Monday, November 8, 2021

கனியுமோகாதல்_8

 #கனியுமோகாதல்

கனியுமோகாதல்_8

தொடர்கதை: கனியுமோ காதல் அத்யாயம்: 8

தம்பு செட்டித் தெருவில் பத்தடிக்கு பத்தடி இடம்.  இன்டீரியர் ஒர்க் முடிந்து நாளை திறப்பு விழாவிற்கு தயாராகிக் கொண்டிருந்தது ஸ்ரீதரின் ஆஃபீஸ்.

கிட்டத்தட்ட எல்லா மேற்பார்வைகளையும் மைதிலிதான் கவனித்துக் கொண்டிருந்தாள்.

'என்ன மை, அமர்க்களப் படுத்திண்டிருக்க போல இருக்கே?'

'அதெல்லாம் ஒண்ணுமில்ல ஸ்ரீ.  இந்த பத்துக்கு பத்துல எவ்வளவு முடியுமோ அத பண்ணிண்டு இருக்கேன்.'

'ஏய், இது என்ன?  உன் ஃபேவரைட் gகாட்ஸ் காளிகாம்பாளும் ஆஞ்சநேயரும் வந்து உட்கார்ந்தாச்சா முதல்லேயே.'

'நீ வேணா பாரு.  அவா ரெண்டு பேரும் தற்சமயம் இருக்கற பத்துக்கு பத்து ஆஃபீஸை அடுத்த வருஷமே நூறுக்கு நூறா மாத்திடுவா பாரு.  இங்கேந்து பத்து தப்படி வெச்சா காளிகாம்பாள் கோவில்.  டெய்லியே அங்க போயிட்டு ஆஃபீஸுக்கு வா.  அமோகமா வருவ.'

'தேங்க் யூ மை.  உன்னோட விஷ்ஷஸ் எப்போதுமே எனக்கு பலத்த கொடுக்கும்.'

'சரி, டெலிஃபோன் காரன் நம்பர் கொடுத்தானே.  கனக்‌ஷன் கொடுத்தானா?'

'நம்ம சார் மூலமா ப்ரஷர் கொடுத்திருக்கேன்.  சார் யாரோ MP கிட்ட சொல்லியிருக்காராம்.  சித்த நாழி முன்னாடி AE வந்தார்.

மத்யானம் கண்டிப்பா ஆள அனுப்பறேன்னு சொல்லிட்டு போயிருக்கார் ஸ்ரீ.  அத நான் பார்த்துக்கறேன்.  அப்பாவுக்கு எப்படி இருக்கு இப்ப?'

'MV டயாபடிக் ஆஸ்பத்திரியில தான் விட்டுட்டு வந்திருக்கேன்.  ஷுகர் கன்னா பின்னான்னு போயிடுத்து.  நாளைக்கு ஃபங்க்‌ஷன் முடிஞ்சுதான் ஆஸ்பத்திரிக்கு வருவேன்னு ஒரே அடம்.  நான் தான் கம்பெல் பண்ணி ஆஸ்பத்திரியில் சேர்த்தேன்.'

'டாக்டர் என்ன சொன்னா?'

'என்ன சொல்லுவா?  அவருக்கு இருக்கற ஷுகருக்கு எங்க விடப் போறா?  எனிவே, சாயந்திரமா வா.  சொல்லறேன்னு சொல்லியிருக்கா.  பார்க்கலாம்.'

'அப்ப ஏண்டா வந்த இங்க.  நான் தான் இருக்கேனே.  முதல்ல கிளம்பு.  நான் பார்த்துக்கறேன்.'

'அது இல்ல மை.  ரொம்ப டெலிகேட்டா இருக்கு.  எல்லா வேலையையும் உன் கிட்டேயே கொடுத்துண்டிருக்கேனேன்னு.'

'அப்பாவ இன்னிக்கு ஒருவேளை டிஸ்சார்ஜ் பண்ணலைனா என்ன பண்ணப்போற?'

'அதான் மை ஒண்ணும் புரியல.  நாளைக்கு சார் வந்து ரிப்பன் கட் பண்ற வரைக்கும் டென்ஷன் தான்.'

'ஏய் ஸ்ரீ.  நீ ஒண்ணும் கவலப் படாத.  எங்காத்து நம்பருக்கு ஃபோன் பண்ணு.  இன்னிக்கு ராத்திரி டிஸ்சார்ஜ் ஆகலைனா, நாளைக்கு கார்த்தால நான் ஹாஸ்பிடல்ல நான் போய் பார்த்துக்கறேன்.  நீ இங்க கவனிச்சுக்கோ.'

'எல்லாரும் கேட்பாளே நீ எங்கன்னு?  முக்கியமா சாரே தொளச்சு எடுத்துடுவாரே?'

'அப்பா சமாச்சாரத்த அவா கிட்ட சொல்லிண்டிருக்காதே.  எனக்கே தெரியல ஏன் வரலைனுன்னு ஒரு போடு போடு.  ப்ரொஃபஷன்ல நாம சொல்லாத பொய்யா?'

'ஜாக்ரதையா இருங்கோன்னு சொல்லிண்டே இருந்தேன்.  கேட்டாத்தானே.  முந்தாநாள் ஒரு கல்யாணத்துக்குப் போய் நாலு ஜாங்கிரிய மொக்கிட்டு வந்துருக்கார்.'

'விடு ஸ்ரீ.  எனக்கு என்ன வருத்தம்னா, எவ்வளவு ஆசையோட உனக்கு ஒத்தாசை பண்ணி கடைசியில அவர் ஃபங்க்‌ஷனுக்கு வர முடியாம போறதேன்னுதான்.'

