Friday, November 5, 2021

அவரைக்காய் சாம்பார்

 ❤️ அவரைக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
அவரைக்காய் கால் கிலோ
துவரம் பருப்பு 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 2 
மஞ்சள் தூள்1 டீஸ்பூன்
சாம்பார் தூள் 1 டேபிள் ஸ்பூன்
புளிச்சாறு 1 டம்ளர் 
கொத்தமல்லி 1 கைப்பிடி 
உப்பு தேவைக்கேற்ப
தண்ணீர் தேவைக்கேற்ப

தாளிக்க:

எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
வரமிளகாய் - 2 
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை :

 முதலில் துவரம் பருப்பு, மஞ்சள் தூள் சிறிது சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

 பின்பு அதில் தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி, பின் அவரைக்காயை போட்டு 15 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பிறகு அதில் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, 20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். அவரைக்காய் வெந்ததும், அதில் புளிச்சாற்றினை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கினால் அவரைக்காய் சாம்பார் ரெடி!!!

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :

 சாதம், இட்லி, தோசை.


GL

No comments:

Post a Comment