Friday, November 26, 2021

தாய்ப்பால்

 அன்றும் வழக்கம்போல் 10 நிமிடம் லேட்டாக சென்னை சென்ட்ரலில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது

முன்பதிவு பெட்டி என்பதால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது 

நானும் எனது மனைவியும் கீழ் தள இருக்கையில்  இருந்து வந்தோம் ஜோலார்பேட்டை வந்ததும் எங்கள் இருக்கைக்கு எதிர்புறமாக ஒரு தம்பதிகள் கைக்குழந்தையுடன் ஏறினார்கள்  அவர்களின் இருக்கைகள் மேலே ஒதுக்கப்பட்டிருந்தது

சற்று தயங்கியவாறே அந்தப் பெண்மணி என் மனைவியிடம் குழந்தையுடன் இருப்பதால் உங்கள் இருக்கையை தரமுடியுமா என்றார்கள்  அவர்கள் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து வருவதாகவும் கோயம்புத்தூர் செல்வதாகவும் சொன்னார்கள்

கைக்குழந்தையுடன் இருப்பதால் நான் எனது இருக்கையை அவருக்கு கொடுத்துவிட்டு எனது மனைவி இருக்கையிலேயே அமர்ந்து வந்தேன்

எங்கள் இருக்கையிலிருந்து பின்புற இருக்கையில் வடநாட்டு தம்பதிகள் இரண்டு வயது பெண் குழந்தையுடன் பயணித்தார்கள் அந்தக் குழந்தையின் அழுகுரல் மிகவும் கோரமாக இருந்தது

சற்றுப் பொறுத்து பார்த்த நான் குழந்தையின் அழுகை தாங்காமல் அவர்கள் அருகில் சென்றேன் அவர்களுக்கு தமிழ் மொழி தெரியாததால் ஹிந்தியில் பேசினார்கள்

எனக்கு ஹிந்தி தெரிந்ததால் அவர்களிடம் விவரம் கேட்டறிந்தேன்  மனைவிக்கு உடம்பு சரியில்லை என்றும் காய்ச்சல் அடிப்பதால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை என்றும்.   புட்டிப்பால் குடிக்காமல் பசியில் அழுகின்றாள் என்றும் கூறினார்கள்

என்ன செய்வதென்று தெரியாமல் எனது இருக்கைக்கு திரும்பி வந்து நான் கொண்டுவந்த சில்வர் டம்ப்ளரை எடுத்து என் மனைவியிடம் கொடுத்தேன்

குழந்தை அழுத காரணத்தை கூறினேன் மனைவி தெலுங்கு கார  பெண்ணிடம் கொஞ்சம் தாய்ப்பாலே தரும்படி கேட்டுக் கொண்டார்   ஏன் எதற்கென்று புரிந்துகொண்ட அந்த பெண்மணி தன் கணவனிடம் தன்  குழந்தையை ஒப்படைத்து விட்டு என்னைக் கூப்பிட்டு அழும் குழந்தையிடம் கூட்டிப்போக சொன்னார்கள்

குழந்தைக்குத்தான் பால் கேட்டேன் என்று என் மனைவி கூறவும் அழுகின்ற குழந்தையை ஹிந்தி பெண்ணிடம் இருந்து வாங்கி தன் மார்போடு அணைத்துக் கொண்டு ஆம்பள களை விலகச் சொல்லி விட்டு தன் தாய்ப்பாலை அந்த அழுகின்ற குழந்தைக்கு கொடுத்தாள்

சற்று நேரத்தில் அந்த குழந்தையின் அழுகை நின்றுவிட்டதுபாலை நன்றாக குடித்துவிட்டு அந்தத் தாயின் முகத்தைப் பார்த்து மழலை சிரிப்பு பொழிந்தது

குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு தனது இருக்கைக்கு திரும்பி வந்தாள்புட்டிப்பாலை குடிக்காத குழந்தை  எப்படி டம்பளரில் குடிக்கும் என்று தெலுங்கில் என்னிடம் கேட்டாள்

அதனால்தான் நான் நேரடியாக சென்று கொடுத்தேன் என்றாள்  ஹிந்தி காரர் எழுந்துநின்று  பாலை கொடுத்த அம்மாவிடம் அவர் மொழியில் மிக்க நன்றி மிக்க நன்றி என்று கூறி இருகைகளையும் மேலே தூக்கினார்  இந்த நிகழ்ச்சியை பார்த்து இருந்த எங்கள் கண்கள் ஈரமாச்சு  ஜாதியிலோ மதத்திலோ மொழியிலோ தாய் பாசம் இல்லை  என்பதையும்  தாய்ப்பாலில் மட்டும்தான் தாய்ப்பாசம் இருக்கிறது  என்பதையும்  எங்களை அனைவரையும் புரியவைத்தது

வாழ்க தாயுள்ளம் வளர்க தமிழ் வாழ்த்துகிறோம் தாயே உன்னை உன் உடல் அறுத்த போதும் எண்ணெ உன் உயிராய் காத்துக் கொண்டாய்   என்று நான் எழுதிய பாடலின் வரிகள் மனதில் ஓடின.......

அன்புடன் பாலா மணியன் எழுத்தாளர் கோவை

No comments:

Post a Comment