Monday, November 29, 2021

தீரா நதி

 தீரா நதி

வித்யா  கன்சீவ் ஆனதிலிருந்து வீட்டில் இதே டிஸ்கஷன்  தான் .பிறக்க போகிற குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது? 

ஆண் பெயர் ஒன்று பெண் பெயர் ஒன்று செலக்ட் பண்ணி வைத்து கொள்ள வேண்டும்.பிறகு அவசரத்தில் ஏதாவது ஒன்றை வைத்து விட்டால் அந்த குழந்தை வளர்ந்து பேச ஆரம்பித்து ஏம்மா எனக்கு மொக்கையா பேர் வெச்சேன்னு கோப்பட கூடாதாம்.தவிர குழந்தை பெயரை கேட்பவர்கள் பெயரை சொன்னவுடனேயே சும்மா அதிருதில்ல என்கிற மாதிரி ஃபீல் பண்ண வேண்டுமாம்.

கண்ணனுக்கும் வித்யாவுக்கும் தங்கள் பெயர்கள் கொஞ்சம் சாதாரணமாக யாரையும் கவர்கிற மாதிரி இல்லாதது கொஞ்சம் வருத்தம். 

கண்ணனின் அம்மா மதிவதனிக்கு இதையெல்லாம் பார்த்து சிரிப்புதான் வந்தது. தன் பெயருக்கு அர்த்தம் கேட்டபோது தன் அப்பா சொன்ன பதில் நினைவு வந்தது. நீ பிறந்தவுடன் சந்திரன் போன்ற குளிர்ச்சியான வதனம் என்று 

தோன்றியதால் அந்த பெயரை வைத்தேன். நீ எப்பவும் நிலவின் குளிர்ச்சியுடன் அமைதியாக வாழனும்

என்றார்.இதை தன் பையனிடம் நினைவு கூர்ந்த மதிவதனி, உன் தாத்தா தமிழாசிரியர் அதனால் இப்படி வைத்தார்.நீங்க ரெண்டு பேரும் கம்ப்யூட்டர் சம்பந்தமா பிரபலமான பெயரை வையுங்களேன் என்று யோசனை சொன்னாள்.

கண்ணனும், வித்யாவும் ஒரே சமயத்தில்  சுந்தர் பிச்சை என்றபடி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். 

பார்த்தயா? அவ்வளவு பிரபலமானவர் தன் பெயரை மாற்றி கொள்ளவில்லை.

அதனால் அவர் அது பற்றி கவலை பட வில்லை என்று தெரிகிறதா? பெயரில் என்ன இருக்கு? என்றாள்.

ஏன்மா அவருக்கு பிச்சை என்று பெயர் வைத்திருப்பார்கள் என்ற கண்ணனுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கும் போல இருந்தால் அப்படி பெயர் வைப்பதாய் சிலர் வேண்டுவார்கள்.

எல்லா பெற்றோர்க்கும் குழந்தைகள் கடவுள் போடும் பிச்சைதானே என்றாள்.

பிறகு ஏதேதோ பெயர்கள் அலசப்பட்டன.

திடீரென்று ஒரு நாள் கண்ணனும், வித்யாவும் பெயரை முடிவு பண்ணி விட்டோம் என்றார்கள்.

பையனாய் இருந்தால் தீரா வான்.பெண்ணாய் இருந்தால் தீரா நதி. 

என்ன பெயர் இது? என்ன அர்த்தம் இதற்கு? என்ற அம்மாவிடம் இதே கேள்விகளுக்கு கிட்டத்தட்ட எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டும் .அந்த குழந்தை வளர்ந்தவுடன்  அதையும் கன்வின்ஸ் பண்ண வேண்டும்.

ஆனாலும் நாங்கள் முடிவு செய்து விட்டோம். இது தான் பெயர் என்று என்றார்கள்.

தீரா வான் எல்லையற்ற வானம். தீரா நதி ஜீவ நதி.

கௌசல்யா வரதராஜன்

No comments:

Post a Comment