'நீ வேணா பக்கத்துல இருக்கற ஹோட்டல்ல சாப்டுட்டு வரையா?  டெலிஃபோன் காரன் வந்தா நான் பார்த்துக்கறேன் மை.'

'நான் டிஃபன் பாக்ஸுல ரெண்டு அடை எடுத்துண்டு வந்திருக்கேன்.  அது போதும்.  வாட் அபௌட் யூ?'

'நான் சாப்டுட்டேன் வரும்போதே.'

அடையை வெல்லததுகள்களோடு சாப்பிட ஆரம்பிக்கிறாள்.

'ஏய் ஸ்ரீ, உன் கிட்ட சொல்ல மறந்துட்டேனே.  கார்த்தால ஜெயஸ்ரீ வந்திருந்தா இங்க.  அவளுக்கு உன் ஆஃபீஸைப் பார்த்தோண்ண தனியா ப்ராக்டீஸ் பண்ணனும்னு ஆசை வந்துடுச்சு.  அதுவும் உன்னோட பண்ணனுமாம் அவளுக்கு.'

'குரு கிட்ட ஜூனியரா அவ சேர்ந்தே ஒரு வருஷம் கூட ஆகலையே.  என்ன பெரிஸா அனுபவம் கெடச்சிருக்கும்?'

'அவளோட அப்பாவும் அட்வகேட் தான.  அவர் ஒரு வேளை தைரியம் கொடுத்திருப்பாராக்கும்'

'நீ எப்ப தனியா ப்ராக்டீஸ் பண்ணப் போறதா இருக்க மை?'

'ஃப்ராங்க்லி ஸ்பீக்கிங், நீ என்னையும் சேர்த்துப்பேன்னு நெனச்சேன் ஸ்ரீ.'

'தப்பா நெனச்சுக்காத.  நானே ஒரு அசட்டு தைரியத்துல இறங்கிட்டேன்.  கொஞ்சம் ஸ்டெடியாயிக்கிறேன்.  அப்புறம் சேர்த்துண்டா போச்சு.'

'எனக்கு தெரியும் ஸ்ரீ.  என் மேல உன்ன விட யாருக்கு அக்கறை இருக்கும்?  நீ சேர்த்துக்கலையேன்னு வருத்தம் இருந்ததென்னவோ வாஸ்தவம் தான்.  ஆனா உனக்கு ஏதோ காரணம் இருந்திருக்கும்னு நெனச்சேன்.'

'காலேஜிலேந்தே நீ எனக்கு ஒவ்வொரு கட்டத்திலும் தெம்பு கொடுத்துண்டு வர.  கண்டிப்பா சீக்கரத்துல ஒண்ணா சேர்ந்து ப்ராக்டீஸ் பண்ணலாம்.  கொஞ்சம் பொறுத்துக்கோ. தப்பா நெனச்சுக்காத.'

'ஏய் ஸ்ரீ.  டோண்ட் ஒர்ரி.  நீ கேட்டதால ஃப்ரேங்க்கா என் மனசுல பட்டது சொன்னேன்.  நீ ஃபீல் பண்ணாத.'

'வேற யாராவது வந்தாளா மை?'

'ஆங். சொல்ல மறந்துட்டேனே.  பூக்கடை போலிஸ் ஸ்டேஷன்லேந்து யாரோ டிஎஸ்பி வந்திருந்தார்.  பூபாளனாமே.  உன்ன நன்னா தெரியுமாமே.  நாளைக்கு எத்தனை மணிக்கு ஃபங்க்‌ஷன்னு கேட்டார்.  சொன்னேன்.'

'எங்க அப்பாவுக்கு தெரிஞ்சவர்.  அப்பா சொல்லியிருப்பார் அவர் கிட்டேன்னு நெனைக்கிறேன்.'

'நல்லது தான் லோகல் போலிஸ்ல ஒரு ஆஃபீஸர் நம்ம கைக்குள்ள இருக்கறது.  இந்த மாதிரி ஏரியாக்கு இதெல்லாம் தேவை தான்.'

டெலிஃபோன் கனெக்‌ஷனுக்கு ஆட்கள் வந்து வேலை முடிந்தவுடன் கிளம்ப ஆயத்தமாகிறார்கள்.

'நாளைக்கு நான் ஹாஸ்பிடல்ல இருந்தா கஷ்டப்படப்போர.  எது எது எங்க இருக்குன்னு சொல்றேன்.  பதட்டப் படாத நாளைக்கு.'

'இருக்கறது நூறு சதுர அடி.  இதுல தேட முடியாதாக்கும்.  நீ கவலப் படாத.'

'மறக்காம அம்பாளுக்கும் அனுமாருக்கும் விளக்கேத்து.  வரும்போது பூ அஞ்சாறு முழம் வாங்கிண்டு வா.  ஊதுபத்தி பாக்கெட் இந்த ட்ராயர்ல இருக்கு.  நன்னா பிரார்த்தனை பண்ணிக்கோ ஸ்ரீ.  நீ ஜெயிக்கணும்.  நான் அதப் பார்க்கணும்.'

'த்தேங்க்ஸுனு சொன்னா கோச்சிப்ப.  பின்ன நீ செய்யற உதவிகளுக்கு என்னதான் சொல்றதுன்னு தெரியல.  அதனால் த்தேங்க்ஸ்.'

இருபத்தொண்ணாம் நம்பரில் அவளை ஏற்றி விட்டு கோர்ட்டில் உள்ள பார்க்கிங் வளாகத்தை நோக்கி அவன்.

தொடரும்....

No comments:

Post a Comment