கனியுமோகாதல்_37
சனிக்கிழமை மதியம் நான்கு மணி. பிக்ஷேஸ்வரன் சார் அலுவலகத்தில் பரபரப்பு.
அவர் அறையில் ஒரு ஈஸி ச்சேர் போடப் படுகிறது. அதற்கு பக்கத்தில் ஒரு ஸ்டூல். இருக்கும் இடத்தில் ஆறேழு ச்சேர்கள். ஈஸி ச்சேருக்கு இன்னொரு பக்கத்தில் ஒரு ச்சேர்.
இளம்வழுதி, பிரபாகர், ஜெயஸ்ரீ, மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜூனியர்களாக சேர்ந்த மலையப்பன், அபர்ணா இவர்களோடு மைதிலியும் ச்சேர்களில் அமர்ந்திருக்கிறார்கள்.
கைத்தாங்கலாக சந்தர் அப்பாவை அழைத்து வருகிறான். மரியாதை நிமித்தமாக எல்லோரும் எழுந்து நிற்க சைகையில் சிரித்துக் கொண்டே அமரச் சொல்கிறார். ஈஸி ச்சேரில் வழுதியும் சந்தரும் பிக்ஷேஸ்வரனை அமர வைக்கிறார்கள்.
'எல்லாரும் வந்தாச்சா? மைதிலி, நீ என் பக்கத்துல உட்காரு. நீ தானே ச்சீஃப் இங்க இப்போ.'
குரலில் அந்த நாளைய பலம் இல்லையென்றாலும் பெரிய குறையாக இல்லை.
சந்தர் ஆரம்பிக்கிறான் முதலில்.
'உங்க எல்லாருக்கும் வணக்கம். அப்பா உடம்பு தேறிண்டு வந்தாலும் முந்தி மாதிரி ஆக்டிவா இருக்க முடியுமான்னு இப்ப சொல்ல முடியல. இன்னும் கொஞ்ச நாள் பார்த்துட்டு அவரை சிங்கப்பூர் அழச்சிண்டு போய் ட்ரீட்மெண்ட் கொடுக்கலாமான்னு யோசிச்சிண்டிருக்கோம்.'
'அப்பா கிட்ட ஐநூறு கேஸ்களுக்கு மேல ஓடிண்டிருக்கறதால என்ன பண்றதுன்னு யோசனையா இருந்தது எங்களுக்கு. அதனால மைதிலி அக்கா கிட்ட பேசிட்டு சில முடிவுகள எடுத்திருக்கா அப்பா. எனக்கு இந்த கோர்ட் கேஸ் எல்லாம் என்ன ஏதுன்னே தெரியாது. இன் ஃபேக்ட் பயம் வேற.'
எல்லோரும் சிரிக்கிறார்கள். அறையில் இருந்த இறுக்கம் சற்று குறைகிறது.
'சிரிச்சாலும் ஆனஸ்ட்லி அதான் உண்மை. இனி அக்காவே நாங்க டிஸ்கஸ் பண்ணினத பத்தி உங்க கிட்ட சொல்லுவா.'
'ஏய், சந்தர். அதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் பேசணும் இவாளோட.'
'எதுக்கப்பா ஸ்ட்ரெயின் பண்ணிண்டு. சரி, கேக்க மாட்டேள். கொஞ்சமா பேசுங்கோப்பா'
பிக்ஷேஸ்வரன் ஆரம்பிக்கிறார் இப்போது.
