் இல்லத்து வாயிற் கதவு தாளிடப் பட்டிருந்தது.
ராமானுஜரின் குரலை நன்றாக அறிந்தவளான, பெரிய நம்பிகளின் மகள் திரு அத்துழாய், தாளிட்ட வாயிற் கதவைத் திறந்திடவும் ,அவளைக் கண்ட மாத்திரத்திலே, ராமானுஜர் மூர்ச்சித்து விழுந்தார்.
பதை பதைத்தவளான, திரு அத்துழாய், ஒடிப் போய்த் தந்தை பெரிய நம்பிகளிடம், ராமானுஜர், தன்னைக் கண்ட மாத்திரத்திலே, மூர்ச்சித்தத்தைத் தெரிவிக்கவும்,
ஞான உத்தமரான பெரிய நம்பிகள், தம்முடைய மகளிடம், நீ கதவைத் திறக்கும் போது, ராமானுஜர் 'செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய்' என்று உச்சரித்துக் கொண்டிருந்தாரா என்று கேட்டிடவும்,
அகத்துக்கு உள்ளே இருக்கும் தந்தைக்கு ராமானுஜரின், சன்னமான குரல், எப்படிக் கேட்டிருக்க முடியும், என்று திருத் துழாய் திகைத்திருக்க,
'உன்னைக் கண்ட மாத்திரத்திலேயே ராமானுஜர், ஆண்டாள் மேற்சொன்ன 18 ம், திருப்பாவைப் பாசுரத்தில் பேசப்பட்ட நாயகியான நப்பின்னையைத் தரிசித்தத் திகைப்பினால், மூர்ச்சித்து இருக்க வேண்டும்' என்று விளக்கியதோடு ,
ராமானுஜரை நோக்கி 'திருப்பாவை ஜீயரே, உந்து மத களிற்றன் அனு சந்தானமோ (பராயணமோ) ?', என்று முகமன் கூறி வரவேற்றாராம்.
No comments:
Post a Comment