Sunday, March 20, 2022

தேற்றாங்கொட்டை

 தேற்றாங்கொட்டை என்பதைப் பொடி செய்து கலங்கிய நீரில் போட்டால் அது தெளிந்துவிடும் என்பது சங்க காலம் முதல் இன்றுவரை  பின்பற்றப்படுகிறது. ✴️பாட்டிலில் தண்ணீர் விற்பனைக்கு வரும் காலத்துக்கு முன்னரே சுத்தமான நீரைப் பெற இதைப் பயன்படுத்தினர். ✴️பத்து லிட்டர் தண்ணீரில் இரண்டு தேற்றாங்கொட்டைகளைப் போட்டு வைத்தால் 2 மணி நேரத்தில் நீர் சுத்தமானதாகி விடும். 

✴️இது தவிர இது  மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் லேகியம் பசியைத்தூண்டும். இதை சாப்பிட்டால் உடல் மெலிந்தவர்கள் தேறி  விடுவார்கள்.

 ✴️கண்மாய்களில் தேக்கிய நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் இடங்களில் நீரைத் தெளியவைக்க சட்டியிலேயே தேற்றான்கொட்டையைத் தேய்ப்பது வழக்கம். சில நிமிடங்களில் நீர் தெளிந்துவிடும்.



No comments:

Post a Comment