அனைவருக்கும் அன்புடன் இனிய காலை வணக்கம் ... !!!
சிம்மாசலம் ஸ்ரீ லக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!
.இந்த கோயில் விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது. மலையடிவாரத்திலிருந்து மேலே செல்வதற்கு வண்டியில் இருபது நிமிடம் பிடிக்கிறது. படியில் ஏறிச் செல்ல விரும்புவோர் 1000 படிகள் எற வேண்டும்.
.விஷ்ணு பக்தனான தன் மகன் பிரகலாதனைக் கொல்ல இரண்யகசிபு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவை பயனற்றுப்போன நிலையில், பிரகலாதனைக் கடலில் வீச ஆணையிட்டான். ஆனால், அவ்வாறு வீசும்போது விஷ்ணு அந்த மலைமீது இறங்கி பிரகலாதனைக் காத்தார். அதுதான் சிம்மாத்ரி (இன்றைய சிம்மாச்சலம்). முனிவர்கள் பக்தர்களின் வேண்டுகோளின்படி வராக நரசிம்மராக அங்கேயே குடிகொண்டார்.
.வராஹ நரசிம்மரின் கட்டளைப்படி இன்றுவரை சந்தன மேனியுடனே நரசிம்மர் காட்சியளிக்கிறார். வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் சந்தன பூச்சு விலக்கப்பட்டு நரசிம்மரின் உண்மை தரிசனம் காட்டப்படுகிறது.
.மற்ற நாட்களில் சந்தனகாப்பிட்ட தரிசனம் தான். சந்தனகாப்பு என்றால் எவ்வளவு தெரியுமா? வைகாச சுக்ல த்ருதீயை, வைகாச பவுர்ணமி, ஜ்யேஷ்ட பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி என்று வருஷத்தின் நான்கு தடவைகள், சுமார் 500 கிலோ சந்தனம் சாத்துகிறார்கள். எல்லா நாட்களும் சந்தனகாப்புடன் காட்சியளிக்கிறார் இந்த வராஹ நரசிம்மர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
.ராமானுஜர் ஸ்ரீ கூர்மத்தில் வைணவத்தை நிலைநாட்டியபின், தெற்கே அடுத்த தலமான சிம்மாசலமான இம் மலையை அடைந்தார். விசாகப்பட்டினத்திற்கு பதினைந்து மைல் தூரத்தில் இருக்கும் மலைக் கோயில் இது. இங்கு கோயில் கொண்டிருக்கும் வராக நரசிம்மர், பின்னாளில் ஹிரண்யகசிபுவை வதைத்தபின் இங்கு பிரஹலாதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வராக முகத்துடன் மனித உடலோடு, சிங்கத்தின் வால்கொண்டு, வராக நரசிம்மனாக காட்சி அளிக்கிறார். பிரஹலாதன் பெருமாள் காத்தருளிய அந்த இடத்தில் நரசிம்மருக்கு கோயிலைக் கட்டிய இடமே சிம்மாசலம்.
.பெருமாளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அருகிலேயே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள். வெளியே வந்து காங்கதாரா அருவி, எங்கிருந்து வருவதென்று தெரியவில்லை. ஐந்து இடங்களில் சிறிய முகத்துவாரம் வழியாக வருவதை தலையில் தெளித்துக்கொள்ளலாம்.
.சனக, சனந்தன, சனாத, சனத்குமாரர்களுக்கும், தேவர்கள், நாரதர், ரிஷிகளுக்கும், இவர் தரிசனமளித்ததாக தலபுராணம் கூறுகிறது. இங்குள்ள நரசிம்ம தீர்த்தம், கங்காதாரா தீர்த்தம் எனும் இரு அருவிகளிலும் நீராடி வராஹநரசிம்மரை வணங்க தீரா நோய்கள் தீர்ந்து பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். உடல் வளமும் உள்ள வளமும் பெற இந்த வராஹ லட்சுமிநரசிம்மர் பேரருள் புரிகிறார்.
No comments:
Post a Comment