கனியுமோகாதல்_29
ராயப்பேட்டை பாலாஜி நகரில் உள்ள சீதாராமய்யர் ஆத்தில் அங்குள்ளவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
'முரளி, என்னடா அந்த ஃபோட்டோவ அப்படி பார்த்துண்டிருக்கியே?
ப்ரகதாம்பாள் அப்படி கேட்டும் பார்த்துக் கொண்டிருப்பதை முரளி விடவில்லை. ப்ரகதாம்பாள் முரளியின் அம்மா. முரளி பார்த்துக் கொண்டிருப்பது மைதிலியின் ஃபோட்டோ.
'பய கவுந்துட்டான்னு நெனைக்கிறேன் பூமா. சட்டு புட்டுனு அவாள கூப்ட்டு பேசறது நல்லது. இல்லாட்டி பய சரியா தூங்கமாட்டான் போல இருக்கே.'
ப்ரகதாம்பாளின் இன்னொரு பெயர் ஆத்தில் பூமா.
'அப்பா, அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா. இந்த பொண்ண எங்கேயோ பார்த்திருக்கேன். எங்கேன்னுதான் ஞாபகம் சட்டுனு வர மாட்டேங்கறது.'
:அதான் ரோட்டுல போகும்போது எல்லா பொண்களையும் ஸைட் அடிக்க கூடாதுங்கறது. ஒண்ணு ரெண்டா இருந்தா சட்டுனு ஞாபகம் வரும்.'
'அப்பா, ஐ ஆம் ஸீரியஸ். நான் இவள எங்கேயோ பார்த்திருக்கேம்மா. ஞாபகத்துக்கு கொண்டு வந்துடுவேன் எப்படியும்.'
'அதெல்லாம் அப்புறம் வெச்சிக்கோ. முதல்ல பொண்ணு ஃபோட்டோ பிடிச்சிருக்கா? அத்த சொல்லு முதல்ல.'
'லுக்கிங் குட் மா. உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா யூ கேன் ப்ரொஸீட்.'
'அப்பா கலெக்டர் ஆஃபீஸ்ல வேல பார்க்கறார். சாதாரண குடும்பம்தான். நம்ம அளவுக்கு பணம் காசு இல்லைனு தோணறது. ஒரே பொண்ணு அவாளுக்கு.'
'அம்மா, நீ எந்த காலத்துல இருக்கே. ஸ்டேடஸ் அது இதுன்னு பார்த்துண்டு. என்ன அவளுக்கு பிடிக்கலைனு சொன்னான்னு வெச்சுக்கோ, அந்த எடத்துலேயே நம்ம ஸ்டேடஸ் தோத்து போச்சு. உங்களுக்கு தோதா குணங்கள் இருந்தா எனக்கும் பிடிச்சுடும். நான் சொல்றது சரிதான அப்பா?'
'நீ யாரு! சீதாராமன் பையனாக்கும். உங்க அம்மா வரதட்சணை கணக்கு ஏதாவது போட்டிண்டிருக்காளோ என்னவோ?'
'ஏன்னா, என்ன அவ்வளவு ச்சீப்பா நெனச்சுட்டேளே.'
'பின்ன என்னடி, பய அழகா சொல்றான். பொண் பார்க்கறதுக்கு ஏற்பாடு பண்ணு.'
'அம்மா, பொண்ணு ஒர்க் பண்றாளா?'
'வக்கீலுக்கு படிச்சிருக்காளாம். இப்ப யார் கிட்டயோ ஜூனியரா இருக்காளாம்.'
'யார் கிட்டேன்னா?'
'ஏதோ பேர் கூட சொன்னார்டா பொண்ணோட அப்பா. இரு இரு ஞாபகப் படுத்தி சொல்றேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னா அவர் சொன்னது.'
'பிக்ஷேஸ்வரன்னு சொன்னார்டா.'
'தேர் யூ ஆர். இப்ப ஞாபகம் வந்துடுத்துப்பா. என்னோட க்ளையண்ட் கேஸ் விஷயமா ஒபினியன் கேட்க மூணு மாஸம் முன்னாடி அந்த அட்வகேட்ட பார்த்தேன். அப்ப இந்த பொண்ணும் அங்க இருந்தா.'
'அந்த அட்வகேட்ட உனக்கு நன்னா தெரியுமா? அப்படின்னா அவர் கிட்டேயே பொண்ண பத்தி விசாரிக்கலாமே டா.'
'எனக்கு அவர நேரடியா தெரியாது. ஆனா அவரோட தங்க ஆத்துக்கார் மூலமாத்தான் எனக்கு தெரியும். அவர் சொல்லித்தான் அந்த பிக்ஷேஸ்வரன தெரியும்.'
'எப்படியோ பொண்ண பத்திய ரெஃபரன்ஸுக்கு ஒரு ஆள் இருக்காரே.'
