Sunday, November 28, 2021

மாத்தியோசி

நேர்மறை எண்ணங்கள்.

மாத்தியோசி என்ற சொற்றொடரை அடிக்கடி நாம் கேட்டிருப்போம்.

இந்த செயலை செய்ய முடியவே முடியாது என்று சொல்லும் போது, இரு, அவசரப்படாதே ஏதாவது வழி இருக்கும், வேறு கோணத்தில் யோசிப்போம் என்பதின் essenseதான் மாத்தியோசிப்போம்.

நமது எண்ணம், சொல், செயல் மூன்றும் நேர்மறையாக இருந்தால், துன்பம் வரும் போது, ஏதாவது சரியான வழி நமக்கு கண்டிப்பாக வரும்.

ஒரு சிறுகதை you tubeல்.  Very interesting.

ஒரு இளைஞர். வாய் பேச முடியாது. காதும் கேட்காது.மாற்றுத்திறனாளர்.

மாற்று திறனாளிக்கு உதவும் அரசு சலுகைகள், சமூக சேவை அன்பர்களின் உதவியால், பட்டப்படிப்பு நல்ல மதிப்பெண்களோடு முடித்துவிட்டார்.

வேலை தேடும் படலம்.

எழுத்து தேர்வில் நல்ல முறையில் வெற்றி பெற்றாலும், நேர்முகத் தேர்வில் எப்போதுமே தோல்வி.

எனக்கு பேச வராது, காது கேட்காது என்று படிவத்தில் குறிப்பிடுவதால், தேர்வாளர்கள் ஏதாவது அப்போதைக்கு கேள்வி எழுதி கொடுத்து, பதிலை எழுதி வாங்கி கொண்டு, பின் வேலை இல்லை என்று தகவல் அனுப்பி விடுவார்கள்.

சோர்ந்து போனார் இளைஞர்.

நேர்மறை எண்ணங்களோடு மாற்றி யோசித்தார்.

அடுத்து சென்ற கம்பெனியில், தன்னை பற்றி குறிப்பிடும் போது மாற்றி யோசித்து தன் குறைகளை எழுதினார்.

இன்டர்வியூவில் அவர் எழுதியுள்ளதை படித்தவுடன், you are appointed என்று நேர்முகத் தேர்வில் எந்த கேள்வியும் கேட்காமல் மகிழ்வுடன் தெரிவித்தனர்.

படிவத்தில் என்ன வித்தியாசமாக எழுதியிருந்தார்?

எனக்கு வாய் பேச வராது. அதனால் அலுவலக நேரத்தில் எந்த வெட்டி  அரட்டையும் அடிக்க மாட்டேன்.

எனக்கு காது கேட்காது. எந்த வெளியுலக சப்தமும் என்னை பாதிக்காததால், செய்யும் வேலையை திறமையாக செய்து முடிப்பேன்.

இந்த கம்பெனியின் முன்னேற்றத்திற்கு, என்னால் செய்ய முடிந்ததை முழுமனதுடன் செய்வேன்."

அதே குறைகள். மாற்றி யோசித்ததால், 

Way of presentation, வேலை கிடைத்தது.

எந்த கடினமாக செயலாக இருந்தாலும், எடுத்தவுடன் முடியாதோ என்று நினைப்பதை விட, வேறு ஏதாவது வழி இருக்கிறதா? என்று மாத்தி யோசிக்கலாம்.

சரியான தீர்வு, எண்ணம் சொல் செயலில் நேர்மறையாக இருந்தால், கண்டிப்பாக நம் சிந்தனையில் உதிக்கும்.

No comments:

Post a Comment