உறவுபோட்டமுடிச்சு_31
அட்மிஷன் ஃபார்மாலிடிஸுக்காக ரிஸப்ஷன் வருகிறான் பாலாஜி. கூடவே சந்தானம்.
'பாலாஜி அண்ணா, நீங்க ரெண்டுநாள் முன்னாடி விசாரிச்சிகிட்டு போனவங்கதான.'
'பரவாயில்லையே. இத்தனை பேர் வந்துண்டு போயிண்டு இருக்கற எடத்துல என் பெயரக் கூட மறக்காம ... உங்க பேர் கூட மீனாட்சி!!!???'
'ஆமாண்ணா. பேஷண்ட அழச்சிண்டு வந்துருக்கேளா?'
'அவர் எமெர்ஜன்ஸி வார்டுல இருக்கார். டாக்டர் பசுபதி என்ன கூப்படறேன்னு சொல்லியிருக்கார். அதுக்குள்ள பணம் எல்லாம் கட்டி அட்மிஷன் கார்டு போடச் சொல்லிட்டு போனார்.'
'நீங்க ஸ்பெஷல் வார்டு தான கேட்டீங்கண்ணா?'
'ஆமாம். தரேன்னு சொன்னீங்களே. நானும் அங்கயே தங்கிக்கலாம்னு சொன்னேளே.'
'தங்கலாம். ஆனா நீங்க அங்கேயே தங்கறது அட்வைஸபிள் இல்ல. டாக்டர் உங்க ஃபாதருக்கு தொற்று போயிடுத்துன்னு சொல்ற வரைக்கும் நீங்க ஆஸ்பத்திரியில தங்கறது நல்லது இல்லேண்ணா. நைட் ஸ்டேயயாவது வெளில வெச்சுக்கோங்க. எப்போதும் கர்சீப்பால வாய மூடிண்டு யார் கிட்டேயும் பேசணும்.'
'நான் அப்பா கூப்பிட்ட குரலுக்கு இருக்கணும்னு தான் நானும் அங்கேயே தங்கிக்கற மாதிரி ரூம் கேட்டேன். யாரோ கூட எனக்கு ரூம் காமிச்சாங்களே. பெரிசா தான இருந்தது.'
'கார்த்தாலேந்து அடிக்கடி அப்பாவ போய் பார்த்துக்கோங்க. ராத்திரி மட்டும் அவர் தூங்கற வரைக்கும் இருந்துட்டு அப்புறம் போங்க. தேவப்பட்டா மாத்திரம் போங்க. மத்த நேரத்துல கர்சீப்ப கட்டுண்டு ரிஸப்ஷன்ல பேஷன்ட்டுகள் பக்கம் போகாம உட்கார்ந்துக்கோங்க.'
'நான் எங்கேம்மா தனியா வீடு எடுத்து தங்கறது? தனிச் செலவு வேற அநாவசியமா?'
'பெரிய வாடகையெல்லாம் இருக்காது. சின்ன கிராமம் தான இந்த எடம். எடத்த தனியா எடுத்துண்டா உங்க சொந்தக்காரங்களும் எப்ப வேணா வந்து போகலாம் இல்லையா? உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்.'
'சரி. யோசிச்சு சொல்றேன். நீங்க ஸ்பெஷல் வார்டே கொடுங்க. டாக்டர் கிட்ட பேசினதுக்கப்பறம் சொல்றேன். ஒரு மாசத்துக்கு உத்தேச செலவ கணக்கு பண்ணி சொல்லுங்க. அட்வான்ஸா கொடுத்துடறேன்.'
அப்போது யாரோ ஒரு நர்ஸ் ரிஸப்ஷன் ஹாலுக்கு வந்து 'இங்க யாரு சபேஸய்யரோட அட்டெண்டெண்ட்?' என்கிறாள் உரத்த குரலில்.
'நான் தான் ஸிஸ்டர்.'
'உங்கள டாக்டர் பார்க்கணுமாம். நேரா போய் லெஃப்ட் திரும்பினா முதல் ரூம். டாக்டர் பசுபதின்னு போர்ட் இருக்கும்.'
'அண்ணா. மொதல்ல டாக்டர பாருங்க. அப்புறம் வந்து பேசிக்கலாம்.'