'நான் கேஸ்கள உங்க எல்லார் கிட்டேயும் பிரிச்சு கொடுத்துடலாம்னு சொன்னேன். மைதிலி ஒத்துக்கல. எங்காத்து சொந்தம் ஸீனியர் அட்வகேட் ஸ்ரீனிவாசன் கிட்ட எல்லா கட்டுகளையும் கொடுத்துட்டு உங்கள அவருக்கு ஜூனியர்ஸா அனுப்பலாம்னு சொன்னேன். அதுக்கும் பிடிவாதமா மைதிலி ஒத்துக்கல. அப்பறம்தான் என்ன பண்ணலாம் எப்படி பண்ணலாம்னு யோஜன பண்ணி டிஸ்கஸ் பண்ணினோம் மைதிலியோட எங்காத்து மனுஷாள்லாம் சேர்ந்து. பாவம் ஒண்டியா நின்னு சமாளிப்பேங்கறா மைதிலி. எனக்குதான் கஷ்டமா இருக்கு. கல்யாணம் கார்த்தின்னு அவளுக்கும் இருக்குமேன்னு பார்த்தேன். இல்ல சார், சமாளிப்போம்னு கான்ஃபிடெண்டா சொல்றா. அவ சொல்றதையும்தான் ட்ரை பண்ணுவோமேன்னு டிஸைட் பண்ணியிருக்கோம். மத்தத அவ சொல்லுவா உங்க கிட்ட. மைதிலி, ப்ரொஸீட்.'
'எஸ் யுவர் ஆனர்'
எல்லோரும் சிரிக்கிறார்கள் மைதிலி அப்படி சொன்னவுடன்.
'கொழுப்ப பாரு எமகாதகிக்கு.'
பிக்ஷேஸ்வரன் அப்படி சொல்ல மீண்டும் சிரிப்பு அந்த அறை முழுவதும்.
'சார ரொம்ப நாழி காக்க வைக்க வேண்டாம். ரெஸ்ட் எடுக்கட்டும். சுருக்கமா சொல்றேன். டவுட்ஸ் இருந்தா பின்னாடி க்ளாரிஃபை பண்றேன், என்ன?'
'வழுதி சார். நீங்க கவர்மெண்ட் ரிலேடட் கேஸ்களுக்கு நீங்கதான் இனிமே இன்சார்ஜ்.'
'எந்த ப்ராபர்ட்டி கேஸ்களும் இனிமே பிரபாகர் பார்த்துக்கணும்.'
'ஜெயஸ்ரீ, இனிமே நீ குடும்ப கேஸ்கள பார்க்கணும் இண்டிபெண்டண்டா. இன்க்ளூடிங் டௌரி கேஸஸ்.'
'நான் ஓவராலா பார்த்துப்பேன்.'
மைதிலி இப்படி முடித்தவுடன் இளம்வழுதி எழுந்து கொண்டு...
'மைதிலி மேடம், நம்ம கிட்ட நிறைய காப்பி ரைட் கேஸஸ் இருக்கே. அதெல்லாம்....'
'வழுதி கேக்கறான் பாரு. உன் வாயாலேயே சொல்லு.'
சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே பிக்ஷேஸ்வரன் மைதிலி பக்கம் திரும்புகிறார்.
'நான் சார் கிட்ட ஸஜஸ்ட் பண்ணினேன். ஸ்ரீதர் சார திரும்பவும் கூப்பிடலாம்னு. அடிக்கடி சார் சொல்லிண்டே இருப்பார் காப்பி ரைட் கேஸ்கள ஸ்ரீதர் நல்லா ஹாண்டில் பண்ணுவார்னு. அவர் கிட்ட பேச சொல்லியிருக்கார். பேசப் போறேன்.'
இப்படி மைதிலி முடித்தவுடன் பிக்ஷேஸ்வரன் பலமாக சிரிக்கிறார்.
'ராட்சஸி பொய் சொல்றா. அந்த படவா ஸ்ரீதர கூப்டுக்கணும்னு ஒத்த காலுல நின்னு சண்ட போட்டா என்னோட. இதுங்க ரெண்டும் இணை பிரியாததுங்களே. அதனால சேர்த்துக்கோன்னு சொல்லிட்டேன். உங்களுக்கும் சரிதானே?'
'வீ வெல்கம் திஸ் சார். குட் டெஸிஷன் சார் ரியலி.'
ஜெயஸ்ரீ சொல்ல மற்றவர்களும் ஆமோதித்தனர்.
