❤️ பூசணிக்காய் சாம்பார்
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு 100 கிராம்
பூசணிக்காய்கால் கிலோ
தக்காளி1
பச்சை மிளகாய்3
சாம்பார் பொடி2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
புளிஒரு சிறிய எலுமிச்சை அளவு
கொத்தமல்லி தழைஒரு கைப்பிடி
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க :
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -அரை கப் (நறுக்கியது)
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை :
பூசணிக்காயை தோல் சீவி விதைகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
தக்காளி, வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். பிறகு புளியை கரைத்துக் கொள்ளவும். பருப்பை வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதன் பின்பு நறுக்கிய பூசணிக்காய், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும். அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். அதனுடன் கரைத்து வைத்துள்ள புளியையும், சிறிது தண்ணீரையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின்பு மசித்து வைத்துள்ள பருப்பை அதனுடன் கொதிக்க விடவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் மல்லித்தழை தூவி இறக்கி வைக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :
சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும் .
❤️ பீன்ஸ் சாம்பார்
பொருள் - அளவு
பீன்ஸ் கால் கிலோ
சின்ன வெங்காயம் அரை கப்
தக்காளி 1
துவரம் பருப்பு 2 கப்
புளிஎலுமிச்சை அளவு
உப்பு தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
கடுகுஅரை டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் 1 சிட்டிகை
கறிவேப்பிலை 1 கொத்து
வரமிளகாய் 2
செய்முறை :
பீன்ஸ் நரம்பை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியைத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் பருப்பு, பீன்ஸ், சின்ன வெங்காயம், தக்காளி, ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும். பின்னர் அதில் மல்லித் தூள், மிளகாய்த் தூளைச் சேர்த்து, பிறகு புளிக்கரைசலை ஊற்றவும்.
5 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
பின்பு வாணயில் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து சாம்பாரில் கொட்டி இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :
சாதத்திற்கு பீன்ஸ் சாம்பார் மற்றும் பொரியலுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment