இளநீர் இரசம் 🥥
செய்முறை
: 200 அல்லது 250 மிலி இளநீரை தூசுகள் இன்றி வடிகட்டி எடுத்து வைக்கவும். வெறும் வாணலியை சூடாக்கி அதில் வெந்தயம் & ஓமம் தலா 1/2 டீஸ்பூன்,
சீரகம் & மிளகு தலா 1 tbs போட்டு நன்கு மணக்க வறுத்து எடுத்து ஆறவைத்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும்.
பின்பு அதே மிக்ஸியில் கொஞ்சம் மல்லித்தழை & கறிவேப்பிலை, காம்பில்லாத பச்சை மிளகாய் 2, 5 பற்கள் பூண்டு, 2 தக்காளிகள்..
அனைத்தையும் போட்டு மை போல அரைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் 1tbs நல்லெண்ணெய் விட்டு அரை டீஸ்பூன் கடுகு..
சிறிது பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சிறிது சேர்த்து பொரிய தாளிக்கவும். பின்னர் மிக்ஸியில் அரைத்த மசாலா & அரைத்த பவுடர்..
ஒரு எலுமிச்சையை பிழிந்து எடுத்த சாறு சிறிது மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு இதில் இளநீர் ஊற்றி அதே அளவு நீரும்..
தேவையான உப்பும் சேர்த்து ஒரு முறை நன்கு கலக்கி இரசத்தை ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைக்கவும். கொதி திரள ஆரம்பிக்கும் போதே..
அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லித்தழைகள் தூவவும். கம கம மணத்துடன் ருசியான இளநீர் இரசம் தயார்.
இது அற்புதமான ருசியில் இருக்கும்! காரசாரமான கூட்டு, பொரியல், அப்பளம், வடகங்கள் இதற்கு நல்ல இணை, ஒரு சூடான ஆம்லேட்டுடன் சாப்பிட்டால் இன்னும் ஜோர்.
காளான்/ கார்ன் சிப்ஸ்/ பிரட் துண்டுகளை பொரித்து தூவினால் இதையே சூப் ஆகவும் குடிக்கலாம்!
No comments:
Post a Comment