'அப்புறம் அந்த ரெண்டு பொடிப் பசங்க. குழந்தைகளா நீங்க ரெண்டு பேரும் கவலைப் படாதீங்க. என்னை விட இந்த கரடிகள்லாம் உங்களுக்கு எல்லாத்தையும் நன்னா சொல்லி கொடுப்பாங்க. அதுவும் வரப் போறானே ஸ்ரீதர், அவன் ஒண்ணு போதும். ஹீ வில் மேக் யூ bபோத் பர்ஃபெக்ட்.'
'தேங்க் யூ சார். மைதிலி மேடம் இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை. வி வில் லேர்ண் வித் ஸ்பிரிட்.'
'மலையப்பன், அபர்ணா, நீங்க ரெண்டு பேரும் டேட்ஸ் வாங்கறது, அட்மிஷன்ஸ் ப்ளஸ் ஸ்டாம்பிங் இதுல தற்சமயம் ஒர்க் பண்ணுங்க. டைபிஸ்ட் சாந்தி மேடம் கிட்ட டைப்பிங் ரெடி பண்றது அப்புறம் டாகுமெண்ட்ஸ் செக்கிங் பார்த்துக்கங்க. அப்பைக்கப்ப யோசிச்சு மத்தத சொல்றேன்.'
'சார், எல்லாத்தையும் சொல்லியாச்சுன்னு நெனைக்கிறேன். வேற ஏதாவது விட்டு போயிருந்தா நீங்களே...'
'அப்புறம் ஒண்ணு சொல்ல உட்டுட்ட. உங்க ரெம்யூனரேஷன் விஷயமா பேசியிருக்கேன். உங்க சார்புல மைதிலியும் பேசினா. வாட் எ க்ரேட் கேர்ள் ஷி இஸ். உங்க சம்பளத்துக்காக என்னோட ரொம்ப டைம் எடுத்துண்டா. நீங்க எல்லாருமே அவளுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.'
அவர் ஹிண்டிலேயே ஓரளவு புரிந்தது மற்றவர்களுக்கு மைதிலியின் முயற்சி எப்படி இருந்திருக்கும் என்று.
மீட்டிங் முடிந்து அனைவரும் அவரவர்க்கான இருக்கைகளை நோக்கி சென்றார்கள். அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி.
'இங்க கிட்டக்க வா மைதிலி.'
ஈஸி சேர் அருகிலேயே அமர்கிறாள். தன் வலது கையால் அவள் தலையை தடவுகிறார்.
'நான் இப்ப சொல்றேன் மைதிலி. யூ ஆர் கோயிங் டு பீ எ சும்ரீம் கோர்ட் ஜட்ஜ். நீ பதவி ஏத்துக்கும்போது நான் அத கண்ணால பார்ப்பேனான்னு தெரியாது. ஆனா இது நிச்சயம் நடக்கும்.'
'எல்லாம் உங்க ஆசீர்வாதம் சார்.'
'சந்தர், என்னோட பெட்ரூமுல ஒரு பை வெச்சிருக்கேன் பாரு. அத கொண்டு வா சீக்கிரமா.'
எடுத்து வருகிறான். அதைப் பிரித்து அதிலிருந்து ஒரு கோட்டை எடுக்கிறார்.
'மைதிலி, இந்தா, இந்த கோட்ட வெச்சுக்கோ. இது ரொம்ப ராசியானது. ஜெத்மலானி ஒரு கேஸ் விஷயமா டெல்லி கூப்புட்டிருந்தார். அவருக்கு ஹெல்ப் பண்ணினதுக்காக எனக்கு இந்த கோட்ட கிஃப்டா கொடுத்தார். என்னவோ நேத்திலேந்து இதை உன் கிட்ட கொடுக்கணும்னு தோணிண்டே இருந்தது. அவருடைய போல்ட்நெஸும் ஆர்க்யூமென்ட் ஸகில்லும் உனக்கும் வரணும், வரும்.'
'என்ன ரொம்ப பெருமைப் படுத்திட்டேள்.'
'யூ டிஸர்வ் மைதிலி'
'சந்தர், போகலாமா? வேணும்னா அந்த பையன் வழுதிய கூப்டுக்கோ ஹெல்ப்புக்கு.'
தொடரும்....
No comments:
Post a Comment