டாக்டர் பசுபதியின் அறை. டாக்டர் இருப்பது கூட தெரியாமல் ஒரு நிஸப்தம் அந்த அறையில். கர், கர், கர்.... என்ற சத்தத்தில் மேலே பின்விசிறி சிறிய அளவில் இயங்கி கொண்டிருந்தது.
'மே ஐ கம் இன் டாக்டர்.'
'எஸ். உள்ள வா பாலாஜி.'
'அப்பா இப்ப எப்படி இருக்கார் டாக்டர்?'
கேள்வியில் ஒரு பதட்டம் இருந்தது பாலாஜியிடம்.
'இந்த அம்பி யாரு?'
'எங்க ஊர். ஃப்ரெண்ட். சந்தானம்.'
'ஓ. உனக்கும் ஒரு அட்டெண்டாக்கும்'
'இல்ல டாக்டர். மதியானம் கிளம்பிடுவான்.'
'சும்மா ஜோக்கா சொன்னேன். நீ ஆனா சிரிக்கல.'
அப்பா இப்போ எப்படி இருக்கார்ங்கற கேள்விக்கு மாத்திரம் பதில் இல்லை. கோபமாக வருகிறது பாலாஜிக்கு. அடக்கிக் கொள்கிறான்.
பக்கத்தில் ஃப்ளாஸ்கை திறந்து வெந்நீர் குடிக்கிறார். பிறகு ஒரு சிரிப்பு.
'பாலாஜி, உங்க அப்பா இப்ப ஓகே. இன்னிக்கு புதன் இல்லையா? புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு எமெர்ஜென்ஸியிலேயே இருக்கட்டும். நெஞ்சு ஃபுல்லா சளி, எல்லாத்தையும் ட்யூப் போட்டு எடுக்க சொல்லியிருக்கேன். ஆக்ஸிஜன் மாஸ்க்கும் போட்டுருக்கேன். சளி கொஞ்ச கொஞ்சமாத்தான் ட்ரெயின் ஆகும். அவருக்கு கஷ்டமா இருந்தா ஸெடேஷன் சின்ன அளவுல கொடுப்பா. பயப்பட வேண்டாம். பொழச்சுட்டார். பொழச்சுடுவார்.'
'தொற்று எப்படி இருக்கு.'
'முதல்ல கோழையெல்லாம் வெளில வரட்டும். அப்பறம் ரத்த பரிசோதனை, எக்ஸ்ரேன்னு ஒவ்வொண்ணா எடுத்துட்டு சொல்றேன். ஸ்பெஷல் வார்டு எடுத்துட்டியோன்னோ?'
'எடுத்துடுவேன். அதுல பிரச்சனை இல்லை டாக்டர்.'
'அதுலயே இந்த வாரம் தங்கிக்கோ.'
'ஆஸ்பத்திரில நான் தங்கரது உசிதம் இல்லைனு சொல்றாளே டாக்டர்?'
'எஸ். இங்க தங்கரதுன்னா ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். எனிவே டாக்டர்கள் எப்படி இங்க நீ இருக்கணும்னு க்லாஸ் எடுப்பா உனக்கு.'
'எத்தனை நாள் இங்க அப்பா தங்கும்படியா இருக்கும் டாக்டர்?'
'ஸ்ப்ரெட்ட பார்த்துட்டு சொல்றேனே. மினிமம் ஒன் மன்த். மே பி ஒன் மோர் மன்த். பெரிசா ஒண்ணும் இல்லைனா ஒரு பத்து பதினஞ்சு நாள் ஆப்ஸர்வ் பண்ணிட்டு அனுப்பிடலாம்.'
'சரி டாக்டர். ரொம்ப தேங்கஸ்'
'ஐ வில் டேக் யுவர் தேங்க் யூ பார்ஷியலி நவ். மீதிய டிஸ்சார்ஜ் அன்னிக்கு எடுத்துக்கறேன். அப்புறம் ஒன் கிட்ட ஒண்ண கேட்கணும். யாரு கீதா? உங்க அம்மாவா?'
'எங்க அம்மா இல்ல டாக்டர். எங்க அத்தை பொண்ணு. ஏன் டாக்டர் இந்த கேள்வி.'
