Monday, March 21, 2022

பட்டாணி சாத‌ம்

 பட்டாணி சாத‌ம் 

 🍱 தேவையானவை 

பா‌‌சும‌தி அரிசி - 2 ஆழா‌க்கு
பச்சை பட்டாணி - 2 கோப்பை
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூ‌ண்டு ‌விழுது - 2 தே‌க்கர‌ண்டி 
நெய் - 1 கோ‌ப்பை
எண்ணெய் - 8 தேக்கரண்டி
சோம்பு, ‌கிரா‌ம்பு, ப‌ட்டை, லவ‌ங்க‌ம் - தா‌ளி‌க்க 
பு‌தினா - ‌சி‌றிது
உப்பு - தேவையான அளவு

🍴 செ‌ய்முறை 

பச்சை பட்டாணியை அரை வேக்காடாக வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 

ப‌ச்சை ‌மிளகா‌ய், சோ‌ம்பு, ப‌ட்டை, ‌கிரா‌ம்பு ஆ‌கியவ‌ற்றை அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வெங்காயத்தைத் நறுக்கிக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் கு‌க்கரை வைத்து பாதி நெய்யையும் எண்ணெயையும் ஊற்றி காய்ந்ததும் ‌சி‌றிது சோ‌ம்பு போ‌ட்டு தா‌ளி‌த்து பு‌தினாவையு‌ம், வெங்காயத்தையும், ‌பிறது ப‌ட்டா‌ணியையு‌ம் போ‌ட்டு வத‌க்கவு‌ம். 

கழு‌வி வ‌ை‌த்‌திரு‌க்கு‌ம் அரிசியையு‌ம், ‌இ‌‌‌ஞ்‌சி, பூ‌ண்டு ‌விழுது ம‌ற்று‌ம் மசாலா ‌விழுதை சேர்த்து 4 கோப்பை தண்ணீ‌ர் ஊற்றி உப்பையும் போட்டு நன்றாகக் கிளறிவிட்டு கு‌க்கரை மூ‌டி 2 ‌வி‌சி‌ல் வை‌த்து இற‌க்கவு‌ம்.

ஆ‌வி அனை‌த்து‌ம் போனது‌ம் மூடியை ‌திற‌ந்து நெ‌ய் ‌வி‌ட்டு ‌கிள‌றி ப‌ரிமாறவு‌ம். 




No comments:

Post a Comment