எம்பெருமான் சந்நதிக்கு நேராகக் கருடன் சந்நிதி இருப்பதைக் காணலாம். அலங்காரப் பிரியரான திருமால் அலங்காரம் செய்துகொண்டால் அழகு பார்க்க ஒரு கண்ணாடியாய் எம்பெருமானைக் காட்டும் கண்ணாடியே வேதம்!
வேதாத்மா விஹகேஸ்வர:
கருடன் வேத சொரூபியாகவே இருப்பதால், கருடனையே கண்ணாடியாகக் கொண்டு திருமால் அழகு பார்க்கிறார்.
அதனால் தான் பெருமாள் சந்நதிக்கு நேரே, கண்ணாடி போல் கருடன் சந்நதி இருக்கிறது.....
எம்பெருமானை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது. ஆனால் நம் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று, அதன் பொருளை அறிந்து, அதைப் பின்பற்றி அவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம். எனவே நம்மேல் கருணைகொண்ட வேதமே, எம்பெருமானை நமக்கு எளிதில் காட்டிக்கொடுக்கிறான்.. கருடாழ்வாராக🙏
பட்சிராஜன், வைனதேயன், கருத்மான், சுபர்ணன், தார்க்ஷ்யன், காச்யபி, சுதாஹரன், ககேச்வரன், நாகாந்தகன், விஷ்ணுரதன், புள்ளரசன், புள்ளரையன், மங்களாலயன், பெரிய திருவடி, கலுழன் எனப் பல்வேறு பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார்.*ஆளவந்தார் என்னும் மஹாசார்யரும்...
“தாஸ: ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: என்ற ஸ்லோகத்தில் கருடன் திருமாலுக்குத் தொண்டராகவும் நண்பராகவும் வாகனமாகவும் இருக்கையாகவும் கொடியாகவும் மேல்கட்டாகவும் விசிறியாகவும் இருப்பதாகக் காட்டுகிறார். 🙏
நம்மாழ்வாரும் தமது முதல் ப்ரபந்தத்தில்
(திருவிருத்தம்)
அப்புள்ளின்பின் போன என் தனி நெஞ்சமே என்கிறார் 🙏
திருவடியை வாஹனமாகக்கொண்டு நடத்தியருளும்போது
என்னுடைய நெஞ்சு என்னையும் விட்டு விட்டு அத்திருவடியின் பின்னே தனியாய்ப் போய்விட்டது... என்கிறார் 🙏
ஸ்ரீ மந்நாதன் கண்ணாடி கருடனில் ஆரோஹித்துத் திருவீதிகளில் எழுந்தருளுகிறார். 🙏
No comments:
Post a Comment