முக்திநாத் பெருமாளின் அற்புத தரிசனம்!
முக்திநாத், நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.
வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் சிறந்த திவ்ய தேசமாகும்.
திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர்.
ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும்.
கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது.
எனவே முதலில் காட்மாண்டிலிருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக விமானம், ஹெலிகாப்டர் அல்லது சிற்றுந்து மூலம் ஜொம்ஸம் சென்று, பின்னர் ஜுப் மற்றும் சிறிது துரம் நடந்து முக்திநாதரை தரிசிக்கலாம்
ஆழ்வார்கள், இத்தலத்தை, 12-பாசுரங்களால், சாளக்கிராமம் என்றே மங்களாசாசனம் செய்துள்ளனர்.
இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோத்த மனிருக்கை
தடவரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே.
பெரியாழ்வார் திருமொழி-4.7.9 (399)
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து,
மலை கொண்டலை நீரணைகட்டி மதிள் நீரிலங்கை வாளரக்கர் தலைவன்,
தலை பத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடை நெஞ்சே.
திருமங்கையாழ்வார்-பெரிய திருமொழி-1.5.1 (988)
முக்திநாத்தை நூறு புனித நீர் நிலைகள் எனப் போற்றி வழிபடுகிறார்கள்.
வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பிரதானமாக கருதப்படும் 108 புராண திவ்ய தேச ஆலயங்கள் சிலவற்றில் சாளக்கிராம கற்கள் கொண்டே மூல மூர்த்தி சிலை அமைத்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த சிலைகள் உச்சந்தலை தொடங்கி, நாபி வரையில் நீண்ட துளை உடையதாக இருக்கும்.
உட்புறத்தில் சங்கு, சக்கரம், தாமரை ஆகிய விஷ்ணுவின் சின்னங்களும் இருக்கும்.
அப்படிப்பட்ட சாளக்கிராம சிலைகள் மூலவராக இருக்கும் ஆலயங்கள் பக்தர்களுக்கு விரைவில் பலன் தருவதாக கூறப்படுகிறது.
நேபாளத்தில் உள்ள முக்திநாத் என்னும் சாளக்கிராம தலம், தாமே சுயம்புவாக தோன்றியதால் ‘ஸ்வயம் வியக்தம்’ என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது.
அங்கு இறைவன் நிரந்தரமான நிலையில், நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்று வைணவ பெரியோர்களால் குறிப்பிடப்படுகிறது.
கண்டகி என்ற புண்ணிய நதியில் நீராடி முக்தி நாதன் எனப்படும் சாளக்கிராம மூர்த்தியை பக்தியுடன் வழிபடுபவர்கள், பூவுலகில் சுகமாக வாழ்ந்த பின்னர் வைகுண்டத்தில் வசிப்பார்கள் என்று ‘விஷ்ணு புராணம்’ தெரிவிக்கிறது.
இப்படிபட்ட சிறப்புகளையுடைய முக்திநாத் பெருமாளை நேரில் சென்றால் கூட இவ்வளவு அருமையாக சேவிக்கமுடியாது.
அவ்வளவு அழகு, அவ்வளவு சிறப்பான தரிசன காணொளிக்காட்சி 👆
🙏🏼ஓம் நமோ நாராயணாய🙏🏼
No comments:
Post a Comment