Sunday, March 20, 2022

பாலக் பாசிப்பருப்பு

 பாலக் பாசிப்பருப்பு 

 கீரை என்றாலே அனைவருக்கும் ஒரு வெறுப்பு ஏற்படுவது சகஜம் தான். ஆனால் கீரையில் இருக்கும் சத்துக்களைப்போல் வேறு எந்த உணவிலும் சத்துக்கள் இல்லை.

 எனவே பிள்ளைகளுக்கு கீரை வகைகளை சுவையாக சமைத்து தருவது மிக முக்கியம். 

இங்கு குறிப்பிடபட்டிருக்கும் சமையல் முறையில் அனைத்து வகை கீரைகளையும் சுவையாக சமைத்து உண்ணலாம்.

🍱 தேவையானவை: 

பாலக்கீரை - 2 கட்டு
பாசி பருப்பு - 1ஃ2 கப் 
இஞ்சிஃ பூண்டு விழுது - 1ஃ2 ஸ்பூன் 
பூண்டு - 6
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 1
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - சிறுது

🍴 செய்முறை: 

ஒரு வானலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு,பொடியாக நறுக்கிய பூண்டு,பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், மற்றும் பாசி பருப்பை சேர்த்து வதக்கவும்.

இவை அனைத்தும் நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள்,பாலக் கீரை, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சமைத்து இறக்கவும்.



No comments:

Post a Comment