❤️ தக்காளி சாம்பார்
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்புமுக்கால் கப்
மஞ்சள்தூள்அரை டீஸ்பூன்
வெங்காயம்1
தக்காளி2
கீறிய பச்சை மிளகாய்2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
அரைக்க:
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
தாளிக்க:
நெய் - 3 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 1
செய்முறை :
துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும். பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தில் பாதி + தக்காளி + பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் அரைத்த விழுது, உப்பு, அரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி சேர்க்கவும்.
பின் குறிப்பு :
சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
சாம்பார் இன்னும் வாசனையாக இருக்க தாளிப்பில் சீரகத்தை மறக்காமல் சேர்க்கவும். இதில் விரும்பினால் முருங்கைக்காய், கத்திரிக்காய் சேர்த்து செய்யலாம்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :
இந்த சாம்பார், இட்லி, தோசை, சப்பாத்தி, வெண்பொங்கல், ஊத்தாப்பம் என அனைத்திற்கும் நன்றாக இருக்கும்
சுரைக்காய் சாம்பார்
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு ஒன்றரை கப்
சுரைக்காய்கால் கிலோ
தக்காளி 1
புளிநெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய்1
சீரகம்1 டீஸ்பூன்
பூண்டு பல்லு5
மஞ்சள் தூள்அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய்2
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க :
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை :
குக்கரில் பருப்புடன் சீரகம், சிறிதாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். 4 விசில் விடவும்.
விசில் அடங்கியதும் பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் சுரைக்காய் சேர்த்து வதக்கவும். சுரைக்காய் வெந்ததும் அதில் மசித்து வைத்த பருப்பினைச் சேர்க்கவும்.
பின் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கொத்தித்த சாம்பாரில் ஊற்றவும்.
இப்போது சூடான சுவையான சுரைக்காய் சாம்பார் தயார். விரும்பினால் அதன் மேல் கொத்த மல்லி இலை தூவினால் வாசம் மிகுந்து இருக்கும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :
தோசை, இட்லி மற்றும் சாதத்துடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்
No comments:
Post a Comment