தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி: ருசியான வாழைப்பழ அல்வா!!
தேவையான பொருட்கள்
2. வெல்லம்150 கிராம்
3. தண்ணீர்- 1/4 கப்
4. நெய் 5 தேக்கரண்டி
5. ஏலக்காய் தூள் 1/4 தேக்கரண்டி
செய்முறை
* வாழைப்பழ அல்வா செய்வதற்கு முதலில் வாழைப்பழத்தை தோலுரித்து தோராயமான துண்டுகளாக நறுக்கவும். வாழைப்பழ துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.
*அல்வா செய்ய வெல்லப் பாகு செய்ய வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லம் சேர்த்து கலக்கவும்.
* வெல்லம் கரைந்ததும் இதனை தனியாக வைக்கவும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு தேக்கரண்டி நெய் விடவும்.
* நெய் உருகியதும் அதில் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும். மேலும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு அதில் வாழைப்பழ பேஸ்டை சேர்க்கவும்.
* பத்து நிமிடங்கள் கிளறி கொண்டே இருக்கவும். பின்னர் வெல்லப் பாகு சேர்த்து கலந்து விடவும். இதனை குறைந்த தீயில் 15 நிமிடங்கள் வேக விடலாம். அவ்வப்போது நெய் சேர்த்து கொண்டே இருங்கள்.
* அல்வா கடாயில் ஒட்டாமல் வரும்போது ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் கிளறவும். அவ்வளவு தான்… ருசியான வாழைப்பழ அல்வா தயார்🔵🔴
No comments:
Post a Comment