பூரணம்வைத்த வெண்டைக்காய்
🍱 தேவையானவை
பிஞ்சு வெண்டைக்காய் - 1ஃ4 கிலோ
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1ஃ4 கப்
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 8
புளி - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1ஃ4 கப்
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 8
புளி - சிறிதளவு
🍴 செய்யும் முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி பருப்பு வகைகளையும், மிளகாயையும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
வறுத்த பருப்புகள், மிளகாய் வற்றல், உப்பு, புளி ஆகியவற்றை மிக்சியில் கொரகொரப்பாக பொடிக்கவும்.
வெண்டைக்காயின் முனைகளை வெட்டிவிட்டு, நடுவே லேசாக ஒரு பக்கம் மட்டும் பிளக்கவும்.
வெண்டைக்காய்க்குள் பொடியை அடைக்கவும்.
வாணலியில் சற்று தளர்த்தியாக எண்ணெய் விட்டு வெண்டைக்காய்களை அடுக்கி நன்கு பொரித்து எடுக்கவும்.
No comments:
Post a Comment