Tuesday, November 9, 2021

பழனி முருகனின் ஆண்டி கோல தரிசன ரகசியம்

 அற்புத பலன்கள் தரும் பழனி முருகனின் ஆண்டி கோல தரிசனத்தில் மறைந்துள்ள ரகசியம்!

நீங்கள் உங்களது வாழ்க்கையில் தீராத கஷ்டம்,தடைகள், குடும்பத்தில் சண்டை, வருமானம் இல்லாமை, போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளை மட்டுமே எதிர் கொண்டு வாழும் சூழ்நிலை இருந்தால்  நிச்சயம் இதற்கு கர்ம வினைகள் தான் காரணம்  ஆகும்

கலியுகத்தில், நாம் செய்த கர்மவினைகளை குறைக்கக்கூடிய மாபெரும் சக்தி முருகப்பெருமானுக்கு உள்ளது.

முருகப்பெருமானை பழனி மலைக்கு சென்று தரிசனம் செய்தால் நம்முடைய கர்மவினைகள் கட்டாயம் குறையும் 

கர்ம வினைகளால் ஏற்படும் நம்முடைய  பிரச்சனைகள் தீர பழனி முருகனை எப்படி வழிபாடு பூஜை செய்வது என்ற தேவரகசியம் தெரியுமா?

வாழ்வில் தடை போட்டி பொறமை   கஷ்டம் போன்ற பல பிரச்சனைகள் விலக ஆண்டி கோலத்தில் இருக்கும் பழனியாண்டவர் முருகனை தரிசனம் செய்வதால் நன்மைகள் பல உண்டாகும்

பழனி  முருகப்பெருமானை  ஆண்டி கோலத்தில் இருக்கும் போது தரிசனம் செய்தால் நம்மை ஆண்டியாக ஆக்கி விடுவார் என்றும்,

ராஜ அலங்காரத்தில் இருக்கும் போதும் மட்டுமே தரிசனம் செய்தால்  ராஜ வாழ்க்கை கிடைக்கும் என்றும் பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

ஆனால் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தீராத துயரத்தை அனுபவித்து வந்தால், அதிகப்படியான தடைகள்  உங்களுடைய வாழ்க்கையில் இருந்தால் நீங்கள் பழனி முருகனை தண்டாயுதபாணி கோலத்தில் அதாவது ஆண்டி அலங்காரத்தில் தரிசிப்பது தான் சிறந்தது

முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக. பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள். 

முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலைகளைக் கடந்தவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தை விரும்பிப் பார்ப்பார்கள்.

ஜோதிடப்படி பார்க்கும் போது செவ்வாய் கிரகம் முருகனுக்கு வருகிறார். அதிலும் இந்த  பழனி முருகன் கொஞ்சம் ஞானகாரகனாக இருக்கிறார். 

மேலும், இந்தச் செவ்வாயுடன் குருவும் கலக்கிறார். வீரம், தைரியம் இதற்கெல்லாம் உரியது செவ்வாய். 

இந்த வீரமும், தைரியமும் இருந்ததால்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு அவர் வந்து இங்கு நிற்க முடிந்தது. 

ஆனால் நின்ற உடனேயே அங்கு குரு வந்துவிடுகிறார். செவ்வாயாக வீரவேசத்துடன் கிளம்பி குருவாக நிற்கிறார்.

வழக்குகளெல்லாம் நடக்கிறது, தீராத நோய்களெல்லாம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளுக்கு அலங்காரம் இல்லாத முருகனை வணங்குவதே நன்று.

 20 வருடமா வாதாடிக் கொண்டிருக்கிறேன். தீர்ப்பு தள்ளி தள்ளிப் போகிறது என்றால் அதற்கு அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோல முருகன் வழிகாட்டுவார். 

தீராத நோய், மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள், அவ்வளவுதான் என்ற நிலையில் அதற்கும் நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம்.

மன குழப்பம் அடைந்து இருக்கிறார்களே, அவர்களையும் இந்த ஆண்டிக் கோல முருகனை வழிபடச் சொல்லலாம். 

அவர்களுக்கு மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனைக் கண்கூடாகப் பார்க்கிறோம். 

பேச இயலாதவர்கள், குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி, மன உளைச்சல் உள்ளவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தைப் பார்த்தால் ஒரு சாத்வீகம், சமத்துவம் அவர்கள் மனதிற்குள் பாயும்.

நம்மால் முடியாது, மருத்துவராலும் முடியாது, யாராலும் முடியாது என்பது போன்ற விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோலம் மிக மிக உகந்த தரிசனக் கோலம்.

திங்கள் கிழமையில் காலை நேரத்தில் மலையேறி முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் தரிசித்தால், உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகி  படிப்படியான முன்னேற்றம் மாற்றம் ஏற்படும்.

உங்களுடைய ஜாதகத்தில் பாதிப்பு தரக்கூடிய நிலையில் எந்த கிரகங்கள்  இருந்தாலும்  அந்த கிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு தாக்கம் குறைய  வேண்டுமென்றால், அதற்கான ஒரே தீர்வு பழனி முருகனை ஆண்டி கோலத்தில் திங்கட்கிழமை காலை வேளையில் தரிசனம் வழிபாடு செய்து, பூஜை தானம் தர்மம் அன்னதானம் போன்றவற்றை செய்தால் உங்களது வாழ்வில் நல்ல முன்னேற்றம் நன்மைகள் பல கிடைக்கும்

நம்பிக்கையோடு  செய்து நலம் பல பெறுங்கள் ...!




நேரிலே சென்றால் கூட தெளிவாக பார்க்கமுடியாத அலங்காரம் ஏதும் இல்லாத பழனி முருகனின் அசல்

ஆண்டிக்கோல  நவபாஷாண விக்ரகத்தின் படம் 👆

No comments:

Post a Comment