Friday, March 11, 2022

உடல் சூடு

 உடல் சூட்டால் அவதியா? 2 நிமிடங்களில் உடலை குளர்ச்சியாக்க இதை செய்தால் போதும்

உடல் உஷ்ணம் என்பது நமது உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கும், ஜீரண வேலைகள் நிகழ்வதற்கு முக்கிய சக்தியாக உடல் வெப்பம் அமைகிறது.

அதே நேரத்தில் உங்களுடைய உடல் சூடு அதிகமானால் பல்வேறு நோய்கள் வந்துவிடும். எனவே உடல் உஷ்ணத்தை சமநிலையில் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

அப்படி உடல் சூடு அதிகமானால் எப்படி குறைப்பது என பார்ப்போம்.

👉 நல்லெண்ணெய் வைத்தியம்

ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு நல்லெண்ணெயை எடுத்து அதனை மிதமான சூட்டில் சூடு படுத்த வேண்டும். எண்ணெய் காய்ந்த உடனே அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டு ஆகியவற்றை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் எண்ணெயை அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.


இந்த எண்ணெய் சூடு ஆறினதும், இரு கால்களின் பெரு விரல் நகத்தில் மட்டும் பூசி விடுங்கள்.

2 நிமிடங்கள் கழித்து நகத்தில் தேய்த்த எண்ணெயை கழுவி விட வேண்டும். இதனை செய்யும் போது உங்கள் உடம்பு குளிர்ச்சி அடையும்.

இதை உங்களால் உணரவும் முடியும். 2 நிமிடத்திற்கு மேல் நகத்தில் அந்த எண்ணெயை வைத்திருக்க கூடாது. மட்டுமல்லாது சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை செய்ய வேண்டாம். 

👉 வெந்தயம்

உடல் சூடு அதிகமானால் மற்றும் உடலின் உள் சூட்டை குறைக்க வெந்தயத்தை இரவு ஊற வைத்து அதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். வெந்தயம் ஊற வைத்த நீரையும் குடிக்க வேண்டும்.

👉 எண்ணெய் குளியல்

எண்ணெய் குளியல் மூலம் உங்களுடைய உடல் சூட்டை குறைக்கலாம். வெதுவெதுப்பான குளியல் நீர் உங்களுடைய உடல் உஷ்ணத்தை மிக வேகமாக குறைக்கும். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளியுங்கள்.

👉 பழங்கள்

ஆண்கள் மற்றும் பெண்கள் உங்களுடைய உடல் சூடு அதிகமானால் நீங்கள் உங்களுடைய உணவில் வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளான சிட்ரஸ் பழங்கள் சாத்துக்குடி, ஆரஞ்சு, கிவி, லெமன், கொய்யா, கிரேப் ப்ரூட் போன்ற சிட்ரஸ் பழங்களை அதிக அளவில் சாப்பிட்டு வரும் பொழுது உங்களுடைய உடல் சூடு குறையும்.

பயனுள்ள ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கும், நிபுணர்களுடன் நேரலை கலந்துரையாடல்களுக்கும் Healthy Tips குழுவில் இணைந்திருங்கள்.

நீங்கள் நமது Healthy Tips குழுவில் இன்னும் இணையவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள  இணைப்பு வழியாக உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.

Healthy tips link

https://chat.whatsapp.com/KlqHuavwVgN7O3keXT5U3U

https://wa.me/+919442011097

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment