Monday, November 8, 2021

வெங்காய குருமா

 வெங்காய குருமா


தேவை

பெ.வெங்காயம் - 4
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - 1 டீஸ்பூன்
கடுகு - சிறிதளவு
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள், மஞ்சள் தூள் - சிறிதளவு
மல்லித்தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

🧅➖செய்முறை:

🧅தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

🧅வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

🧅அதனுடன் கடலைப்பருப்பு, வெங்காயம், தக்காளி, மிளகாய், சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

🧅பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்கவிடவும்.

🧅நன்கு வெந்ததும் கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து ஊற்றவும்.

🧅மீண்டும் கொதிக்க தொடங்கியதும் கொத்தமல்லி தூவி கீழே இறக்கி பரிமாறலாம்.

🧅சூப்பரான வெங்காய குருமா ரெடி.



No comments:

Post a Comment