'அம்மா, இப்ப அவசரப்பட்டு அவா கிட்ட சொல்ல வேண்டாம் எதுவும். நானே என்னோட க்ளையண்ட் ஃபைல எடுத்துண்டு போய் பிக்ஷேஸ்வரன் சார் கிட்ட பேசற மாதிரி அந்த பொண்ண பார்த்துட்டு வரேன்.'
'எசக்கு பிசக்கா ஏதாவது செஞ்சு அந்த பொண்ணு நீ நோட்டம் பார்க்கறதா நெனச்சு உன்ன வேண்டாம்னு சொல்லிடப் போறாடா. அதெல்லாம் வேண்டாம். நாங்க பார்த்துக்கறோம்.'
'அம்மா, நீங்க அது மாதிரியெல்லாம் கவலப் படாதீங்கோ. லைஃப்ல கொஞ்சம் த்ரில் வேணும்மா. நான் பார்த்துக்கறேன்.'
'ஐ லைக் திஸ் ஸ்பிரிட் மை பாய். ஆனா அந்த பொண்ணோட dடிக்னிடிக்கு எந்த எடஞ்சலும் வந்துடக் கூடாது. எங்களுக்கும் ஒன்னால எந்த தலைகுனிவும் வரக்கூடாது. என்ன, புரிஞ்சுதா?'
'சரிப்பா. கண்டிப்பா அந்த மாதிரியெல்லாம் ஒண்ணும் ஆகாது.'
'இப்ப நானும் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ. உனக்கு அவ ஏத்தவளா இருப்பான்னு மனப்பூர்வமா தோணித்துதுன்னா, அவ தான் இந்தாத்து பொண்ணு. நம்ம செலவிலேயே கல்யாணம் பண்ணி வைக்க நான் ரெடி.'
அப்போது அவர்கள் வீட்டு டெலிஃபோன் மணி அடிக்கிறது.
'அட!! நல்ல சகுனமா தெரியறதே!'
பூமா மாமி ரிஸீவரை எடுக்கிறாள்.
'ஹலோ'
'மாமி, நான் மைலாப்பூர்லேந்து சுந்தரம் பேசறேன். கார்த்தால வந்தேனே என் பொண்ணு ஜாதக விஷயமா? உங்க புள்ள கிட்ட என் பொண்ணு ஃபோட்டோவ காமிச்சேளா? ஆஃபீஸ் போற அவசரத்துல உங்க புள்ள ஃபோட்டோவ வாங்கிக்காம வந்துட்டேன். நாளைக்கு வந்து வாங்கிக்கட்டுமா?'
'எங்க பையன் இன்னும் ஆஃபீஸ்லேந்து வரல. பையனோட சமீபத்திய ஃபோட்டோவும் இல்ல. இந்த வாரத்துக்குள்ள ஒரு பாஸ்போர்ட் ஸைஸ் ஃபோட்டோ எடுத்து வைக்க சொல்றேன். ஃபோன் பண்ணினோன்ன வந்து வாங்கிக்கோங்கோ. அவசரமே படாதீங்கோ மாமா. எல்லாம் நல்லபடியா போகும். ரெண்டு பேருக்கும் பிராப்தம்னு இருந்தா கண்டிப்பா நடக்கும் மாமா.'
'சரி மாமி. சாரி, நைட் ஒம்போதரைக்கு உங்காத்த காண்டேக்ட் பண்ணினதுக்கு.'
'பரவாயில்ல மாமா. பொண்ண பெத்தவாளுக்கு இருக்கற ஆதங்கம் என்னால புரிஞ்சிக்க முடியறது.'
ரிஸீவரை வைத்து விட்டு இருவரைப் பார்த்து சிரிக்கிறாள்.
'பூமா, சரியான ராட்சஸிடி நீ. சகட்டு மேனிக்கு அடிச்சு விடறயே.'
பூமாவின் சிரிப்பில் முரளியும் பங்கு பெறுகிறான்.
'த்தேங்க்ஸ் அம்மா.'
'முரளி, உனக்கு ஒரு வாரம்தான் டைம். அதுக்குள்ள முடிவ சொல்லிடணும். பொண்ண பெத்தவாளுக்கு தேவையில்லாம டென்ஷன் கொடுக்க கூடாது.'
'சரிம்மா. ஒன் வீக்கே வேண்டாம். ஜஸ்ட் எ கப்புள் ஆஃப் டேஸ்ல சொல்றேன்.'
'ஆல் தி பெஸ்ட் மை டியர் ஸன். ஆத்துக்கு இன்னொரு ராட்ஷசி வரப்போறதுக்கு பூமாவுக்கும் என் பாராட்டுகள்.'
'ஐயோ போதுமே உங்க ஜோக்கு. சிரிப்பு வரல.'
கல கலப்புடன் டைனிங் களை கட்டியது.
தொடரும்..
No comments:
Post a Comment