Friday, November 5, 2021

கனியுமோகாதல்_2

 #கனியுமோகாதல்

கனியுமோகாதல்_2

தொடர்கதை: கனியுமோ காதல்

அத்யாயம்: 2

'நீ இருக்கேங்கறதால லைட்டா உட்டுட்டான்.  இல்லாட்டி கத்தோ கத்தோன்னு கத்தியிருப்பான்.'

'நானும் உங்காத்துக்கு வந்த கெஸ்ட்டுங்கறதால உங்கள போட்டுக் கொடுக்கல ஸ்ரீ கிட்ட.'

'அது இருக்கட்டும்.  உங்காத்துல யார் யார் இருக்கா?  அப்பா என்ன பண்றார்?  வடகலையா தென்கலையா?'

'நாங்க ஸ்மார்த்தா மாமா.'

'எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது.  பேர் மைதிலின்னு இருந்ததால கேட்டேன்.  எங்க மனுஷாள்னா உங்க ஸ்மார்த்தா ஸ்வாமிகள் பேரையெல்லாம் குழந்தைகளுக்கு வைக்க மாட்டா.  ஆனா நீங்கள்லாம் அப்படி இல்லை.  டவுட்ட க்ளியர் பண்ணிக்கத்தான் கேட்டேன்.'

'க்ளியர் பண்ணிண்டுட்டு என்ன பண்ணப் போறேள்?'

'நல்ல வரனா இருந்தா கைய காமிச்சு விடலாமில்லையோ?'

'நீங்க வேற மாமா.  எங்க அப்பா கிட்ட சொல்லிட்டேன்.  இருபத்தேழு வயசானதுக்கப்பறம் தான் கழுத்த நீட்டுவேன்னு.  தனியா ப்ராக்ட்டீஸ் பண்ண ஆரம்பிச்சு முதல் கேஸ் அட்லீஸ்ட் கோர்ட்டுக்கு வரணும்.'

'அது எப்படி ஸ்ரீதர் மாதிரியே பேசற?  அவனும் இதையேதான் சொல்லி சொல்லி என் வாய அடைக்கிறான்.'

'என்ன மை, கிளம்பலாமா?'

'ஏண்டா லைப்ரரி தான போறேள்.  கொஞ்சம் முன்ன பின்ன ஆனாத்தான் என்ன? அவ ரெண்டு வார்த்தை என் கிட்ட பேசிட்டுட்டுத்தான் கிளம்பட்டுமே?'

'மை, இவர விட்டா பேசிண்டே இருப்பார்.  நீ மொதல்ல கிளம்பு.'

'நான் இன்னொரு நாள் சாவகாசமா வரேன் மாமா.  நிறைய பேசலாம்.'

'சரி.  ஜாக்ரதையா போயிட்டு வாங்கோ.  டூ வீலர்லையா போற?'

'இல்லப்பா.  மைதிலி இருக்கறதால பஸ்ஸுலேயே போயிட்டு வந்துடறேன்.  ரெண்டு ஸ்டாப்பிங் தானே'.

'எத்தனை நாழி ஆகும்?'

'சொல்ல முடியாது அப்பா.  நிறைய நோட்ஸ் எடுக்கணும்.  அதுக்குதான் மைதிலியையும் வர சொன்னேன்.  நீ கேரியர் சாப்பாடு வந்தோண்ண சாப்டுடு.  எனக்காக வெயிட் பண்ணாத.'

கிளம்பி பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து கொண்டிருக்கும் போது, மைதிலி கேட்டாள்.

'கேரியர் சாப்பாடுதானா ஆத்துல?'

'வேற எப்படி?  எங்க அம்மா போய் சேர்ந்ததுக்கு அப்புறம் ஆறு வருஷமா இப்படித்தான் சாப்பாடு.  ஒரு வேளை ரெண்டு பேருக்கு எடுத்துப்போம்.  கார்த்தாலையும் சாயந்திரமும் ஏதாவது கஞ்சி, உப்புமா, பூரி, சப்பாத்தி இப்படி ஏதாவது பண்ணிப்போம்.'

'இந்த கஷ்டத்துக்கு கல்யாணத்த ஒண்ணு பண்ணிக்க வேண்டியது தான?'

