மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வேப்பத்தூர்
இந்த ஊரின் தென்திசையில் "ஈச்சங்குளம்" னு ஒரு பெரிய குளம் இருக்கு. கிட்டதட்ட 9 ஏக்கர் பரப்புள்ள இந்த குளக்கரையில் மிகப் பழைய பிரம்மாண்டமான ஒரு மண் மேடு இருந்தது. அந்த ஊரில் உள்ள ஒரு அந்தணரின் கனவிலே சுவாமி தோன்றி என்னை தடாகத்தில் வந்து பாரு தீர்த்தத்தில் ஒரு வெளிச்சம் தோன்றும் அந்த இடத்தில் நானிருப்பேன் என சொல்லி மறைந்து விட்டார்.
மறுநாள் குளத்தில் சென்று பார்த்த பொழுது சுவாமி யோட சிரசு தென்பட்டது . அந்த சிரசை வெளியே எடுத்தபோது பானம் மட்டும்தான் (மேல்பகுதி) கிடைத்தது. இது பள பள வென்று ஒரு அபூர்வ வகை கருப்பு கல்லினால் கண்ணாடிபோன்று பளபள வென்று இருந்தது.
இதை எங்கு வைப்பது எப்படி கோவில் கட்டுவது என்று பொருளாதார வசதியும் வேண்டுமே என்று எப்போதும் காஞ்சி காமகோடி பீடத்தின் மீது மரியாதையும் பக்தியும் உள்ள ஊர் பொதுமக்கள் அப்போது பீடாதிபதியாக இருந்த சங்கராச்சாரியார் அவர்களிடம் சென்று கேட்கிறார்கள்.
அவரோ ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கைப்பிடி அரிசி வாங்கி அதை சேமித்து தற்போதுள்ள இடத்தை கையை காட்டி கோவில் அமைக்க சொல்லுகிறார்.
சங்கராச்சாரியார் சொன்னபடி எல்லார்கிட்டயும் ஒரு கைப்பிடி அரிசி வாங்கி ஊர் பொதுமக்கள் எல்லாம் சேர்ந்து இந்த கோவிலை கட்டி முடிக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து கருங்கற்களால் பீடம் அமைத்து இந்த பானத்தை (மேற்பகுதியை) பொருத்தி ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி மீனாட்சி சுந்தரேஸ்வரர் என பெயரிட்டு வணங்கி வந்தனர்.
இது பல வருஷங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட கோவில். இந்த கோவிலில் அடி பிரதட்சனம் செய்தால் நினைத்த காரியம் உடனே கைகூடும் என்பது நம்பிக்கை
2004 வது வருஷம் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து இருக்கு அதிலிருந்து தொடர்ந்து மூன்று கால பூஜையும் நடைபெற்று வருகிறது பன்னிரண்டு வருஷத்துக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்கிற ஐதீகத்தின் பொருட்டு துர்க்கை பைரவர் சன்னதிகள் புதுசா நிர்மாணிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் காஞ்சி ஜகத்குரு சங்கராசார்ய சுவாமிகள் அருளாசியுடன் 2019 வருஷம் திரும்ப கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பக்கத்தில் காமாட்சி அம்மன். மிகவும் சிறிய அழகுமிகுந்த அம்மன். இவள் கையில் உள்ள சங்கு சக்கரங்கள் திருடர்களால் பின்னப்படுத்தப்பட்டதால் புதிய சிலை நிறுவி இருக்கிறார்கள்.
எனவே இப்பொழுதும் புடவை தலைப்பால் அம்மன் தோள்பட்டை அருகேயுள்ள சங்கு சக்கரங்கள் மூடியே அலங்காரம் செய்யப்படுகிறாள்.
இதன் அருகிலேயே காமாட்சி அம்மன் ஆலயமும் இரூக்கிறது. இதுவும் மிகச்சிறிய ஆனால் தேஜஸ் மிகுந்த அம்பாள்.
வேப்பத்தூரில் இந்த காமாட்சி மீனாட்சி மற்றும் திரு வெள்ளியங்குடி பெருமாள் இவைகளே பார்க்கவேண்டிய ஸ்தலங்கள்.
"வாழ்க்கையில் சிலரை விலக்கி வைப்பதும் .....
சிலரிடம் இருந்து விலகி இருப்பதுமே புத்திசாலித்தனம்"
அன்புடன்
கமலா
No comments:
Post a Comment