சுஜாதா க்ருஷ்ணமூர்த்தி
புளிக்கும்
சிறுகதை
. ஒவ்வொரு முறையும் அக்கம் பக்கத்தவர்கள் பிளைட்டில் போய் வந்த பெருமையை பீத்தும் போதும் கமலா மாமிக்கு ஏக்கம் பொங்கும். அதை அடக்கி கொள்வாள். வெளியில் பிளைட் போகும் சப்தம் கேட்கும் போதெல்லாம் ஓடி போய் அண்ணாந்து பார்த்து விட்டு தான் வீட்டுக்குள் வருவாள். வீட்டில் டிவியில் விமானம் வரும் காட்சியை பார்க்கும் போது முகத்தில் பரவசம் பொங்கும்.
ஆனால் மாமிக்கு போகும் சந்தர்பமும் வசதியும் கிடையாது. ஆனாலும் அந்த ஆசையும் ஏக்கமும் நாளுக்கு நாள் கூடி கொண்டே போனது தான் மிச்சம். மாமா கிருஷ்ணனுக்கு புரோகிதம் தொழில், கூப்பிட்டால் போக வேண்டும், வருமானம் சுமாராக வந்து கொண்டு இருந்தது. அந்தந்த நாட்களின் பாடே மிக பெரிதாக இருந்தது. ஓரு பிள்ளை குழந்தை 5 வது படித்து கொண்டு இருக்கிறான்.
. விடாமல் சொல்லி கொண்டே இருக்கும் மாமியை ஓரு முறையாவது அழைத்து போக கிருஷ்ணனுக்கு ஆசை தான், ஆனால் தான் தொழில் வருமானத்தை நினைத்து, அது கட்டாயம் முடியாது என்பது அவர்க்கு தெரியும். ஆனால் கமலா மாமியின் ஏக்கமும் புலம்பலும் கூடி கொண்டே போகவே அதை எப்படியாவது நிறைவேற்றும் நிலைக்கு தள்ள பட்டார். இதை விட வாழ்க்கையின் தேவைகள் இன்னும் இருக்கிறது தெளிவு கமலவுக்கு வரவில்லை என்பதில் கிருஷ்ணனுக்கு வருத்தம் தான்.
. எப்படியோ புரோகிதம் செய்யும் வீட்டில் சொல்லி சிறிது கடன் வாங்கி தட்டு தடுமாறி திருப்பதிக்கு போக விமான டிக்கட்டை ஓரு வழிக்கு மட்டுமே வங்கி கொண்டு வந்து கமலத்திற்கு காண்பித்தபோது சந்தோஷத்தின் உச்சிக்கு போனாள் கமலா.போவதற்கு 4,5 நாட்கள் முன்பிருந்தே தூக்கம் எல்லாம் விமானமும் ஏர்போட்டும் தான் சொப்பனத்தில் வந்தது.
. பையனை கூட்டி கொண்டு ஆயிரம் கனவுகளுடன் ஏர்போர்ட் வந்தடைந்தார்கள். விமானம் ஏற இன்னும் நிறைய நேரம் உள்ளது. போர்டிங் பாஸ் வாங்கி கொண்ட, இவர்களுக்குய ஏர்போர்ட் முற்றிலும் புதியது என்பதை புரிந்து கொண்ட ஊழியர்கள் கேட்டின் பக்கத்தில் கொண்டு, விட வேடிக்கை பார்த்து கொண்டே வந்து அமர்ந்தனர்.
. மூவருக்கும் காபி வாங்க போன கிருஷ்ணனிடம் மூன்று காபியின் விலை 450 ருபாய் என்று கேட்டு தெரிந்து கொண்ட கமலத்திற்கு தலை சுற்றியது. இதை வைத்து மாத அரிசி 10 கிலோ வாங்கி விடுவோமே என்ற நினைப்பு அவளை போட்டு வாட்டி எடுத்தது. இது ஓரு தேவையற்ற ஆசையோ என்ற எண்ணம் அவள் மனதை சுழற்றி அடித்தது. குழந்தை மட்டுமே குஷியாக பிரயாணம் செய்வதை பார்த்தாள்.
. விமானத்தில் ஏறியும் ஓரு தண்ணீரை தவிர எதுவுமே வாங்க மனதில்லை. ஏறி உட்கார்ந்த 20 நிமிடத்தில் இறங்க வேண்டி வந்ததும் கூட, ஓரு பெரிய ஏமாற்றம் கமலத்திற்கு. ஏறி உட்கார்ந்து சுற்றும் முற்றும் பார்ப்பதற்குள் இறங்கவேண்டுமா!!!!
ஓரு ரெஸ்ட் ரூம் கூட ஒழுங்காய் உபயோகப்படுத்த முடியவில்லையே!!! காலை நீட்டி ஸ்லாங்கமாய் உட்கார முடியவில்லையே!!!!
. ஆசை ஆர்வம் எல்லாம் புஸ் என்று போனதுபோல் ஆனது கமலத்திற்கு. இந்த பிராயணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க எத்தனை நாளாகுமோ என்ற நினைப்பில் துக்கம் நெஞ்சை அடைத்தது.
. இதே நினைப்பில் பெருமாள் தரிசனம் முடிந்து திரும்பி விமானத்தில் ஏறிய கமலத்தின் மனதில் உற்சாகமே இல்லை என்பதை கவனித்த கிருஷ்ணன்,
. என்ன கமலா குஷியா திருப்தியா என்றபோது பதில் இல்லை.
. ம்ம் என்றே பதில் வந்தது
. "நான் என்னவோன்னு நினச்சேன், எனக்கு என்னமோ பிடிக்கல, ட்ரெயின் பஸ்தான் வசதி, ட்ரைன்லயே போலாம் வரலாம், வேடிக்கை பார்த்து கொண்டே வரலாம், ரெஸ்ட் ரூம் வசதியா போலாம், நாம குழந்தையோட பேசிண்டே போலாம், ஏதாவது வாங்கி சாப்பிடலாம்" என்றாள் ஏமாற்றத்தை அடக்கிக்கொண்டு.
பட உதவிக்கு நன்றி. நண்பர் @Govindharaj lakshminarayanan
சுஜாதா கிருஷ்ணமூர்த்தி.
No comments:
Post a Comment