'என்ன உளறர எங்க அப்பா மாதிரியே.  சாப்பாட்டுக்காக கல்யாணமா?  நன்னா இருக்கு மை, நீ சொல்றது.  ஏதாவது சம்பாதிக்க ஆரம்பிச்சாதான அதைப் பத்தியெல்லாம் யோசிக்க முடியும்?'

'இப்பதான் பிக்‌ஷேஸ்வரன் சார் அப்பைக்கப்ப பணம் தராரோன்னோ?'

'மை, உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு.  சார் பணத்த எதிர்பார்த்துண்டே இருக்கணுமாக்கும்.  மூட் இருந்தா கொடுப்பார்.  இல்லாட்டி ஒண்ணுமே பேசாம ஆத்துக்குள்ள போயிடுவார்.  மீறி நாமே ஏதாவது பணம் கேட்டா தன்மானம் போற அளவுக்கு பேசிட்டு பணத்த நீட்டுவார்.  நான் பொறுமையா இருக்கறதே இவர் கிட்ட விஷயம் நிறைய இருக்குங்கறதுதான்.  காப்பி ரைட் கேஸஸ் நிறைய வருது.  மனுஷன் கோர்ட்டுல நின்னார்னா ஜட்ஜஸ் கூட பயப்படறாங்க  பார்த்திருக்கியோன்னோ?'

'உன்ன காச்சராரே தவிர, நீ ஒரு நாள் வரலைன்னா டென்ஷன் ஆயிடறார்டா.  உங்க குரு சிஷ்ய ரிலேஷன்ஷிப்..  இட் இஸ் ரியலி க்ரேட்.'

'முந்தாநாள் ஒரு பெரிய பண்டுல கொடுத்து திங்கக் கெழம நீ தான்    ஆர்க்யூ பண்ணனும்னு சொல்றார்.  ரெண்டு நாளும் ராத்திரி தூக்கம் போச்சு.  சரி, இவ்வளவு கஷ்டப் பட்டு பண்ணினா ஆயிரெத்தெட்டு நொள்ள சொல்வார்.  உனக்கு பரவாயில்ல.  ஏதோ அதுக்கு டேட்டு வாயிண்டுவா, இதுக்கு ரிஜாய்ண்டர் போடு அப்படி இப்படின்னு லைட்டா வேல கொடுக்கிறார்.'

'நல்ல பொறாமை.  நன்னா வருவ ஸ்ரீ.'

'அப்படி இல்ல மை.  படற கஷ்டத்த உன் கிட்ட கொட்டி தீர்த்தா கொஞ்சம் தெம்பாயிடுவேன்.  அதான்.'

'சரிடா ஸ்ரீ.  இப்ப லைப்ரரி போய் என்ன பண்ணப் போற?'

'நாளை ஆர்க்யூமெண்டுக்கு  ஏத்த கேஸ் ஸ்டடீஸ் கிடைக்கறதான்னு பார்க்கணும்.  சட்டங்கள வெச்சு ஸ்ட்ரக்ச்சர் பண்றத விட கேஸ் ஸ்டடீஸ் தான் பெட்டரா இருக்கும்.  பெடிஷனர் தரப்புல என்.ஸி. ராகவாச்சாரி சார் ப்ரமாதமா ஃபைல் பண்ணியிருக்கார்.  உடைக்கறது லேசு பட்ட காரியமில்ல.'

'கேஸ கொஞ்சம் என் கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்னா நானும் ஸஜெஷன் சொல்லுவேனேன்னோ?'

'கண்டிப்பா.  லைப்ரரி கேம்பஸ்ல போய் உட்கார்ந்து டீட்டெய்லா டிஸ்கஸ் பண்ணலாம்.  நீயும் சண்டக்காரிதான.  முடிஞ்சா ஒரு ட்ராமா போட்டு கேஸை ஒரு ஒத்திகை பார்க்கலாம்.'

கண்ணகி சிலை ஸ்டாப்புக்கு வந்தவுடனேயே பஸ் வந்தது.

'மை, என் கிட்ட ச்சேஞ்சா இல்ல.  எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துடு.'

'சரி ஸ்ரீ'

தொடரும்...

No comments:

Post a Comment