ஸ்டஃப்டு சப்பாத்தி
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3,
பச்சை மிளகாய் – 2,
வரமிளகாய் – 5,
உப்பு – ஒன்றரை ஸ்பூன்,
எண்ணெய் – 50 கிராம்,
வெங்காயம் – 2
தனியா தூள் – அரை ஸ்பூன்,
சீரகத்தூள் – அரை ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து
செய்முறை:
🔸முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு, அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
🔸பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைய வேண்டும். இறுதியாக இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலந்து விட்டு, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்க வேண்டும்.
🔸பின்னர் இதனை அப்படியே ஒரு 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு மூன்று உருளைக்கிழங்கை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி, அடுப்பின் மீது வைத்து வேக வைக்க வேண்டும். பின்னர் உருளைக்கிழங்கு வெந்ததும் அதன் தோலை நீக்கி, உருளைக்கிழங்கை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைக்க வேண்டும். - பிறகு அடுப்பின் மீது ஒரு பே வைத்து அதில் மூன்று ஸ்பூன் எண்ணையை ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதனை ஒரு தட்டில் மாற்ற வேண்டும். பிறகு அதே எண்ணெயில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி வைக்க வேண்டும். பின்னர் வரமிளகாயை மிக்ஸி ஜாகிர் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் சேர்க்க வேண்டும். பிறகு அதே கிண்ணத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
🔸 பின்னர் இதனுடன் வறுத்து வைத்துள்ள வெங்காயம், சீரகத் தூள், தனியாத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி திரட்டி, தோசைக்கல்லில் வைத்து இரண்டு புறமும் நன்றாக சூடுபடுத்த வேண்டும். பின்னர் அதன் நடுவே இந்த மசாலாவை வைத்து, சப்பாத்தியைமடித்து விட்டு, எண்ணெயில் சிறிது நேரம் வறுத்தெடுக்க வேண்டும். சப்பாத்தி ரெடி..
No comments:
Post a Comment