ஸெடட்டிவ் உள்ள போன சித்த நாழியிலேயே கீதா கீதான்னு புலம்பினார். அவ உனக்கு முறைப் பொண்ணுதான?'
ஒரு நெளியல். பிறகு ஆமாம்.
'அவ மொறப் பொண்ணுன்னா நீ தான கீதா கீதான்னு பொலம்பணும். அவர் ஏன் பொலம்பறார்? ஜஸ்ட் எ ஜோக். இதுக்காவது சிரிக்க மாட்டியா?'
பெரிதாக சிரிப்பலை அங்கு சந்தானமும் சேர்ந்து கொண்டதால்.
'அடுத்த வாரம் ஒன்னோட ஆளு அதாம்ப்பா கீதா, அவ வந்து உங்க அப்பாவ வந்து பார்த்துட்டா அதுக்கப்பறம் எனக்கு அவ்வவா வேலை இருக்காதுன்னு தோணறது.'
'ஆமாம் டாக்டர். இந்த கீதா விஷயத்துல பாலாஜி ரொம்ப கொடுத்து வெச்சிருக்கான்.'
'ஏம்ப்பா சந்தானம், அதான உன் பேரு. உனக்கு ஒண்ணும் பொறாமை இல்லையே."
'டாக்டர் உங்க கிட்ட ஜாக்ரதையா பேசணும் போல இருக்கே? நாங்க எல்லோருமே இவா ரெண்டு பேர் கல்யாணத்துக்காக காத்துண்டு இருக்கோம்.'
'சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன். ஐ விஷ் பாலாஜி தி வெரி பெஸ்ட்.'
'டாக்டர். கல்யாணத்துக்கெல்லாம் இன்னும் அஞ்சாறு வருஷம் இருக்கு. படிக்கணும் வேல தேடணும்.... எவ்வளவோ இருக்கு டாக்டர்..'
அப்போது இன்னொரு டாக்டர் உள்ளே நுழைகிறார்.
'நல்லவேள கீர்த்தி. நீயே வந்துட்ட. இந்த ஜென்ட்டில்மேன் தான் நாம பார்த்த சபேஸய்யரோட ஒரே பையன். ஆம் ஐ ரைட் பாலாஜி?'
'எஸ் டாக்டர்.'
'பாலாஜி ஹி இஸ் டாக்டர் கீர்த்தி வாசன். தொற்று நோய்கள் ஸ்பெஷலிஸ்ட். உங்க அப்பா கொடுத்து வெச்சவர்னு தான் சொல்லணும். இன்னும் மூணு மாசத்துல இவர் மலேஷியா போயிடுவார். அதுக்குள்ள உங்க அப்பாவ குணமாக்கிட்டு மலேஷியா கிளம்பிடுவார்.'
'கீர்த்தி, பாலாஜியோட அப்பா எப்படி இருக்கார்னு உன் வாயாலேயும் சொல்லிடு.'
'நல்லா ஆயிடுவார் உங்க அப்பா. ரத்த அழுத்தமெல்லாம் பேஷண்டுக்கு இல்ல. ஒன்ஸ் சளி ட்ரெயின் ஆயிடுச்சின்னா நார்மலா ஆயிடுவார். லங்கஸ் ஸைட் ரொம்ப கன்ஜஷன் இருக்கு. ஸ்லோவாத்தான் வரும். பார்க்கலாம்.'
'என்ன பாலாஜி திருப்தியா இப்ப. இவர் காமராஜ நாடார் மாதிரி. பார்க்கலாம்னா சரி பண்ணிடுவார்னு அர்த்தம்.'
'போங்க டாக்டர். எப்ப பார்த்தாலும் விளையாட்டுதான் உங்களுக்கு.' டாக்டர் கீர்த்தி வாசன் இப்படி சொல்லிவிட்டு சிரிக்கிறார்.
'சரி பசங்களா. பக்கத்துல ஒரு பிராமணா ஓட்டல் இருக்கு. ஆத்து சாப்பாடாட்டம் இருக்கும். திருப்தியா போய் ஒரு வெட்டு வெட்டுங்கோ.'
தொடரும்....
No comments:
Post a Comment