Monday, March 21, 2022

பாதாள செம்பு முருகன் ஆலயம்

 இந்த அற்புதமான திருக்கோயில் மன்னர் ஶ்ரீ பாஸ்கரர் சேதுபதி அவர்களுடைய வம்சாவழியில் வந்த மிராசுதார் கந்தமாறன் அவர்கள் தான் இக்கோவிலை கண்டெடுத்தார்... அவர்களின் வழியை சார்ந்தவர்கள் தான் கோவிலை பராமரிக்கின்றனர்...

16 அடி  பாதாளத்தில் இறங்கி சென்று இங்கு இருக்கும் முருகப் பெருமானை வணங்கலாம். ஆதியில் இது ஒரு பழமையான கோவில். அதிலிருந்து கிடைக்கப்பெற்ற 600 வருட பழமையான சிறு மூலவரும் இங்கு காட்சியளிக்கிறார்...

பாதாள செம்பு முருகனின் அருளில் இக்கோயிலின் அறங்காவலர் சித்த அருள் சுவாமி அறிவாதீனம் அவர்களால் உருவாக்கப்பட்டு ஒரு சிட்டிகை மட்டுமே தரப்படும் விபூதியை முருகனை நினைத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். 

அனைத்து பௌர்ணமி மற்றும் அமாவாசை தினத்தில் சுவாமிக்கு பூசப்படுகிற விபூதி பிரசாதமாக மறுநாள் முதல் பக்தர்களுக்கு தரப்படுகிறது. அதைப் பூசிக்கொண்டதும், உடனடியாக அவர்கள் உடலில் ஒருப் புத்துணர்ச்சி உண்டாகும்.

சொத்து, உயர் பதவிகள் பெற,எல்லா வகையான சந்தோசங்கள் அடைய  செவ்வாய் நன்றாக இருக்கும் வேண்டும். இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானின் அருளால் செவ்வாயின் பலம் அதிகரிக்கும்...!

ஶ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயமும், 15 அடி உயர சங்கிலிகருப்புசாமியும், கிழக்கு பார்த்த பைரவரும் இங்கு காட்சித் தருகிறார்கள்...!

நாளை கிருத்திகையும் சஷ்டியும் இணைந்து வரும் செவ்வாய். அரிதான தினம். பக்தர்கள் அனைவரும் வந்து தரிசனம் செய்வீர்.🙏🏻 அனைத்து வரங்களையும் பெறுவீர்.🙏🏻

நடை திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்தே இருக்கும்...!

பஸ் ரூட் 

திண்டுக்கல் To பண்ணைப்பட்டி 6c 

திண்டுக்கல் To ஸ்ரீராமபுரம் 6D

இராமலிங்கம்பட்டி பேருந்து நிலையம் ...பழனி ரோடு ரெட்டியார்சத்திரத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உள்ளது ...! ரெட்டியார்சத்திரத்தில் இருந்து ஸ்ரீராமபுரம் மொயின் ரோடு செல்லும் வழியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இராமலிங்கம்பட்டி என்னும் ஊரில் திருக்கோயில் அமைந்துள்ளது ...!

ஓம் பாதாள செம்பு முருகன் ஆலயம் , போகர் நகர் இராமலிங்கப்பட்டி ரெட்டியார் சத்திரம் 624622

 திண்டுக்கல் மாவட்டம் 9787557011 , 9787577011

judo மணிவேலன் PRO ( secretary ) உலகளாவிய கந்தன் அறக்கட்டளை நிர்வாகி

No comments:

Post a Comment